பேரழிவு : அடுத்த நொடி கூட ஏற்படலாம்..!

|

புயல், சூறாவெளி, பூகம்பம், சுனாமி என ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு இயற்கை பேரழிவு நடந்து கொண்டே தான் இருக்கின்றது. சில இடங்களில் கணிக்கப்பட்டதை விட அதிக நிகழ்வுகளும், பாதிப்புகளும் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டுக்கு, 2014-ஆம் ஆண்டு நடக்கலாம் என்ற கணிப்பின்படி நிகழ்ந்த ஐஸ்லாந்தில் உள்ள பரோர்புங்கா எரிமலை வெடிப்பு..!

உலகம் 'இப்படித்தான்' அழியும் - விஞ்ஞானிகள் விளக்கம்..!

அப்படியாக புவியியல் அறிவியலாளர்களும், விஞ்ஞானிகளும் குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் 'நிகழலாம்' என்று கணிக்கப்பட்ட இயற்கை பேரழிவுகள் தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளன.

அடுத்த நொடி :

அடுத்த நொடி :

கணிக்கப்பட்டுள்ள சில பேரழிவுகள் அடுத்த நொடி தொடங்கி 2100-ஆம் வரையிலாக எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் முக்கியமாக, வரலாறு காணாத சுனாமி எந்த நொடியிலும் ஏற்படலாம் என்றும் கணிக்கபட்டுள்ளது.

காட்டுத்தீ :

காட்டுத்தீ :

2015 தொடங்கி 2050-ஆம் ஆண்டுக்குள், அமெரிக்காவில் பலமுறை பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சுற்றுசூழல் விஞ்ஞானிகள் :

சுற்றுசூழல் விஞ்ஞானிகள் :

ஹார்வர்ட் ஸ்கூல் பொறியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் மையத்தை சேர்ந்த சுற்றுசூழல் விஞ்ஞானிகள் இதை கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 மடங்கு :

3 மடங்கு :

கடந்த 1999-ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்காவில் ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்கள், 3 மடங்கு அதிகரித்து உள்ளது என்கிறது அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்.

நிலநடுக்கம் :

நிலநடுக்கம் :

2015 தொடங்கி 2065-ஆம் ஆண்டுக்குள், சிலி நாட்டில் நீள் ஊடுருவு நிலநடுக்கம் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

காரணம் :

காரணம் :

கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி, 8.2 என்ற ரிக்டர் அளவில் அங்கு நிகழ்ந்த நிலநடுக்கம் தான் அடுத்த நிகழப்போகும் நிலநடுக்க கணிப்பிற்க்கு காரணமாகும்.

இரட்டை நிலநடுக்கம் :

இரட்டை நிலநடுக்கம் :

2017-ஆம் ஆண்டில், ஜப்பானில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஏற்பட்டத்தை போன்றே பயங்கரமான நிலநடுக்கம் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 பேராசிரியர் மசாக்கி கிமுரா :

பேராசிரியர் மசாக்கி கிமுரா :

நில அதிர்வு மற்றும் நீர்மூழ்கி நிலவியல் துறையில் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஆன டாக்டர். மசாக்கி கிமுரா என்பவர் இதை கணித்துள்ளார்.

ரிக்டர் அளவு :

ரிக்டர் அளவு :

மேலும் பேராசிரியர் மசாக்கி கிமுரா கூற்றின்படி ஏற்படப்போகும் நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு கோள் 9.0 இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 எரிமலை சீற்றம் :

எரிமலை சீற்றம் :

2015 தொடங்கி 2053-ஆம் ஆண்டுக்குள், ஜப்பானில் உள்ள மவுண்ட் ஃபூஜி எரிமலையில் சீற்றம் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நிலை :

நிலை :

ஜப்பானில் உள்ள 110 எரிமலைகளில், 20 எரிமலைகள் எப்போது வேண்டுமானால் என்கிற நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

75 ஆயிரம் மக்கள் :

75 ஆயிரம் மக்கள் :

அதில் கணிக்கப்பட்டுள்ள 12,380 அடி உயரம் கொண்ட எரிமலையான மவுண்ட் ஃபூஜியில் சீற்றம் ஏற்பட்டால் சுமார் 75 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிலநடுக்கம்-சுனாமி :

நிலநடுக்கம்-சுனாமி :

2015 தொடங்கி 2065-ஆம் ஆண்டுக்குள், ஓரிகனில் நிலநடுக்கம் - சுனாமி பிளவு ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

150 வல்லுநர்கள் :

150 வல்லுநர்கள் :

ஓரிகன் நாட்டை சேர்ந்த நிலஅதிர்வு பாதுகாப்பு கொள்கை ஆலோசனை ஆணையத்தின் 150 வல்லுநர்களின் கணிப்புபடி அங்கு நிலநடுக்கத்தோடு சேர்த்து சுனாமியும் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

நில அதிர்வு :

நில அதிர்வு :

ரிக்டர் அளவு கோளில் சுமார் 8.0 முதல் 9.0 வரை நில அதிர்வு பதிவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 10,000 மக்கள் :

சுமார் 10,000 மக்கள் :

இன்னும் 50 ஆண்டுகளில் நிகழக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ள இந்த இயற்கை பேரழிவு ஏற்பட்டால், சுமார் 10,000 மக்கள் வரை கொல்லப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூழ்கடிப்பு :

மூழ்கடிப்பு :

2015 தொடங்கி 2100-ஆம் ஆண்டுக்குள், அமெரிக்க கிழக்கு கடற்கரை மூழ்கடிக்கப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடலுக்குள் :

கடலுக்குள் :

தற்போதைய கடல் மட்ட அளவின்படி, 2050-ஆம் ஆண்டுக்குள்ளேயே நகரின் முக்கிய பகுதிகள் கடலுக்குள் சென்று விடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

72 சென்டிமீட்டர் :

72 சென்டிமீட்டர் :

மேலும் 2050-ஆம் ஆண்டுக்குள், அமெரிக்காவின் நியூயார்க் கடல் மட்ட அளவு சுமார் 72 சென்டிமீட்டர் வரை உயரலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது

வரலாறு காணாத பெரும் சுனாமி :

வரலாறு காணாத பெரும் சுனாமி :

குறிப்பிட்ட காலவரையறைக்குள் ஏற்படலாம் என்று கணிக்க முடியாத கரீபியன் சுனாமி.

கும்ப்ரே வீஜா எரிமலை :

கும்ப்ரே வீஜா எரிமலை :

கேனரி தீவில் உள்ள கும்ப்ரே வீஜா எரிமலை தான் இதுவரை ஏற்பட்ட சுனாமிகளிலேயே மிகவும் பெரிய சுனாமியை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சுனாமி பேரலைகள் :

சுனாமி பேரலைகள் :

இந்த இயற்கை பேரழிவு நடந்தால், அதனால் ஏற்படும் சுனாமி பேரலைகள் சுமார் 800 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து கரையை அடையும் போது சுமார் 330 அடி உயர அலைகளாய் எழும்பும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தாக்கும் :

தாக்கும் :

இந்த சுனாமி இங்கிலாந்து, ஃப்ளோரிடா, கரீபியன் ஆகிய பிரதேசங்களையும் அதிகம் தாக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மாபெரும் நிலநடுக்கம் :

மாபெரும் நிலநடுக்கம் :

2015 தொடங்கி 2045-ஆம் ஆண்டுக்குள், கலிபோர்னியாவில் மாபெரும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவு :

ரிக்டர் அளவு :

மேலும் அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 8.0 என்று பதிவாகலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

30% வாய்ப்பு :

30% வாய்ப்பு :

எதிர்பார்ககப்படும் இந்த நிலநடுக்கமானது அடுத்த 7 ஆண்டுகளுக்குள் நிகழ 30% வாய்ப்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மாபெரும் சூரியப்புயல் :

மாபெரும் சூரியப்புயல் :

2015 தொடங்கி 2025-ஆம் ஆண்டுக்குள், மாபெரும் சூரியப்புயல் பூமியை தாக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வாய்ப்பு :

வாய்ப்பு :

கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட சூரியப்புயல்களை ஆய்வு செய்ததின் மூலம், அடுத்த 10 ஆண்டுகளில் சூரிய புயல் ஏற்படுவதற்க்கான வாய்ப்பு 12% என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

பூமியை தாக்கினால் :

பூமியை தாக்கினால் :

சூரியப்புயல் ஏற்பட்டு பூமியை தாக்கினால் ரேடியோ, ஜிபிஎஸ், செயற்கைகோள் தொடர்பு மட்டுமில்லாது பூமியில் உள்ள லட்சக்கணக்கான எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களும் பாதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
அடுத்த நொடி தொடங்கி எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று கணிக்கப்படும் இயற்கை பேரழிவுகள். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X