ஒரு வீட்டையே வாங்கிருவோமே- இந்தியாவில் ரூ.75,00,000 மதிப்புள்ள எல்ஜி ரோலபிள் டிவி: அப்படி என்ன ஸ்பெஷல்?

|

கொரோனா பரவலின் போது தியேட்டர்கள் மூடும் நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக பல்வேறு திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியானது. தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் ஒருசில திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் தான் வெளியிடப்படுகிறது. தியேட்டரில் வெளியாகும் திரைப்படங்களும் குறுகிய காலத்திலேயே ஓடிடியில் வெளியாகி விடுகிறது. இதையடுத்து வீட்டிலேயே தியேட்டர் அனுபவத்தில் திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு ஸ்மார்ட்டிவி என்பது பிரதானம்.

எல்ஜி ரோலபிள் ஸ்மார்ட்டிவி

எல்ஜி ரோலபிள் ஸ்மார்ட்டிவி

ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சிறந்த தரத்துடன் தியேட்டர் அனுபவத்தில் பார்ப்பதற்கு ஸ்மார்ட்டிவி என்பது அவசியம். இந்த குறையை தீர்த்து வைப்பதற்கு எல்ஜி புதிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. அது ரோலிங் அம்சத்துடன் கூடிய புது மாடல் டிவி ஆகும். LG Rollable OLED TV ஆனது தற்போது இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ரோலிங் அம்சம்

ரோலிங் அம்சம்

இந்த டிவியின் ஸ்பெஷல் குறித்து பார்க்கையில், இந்த டிவியானது ஒரு பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்டிவியை பயன்படுத்தாத சமயத்தில் இந்த ரோலபிள் அம்சத்தை இயக்கினால், டிவியின் டிஸ்ப்ளே சுருண்டு அந்த பாக்ஸ்-க்குள் சென்று விடும். தேவைப்படும் பட்சத்தில் இயக்கும் போது டிவி அந்த பாக்ஸ்-க்குள் இருந்து ரோலிங் முறையில் வெளிவரும். ரோலபிள் அம்சத்தோடு இந்தியாவில் வெளியான முதல் ஸ்மார்ட்டிவி இதுதான்.

நத்திங் போன் 1 பர்ஸ்ட்-லுக் வீடியோ: நோட்டிபிகேஷன் வந்ததும் பேக் பேனல் சும்மா பளபளக்கும்!நத்திங் போன் 1 பர்ஸ்ட்-லுக் வீடியோ: நோட்டிபிகேஷன் வந்ததும் பேக் பேனல் சும்மா பளபளக்கும்!

தலைசுற்ற வைக்கும் விலை

தலைசுற்ற வைக்கும் விலை

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் ஆனது தென்கொரிய தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் குறிப்பிட்ட சாதனங்களுக்கு இந்தியா உட்பட உலகின் பல நாட்டு சந்தைகளிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிறுவனம் தற்போது ரோலபிள் ஓஎல்இடி டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பல விலைப் பிரிவில் ஸ்மார்ட்டிவிகள் விற்பனைக்கு கிடைத்தாலும் இதன் விலை ஆனது தலைசுற்ற வைக்கிறது.

யாருக்கான டிவியாக இது இருக்கும்

யாருக்கான டிவியாக இது இருக்கும்

ஸ்மார்ட்டிவிகள் என்பது வீட்டில் பிரதான பயன்பாடாக மாறிவிட்டது. அதோடு பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், ஷாப்பிங் மால் உள்ளிட்ட பல இடங்களிலும் ஸ்மார்ட்டிவிகள் பொறுத்தி விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகள் ஒளிபரப்பப்படும் முறை அதிகரித்து வருகிறது. இடத்தின் தேவைகளை அறிந்து ஸ்மார்ட்டிவி நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு புதுப்புது அம்சங்களோடு சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது எல்ஜி நிறுவனம் பணக்காரர்களின் வாழ்க்கை முறையை கருத்தில் கொண்டு எல்ஜி ரோலபிள் ஓஎல்இடி டிவியை கொண்டு வந்திருக்கிறது.

அசத்தலான அம்சங்களுடன் அசுஸ் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய லேப்டாப்கள்! விலை மற்றும் அம்சங்கள்.!அசத்தலான அம்சங்களுடன் அசுஸ் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய லேப்டாப்கள்! விலை மற்றும் அம்சங்கள்.!

தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் மட்டுமே விற்பனை

தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் மட்டுமே விற்பனை

எல்ஜி ரோலபிள் டிவி நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த டிவி ஆனது மும்பையில் உள்ள க்ரோமோ ஸ்டோரில் விற்பனைக்கு கிடைக்கிறது. நிறுவனம் படிப்படியாக வரும் நாட்களில் நாடு முழுவதும் உள்ள விற்பனை நிலையங்களில் ஸ்மார்ட்டிவியை விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோலபிள் டிவி விலை ரூ.75,00,000

ரோலபிள் டிவி விலை ரூ.75,00,000

தங்களது ஸ்மார்ட்டிவி மேம்படுத்த விரும்பும் அனைத்து தரப்பினருக்கும் இந்த டிவி கட்டுப்படியாகாது. காரணம் இந்த சாதனத்தின் விலை ரூ.75,00,000 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.இந்த டிவியில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று பார்க்கலாம்.

Android vs iPhone: ஆண்ட்ராய்டை விட ஐபோன் ஏன் சிறந்தது தெரியுமா? காரணம் தெரிஞ்சு ஐபோன் வாங்குங்க..Android vs iPhone: ஆண்ட்ராய்டை விட ஐபோன் ஏன் சிறந்தது தெரியுமா? காரணம் தெரிஞ்சு ஐபோன் வாங்குங்க..

ஆடம்பரத் தயாரிப்பு மாடல்

ஆடம்பரத் தயாரிப்பு மாடல்

இந்த சாதனம் குறித்து எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்தியாவின் ஹோம் என்டர்டெயின்மென்ட் இயக்குனர் ஹக் ஹியூன் கிம் கூறிய கருத்துகளை பார்க்கலாம். "இது ஒரு உண்மையான ஆடம்பரத் தயாரிப்பு மாடல் ஆகும். ஒரு தொலைக்காட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த டிவி எடுத்துரைக்கும். இந்த தனித்துவமான டிவியானது வித்தியாசமான பயனர் அனுபவத்தை வழங்கும். இந்த ப்ரீமியம் டிவி தான் எல்ஜி-யின் தலைமை மாடல் ஆகும்." என தெரிவித்தார்.

எல்ஜி சிக்னேச்சர் ஓஎல்இடி ஆர் டிவி சிறப்பம்சங்கள்

எல்ஜி சிக்னேச்சர் ஓஎல்இடி ஆர் டிவி சிறப்பம்சங்கள்

இவ்வளவு விலை இருக்கிறதே அப்படி என்ன அம்சங்கள் இந்த டிவியில் இருக்கும் என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் வருகிறது அல்லவா. வாருங்கள் இதன் அம்சத்தை விரிவாக பார்க்கலாம். இந்த டிவி ஆனது லிக்விட் ஸ்மூத் ஆதரவு கொண்ட 65 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இதில் சுய விளக்கு (Self Lighting) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது எல்ஜி நிறுவனத்தின் α9 Gen 4 AI செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும் முதல் டிவி இதுதான் என கூறப்படுகிறது. இந்த டிவியின் சவுண்ட் எப்படி இருக்கும் தெரியுமா.

வியக்க வைக்கும் சுவாரஸ்யம்- 36,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் வைஃபை சேவை: சாத்தியமானது எப்படி தெரியுமாவியக்க வைக்கும் சுவாரஸ்யம்- 36,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் வைஃபை சேவை: சாத்தியமானது எப்படி தெரியுமா

டால்பி விஷன் ஐக்யூ ஆதரவு

டால்பி விஷன் ஐக்யூ ஆதரவு

இந்த ஸ்மார்ட்டிவி டால்பி அட்மாஸ் ஸ்பேஷியல் ஒலி அனுபவத்தை வழங்குகிறது. இதற்காக இந்த ஸ்மார்ட்டிவியில் டால்பி விஷன் ஐக்யூ ஆதரவு இடம்பெற்றுள்ளது. அதேபோல் கேமிங் அனுபவத்தை மேம்படுத்தி வழங்க இந்த ஸ்மார்ட்டிவியில் K 120fps மற்றும் G-Sync ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

எல்ஜி ரோலபிள் டிவி ஏன் இவ்வளவு அதிக விலை?

எல்ஜி ரோலபிள் டிவி ஏன் இவ்வளவு அதிக விலை?

மேலே வழங்கப்பட்டுள்ள அம்சத்தில் ஒரு சிலவற்றை தவிர வேறு ஒன்றும் அப்படி குறிப்பிடத்தக்க வகையில் இல்லையே என்று சிந்தித்தால். நீங்கள் யூகிப்பது சரிதான். பிறகு ஏன் இந்த டிவிக்கு இவ்வளவு விலை என்று கேள்வி வருகிறதா. அதற்கு காரணம் இதன் ரோலிங் அம்சம் மட்டும் தான். எல்ஜி ஓஎல்இடி டிவிகளில் வழங்கப்படும் அதே காட்சி அனுபவத்தை தான் இந்த டிவியும் வழங்குகிறது. 2020 முதல் எல்ஜி நிறுவனம் அதன் ப்ரீமியம் ஸ்மார்ட்டிவிகளில் வழங்கும் பெரும்பாலான அம்சங்களையே இந்த டிவியும் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

HDMI 2.1, 4K தெளிவுத்திறனுடன் 120Hz புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, டால்பி விஷன், அமேசான் அலெக்சா, கூகுள் அசிஸ்டென்ட் ஆதரவு மற்றும் Dolby Atmos ஆடியோ போன்ற பிற உயர்நிலை அம்சங்களை இந்த ரோலபிள் டிவி கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
LG Rollable OLED TV Now Available in India For Purchase: Price Rs.75 Lakh

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X