மனித கணினி என அழைக்கப்பட்ட சகுந்தலா தேவி காலாமானார்!

Written By:

மனித கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படும் கணித மேதை சகுந்தலா தேவி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் நேற்று காலமானார். அவருக்கு வயது 80.

கணித மேதையான சகுந்தலா தேவிக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக அவர் கடந்த 2 வாரங்களாக பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.15 மணிக்கு இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மனித கணினி என அழைக்கப்பட்ட சகுந்தலா தேவி காலாமானார்!

இவர் சிறிய வயது முதலே கணிதத்தில் மிகுந்த ஆர்வம்கொண்டவர். கடந்த 1971ம் ஆண்டில் 201 இலக்கங்கள் கொண்ட எண்ணின் 23வது வர்க்கமூலத்தை மனக்கணக்குப் போட்டு தெரிவித்தார். பின்னர் 1980ம் ஆண்டு ஜூன் மாதம் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் கம்ப்யூட்டர் துறையில் தலா 13 இலக்கம் கொண்ட 7,686,369,774,870 x 2,465,099,745,779 ஆகிய எண்களை வெறும் 28 வினாடிகளில் பெருக்கி விடை அளித்தார்.

இயக்குனர் சேரன் இணையதளம் துவங்கினார்!

ஏராளமான கணிதம் சார்ந்த நூல்களை எழுதியவர் சகுந்தலா தேவி. அவரது கணித திறமைக்காக அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். இவரது புத்தகத்தின் அடிப்படையிலேயே பல்வேறு ஐடி நிறுவனங்கள் நேமுகத்தேர்வை நடத்துகின்றன என்பதை துறைசார்ந்தோர் நன்கு அறிவர்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot