சூரிய புயல் தாக்கினால் இதுதான் உலகின் கதி..!?

Posted By:

புயல், சூறாவெளி போன்றவைகள் எவ்வளவு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நம்மில் பலர் அனுபவப்பட்டு இருப்போம். ஆனால், நாம் யாருமே கனவில் கூட அனுபவிக்க விரும்பாத ஒரு புயல் இருக்கிறது - அது தான் சூரியப்புயல் (Solar Strom)..!

பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் புயலே அப்பகுதியின் கட்டமைப்பு, போக்குவரத்து, மின்சாரம், தொடர்பு ஆகியவற்றை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் போது, சூரிய புயல் ஏற்பட்டால் உலகின் கதி என்னவாகும்..?

அப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டால் இதுவரை உலகம் கண்டுப்பிடித்து வைத்திருக்கும் அதிநவீன தொழில்நுட்பங்கள் என்னென்ன செய்யும்..? அவைகள் உலகை காக்குமா..? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தான் இந்த கட்டுரை..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நிலை :

நிலை :

உலகம் பெருமளவு தொழில்நுட்பதையே நம்பி இருக்கிறது என்ற நிலையில், விண்வெளி வானிலை (Space weather) சார்ந்த துறையிலும் அதே நிலை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் :

தாக்குதல் :

அப்படியிருக்க, விண்வெளி வானிலை மூலம் ஏற்படப்போகும் மோசமான தாக்குதல்களை தொழில்நுட்பத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமே தவிர, தடுக்க முடியாது என்பது தான் நிதர்சனம்.

தொழில்நுட்பம் :

தொழில்நுட்பம் :

அப்படியாக சூரிய புயல், பூமியை தாக்கினால் முதலில் அழிவடைவது நம் தொழில்நுட்பம் தான். பின் ஒட்டுமொத்த உலகமும் இருளில் மூழ்கும் என்கிறது விண்வெளி வானிலை கணிப்பு மையம் (Space Weather Prediction Center).

ஆரம்பம் :

ஆரம்பம் :

சூரிய புயல் என்பது சூரிய கிளரொளியில் (Solar Flare) இருந்து ஆரம்பிக்கும். சூரிய கிளரொளி என்பது சூரியனில் ஏற்படும் மிகப்பெரிய வெடிப்பாகும்.

சூரிய ஆற்றல் :

சூரிய ஆற்றல் :

அந்த வெடிப்பின் தாக்கமானது சூரிய ஆற்றல் மற்றும் துகள்களை விண்வெளியில் சிதற விடும். அந்த சிதறலில் எக்ஸ்-ரே கதிர்கள், மின்னூட்டத் துகள்கள் (charged particles), காந்த பிளாஸ்மா (magnetized plasma) ஆகியவைகளும் அடங்கும்.

கிளாஸ் வகைகள் :

கிளாஸ் வகைகள் :

சி கிளாஸ் சூரிய கிளரொளி (C Class solar flare) மற்றும் எம் கிளாஸ் (M Class) எனப்படும் சூரிய கிளரொளிகள் பூமிக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது.

ஹைட்ரஜன் குண்டுகள் :

ஹைட்ரஜன் குண்டுகள் :

ஆனால், எக்ஸ் கிளாஸ் (X Class) சூரிய கிளரொளி ஏற்பட்டால் 1,000,000,000 ஹைட்ரஜன் குண்டுகள் ஏற்படுத்தும் பாதிப்பை பூமியில் உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 வாய்ப்பு :

வாய்ப்பு :

19-ஆம் நூற்றாண்டின் இடையில் ஏற்பட்ட சூரிய புயலுக்கு பின் உலகை இதுநாள்வரை சூரிய புயல் எதுவும் தாக்கவில்லை என்கிற போதிலும் விண்வெளி வானிலையை ஆராயும் விஞ்ஞானிகள் சிலர் சூரிய புயல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக நம்புகின்றனர்.

சூரிய கிளரொளி :

சூரிய கிளரொளி :

இதுவரை அளக்கப்பட்ட சூரிய கிளரொளிகளிலேயே மிகவும் பலமானது எக்ஸ்-28 சூரிய கிளரொளிதான் என்பதும், அது கடந்த 2003-ஆம் ஆண்டு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாதித்து விடாது :

பாதித்து விடாது :

சூரிய வெடிப்பு சம்பவம் சூரிய செயல் பாடுகளில் மாற்றங்களை கொண்டு வருமே தவிர தொழில்நுட்பங்களை பெரிதாக பாதித்து விடாது என்கிறார் நாசா விஞ்ஞானியான ஜோ கூர்மன் (Joe Gurman).

செயற்கைகோள் :

செயற்கைகோள் :

மேலும் அவர் சூரிய ரேடியோ கதிர்கள் செயற்கைகோள் தொடர்புகளை வேண்டுமானால் பெரிய அளவில் பாதிக்கலாம் என்கிறார்.

மின்னூட்டத் துகள்கள் :

மின்னூட்டத் துகள்கள் :

சூரியனில் இருந்து வெளிப்படும் மின்னூட்டத் துகள்கள் ஆனது விண்வெளியில் இருக்கும் மனிதர்களின் ஆரோக்கியத்தை பெரிய அளவில் பாதிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

12 மணி நேரம் :

12 மணி நேரம் :

மேலும் சூரியனில் இருந்து வெளிப்படும் ஆபத்தான மின்னூட்டத் துகள்கள், பூமியை வந்தடைய 12 மணி நேரம் முதல் பல நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புகைப்படங்கள் : நாசா, கூகுள்.

English summary
சூரிய புயல் தாக்கினால் உலகம் என்னவாகும்..? மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot