லீக்ஸ் அம்சங்கள் : சாம்சங் கேலக்ஸி நோட் 8.!

Written By:

கடந்த ஆண்டு வெளியான சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 மாடல் அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய சோதனையாக அமைந்தது. இத்தனை வருடங்கள் கட்டி காப்பாற்றிய புகழ் ஒரே மாடலில் மங்கியது.

லீக்ஸ் அம்சங்கள் : சாம்சங் கேலக்ஸி நோட் 8.!

ஏராளமான பணம் நஷ்டம் மட்டுமின்றி மிகப்பெரிய கெட்ட பெயரை இந்த மாடல் சம்பாத்தித்து கொடுத்ததால் இந்த மாடல் வெளிவந்த கால இடைவெளியை ஒரு கருப்பு நாட்களாக கூறலாம். எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த தவறு இனியும் எந்த காரணத்தை முன்னிட்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தனது அடுத்த மாடலான கேலக்ஸி நோட் 8 மாடலை பார்த்து பார்த்து உருவாகி வருகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 8 மாடல் குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவல்களோ அல்லது வதந்திகளோ வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது கேலக்ஸி நோட் 8 மாடல் குரித்து அந்நிறுவனத்தின் மொபைல் பிரிவு தலைவர் DJ Koh என்பவர் சமீபத்தில் கூறியபோது கேலக்ஸி நோட் 8 மாடலை நிச்சயம் பாதுகாப்பான, நவீன டெக்னாலஜியுடன் கொண்டு வருவேன்' என்று கூறியுள்ளார். இவரது இந்த கூற்று சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த நற்செய்தியாக பார்க்கப்படுகிறது.

லீக்ஸ் அம்சங்கள் : சாம்சங் கேலக்ஸி நோட் 8.!

இந்நிலையில் சீன இணையதளம் ஒன்று கேலக்ஸி நோட் 8 குறித்து ஒரு ஸ்கெட்சை கசிய விட்டுள்ளது. இந்த ஸ்கெட்ச் படி ஒருசில விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. நமது ஊகிப்பு ஒருவேளை தவறாகவும் இருக்கலாம், இருப்பினும் இதற்கு முந்தைய மாடலின் ஸ்கெட்ச் மற்றும் இந்த மாடலின் ஸ்கெட்ச் ஆகியவற்றை ஒப்பிட்டுதான் இந்த ஊகங்கள் எழுந்துள்ளன என்பதால் ஏறக்குறைய சரியாக இருக்க வாய்ப்பு உள்ளது.

இதுதான் உலகின் முதல் 5ஜி டெக்னாலஜி ஸ்மார்ட்போன்.!

இந்த ஸ்கெட்ச் மூலம் நாம் அறிந்து கொள்வது என்னவெனில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 மாடலில் மேல் இருந்து கீழ் வரை உற்று நோக்கியதில் இதுவொரு அல்ட்ர தின் அல்லது பெஸல் லெஸ் டிஸ்ப்ளே மாடலாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது. அதேபோல் முன்பக்கம் செல்பி கேமிராவும், அதனுடன் ஏதாவது ஒரு சென்சாரும் அமைந்திருக்கும்

அதே நேரத்தில் கேலக்ஸி நோட் 8 மாடலின் மேல்புறத்தில் ஸ்பீக்கர் மற்றும் ஐஆர் பிளாஸ்டர் இருக்கலாம். கீழ்ப்பக்கத்தில் மற்றொரு ஸ்பீக்கர், யுஎஸ்பி போர்ட், 3.5 மிமீ ஆடியோ போர்ட் மற்றும் எஸ்-பென் ஸ்லாட் ஆகியவை அமைந்திருக்கலாம். மேல், கீழ் புறங்களை அடுத்து வலது மற்றும் இடது பக்கங்களில் வால்யூம் அட்ஜெஸ்ட்மெண்ட், பவர் படன் மற்றும் ஒரு எக்ஸ்ட்ரா பட்டனும் உள்ளது. அனேகமாக இந்த பட்டன் பிக்ஸ்பிக்கு உதவும் வகையில் இருக்கலாம்

13 எம்பி டூவல் கேமரா கொண்டு அதிரடியாக களம் காணும் டூவல் 5.!

மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 8 மாடல் 6.4 இன்ச் சூப்பர் அமோ LED 4K டிஸ்ப்ளே ஆக இருக்கும். அத்துடன் ஸ்னாப்டிராகன் 835 அல்லது 9 சீரிஸ் எக்ஸினோஸ் சிப்செட் இருக்கும். இந்த சிப்செட்டுக்கள் வெளியாகும் இடங்களை பொறுத்து மாறுபடலாம். மேலும் இந்த மடலில் 6GB ரேம் மற்றும் 256 GB ஸ்டோரேஜ் இருக்கும்

மேற்கண்ட விஷயங்கள் லீக் ஆன தகவல்களில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இது தவறாகவும் சரியாகவும் இருக்கலாம், எனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை மீதி தகவல்களை பெற காத்திருப்போம்English summary
Samsung Galaxy Note 8 design and specifications revealed.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot