இயக்குனர் சேரன் இணையதளம் துவங்கினார்!
தமிழ் இயக்குனரும், நடிகருமான சேரன் புதிதாக இணையதளம் ஒன்றை துவங்கியுள்ளார். தன்னைப்பற்றிய தகவல்களை தனது ரசிகர்களிடம் பகிரும் வகையில் இதை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Click Here For New Smartphone Gallery
இயக்குனர் சேரனாக ஆட்டோகிராஃப் உள்ளிட்ட சில படங்களில் நல்ல கதைகளை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கி, ரசிகர்கள் மனதில் நல்ல இயக்குனர் என பெயரெடுத்தவர். யுத்தம் செய், சென்னையில் ஒரு நாள் போன்ற படங்களில் நல்ல நடிகனாக அறியப்பட்டவர். புதிதாக இவர் இயக்கியிருக்கும் ஜே.கே எனும் நண்பனின் கதையும் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
செல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...
இந்நிலையில் தான் இவர் தனக்கான இணையதளத்தை தொடங்கியிருக்கிறார். www.directorcheran.com என்பதுதான் தளத்தின் முகவரி.
இம்மாதிரி தளத்தை நடத்துவதற்கு உங்களுக்கு நேரம் இருக்கிறதா என கேட்கப்பட்டதற்கு "இதற்காக என்னிடம் ஒரு குழு உள்ளது. அவர்கள் தளத்தை கவனித்துக்கொள்வார்கள்" என்றிருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி...சில ஃபேஸ்புக் பக்கங்கள்...


Click it and Unblock the Notifications








