ரூ.199 க்கு 18 நாள்.. அதே ரூ.199 க்கு ரூ.4000 சந்தா.. ரூ.199 க்கு 28 நாள்.. Jio Vs Airtel Vs Vi எது பெஸ்ட்?
இந்தியாவில் உள்ள ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடஃபோன் ஐடியா (Vi) ஆகிய மூன்று தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுமே, தங்கள் நுகர்வோருக்கு ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகின்றன. இது நாட்டில் உள்ள பெரும்பாலான நுகர்வோர்கள் எளிதில் அணுகக்கூடிய ஒரு விலையாகும்.
ஆனால் இங்கே சுவாரசியமான விஷயம் என்னவென்றால் - ஒவ்வொரு நிறுவனத்தின் ரூ.199 திட்டமும் ஒன்றுக்கொன்று வேறுபடுகிறது. ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களின் ரூ.199 திட்டம் பெரிய அளவில் வேறுபடவில்லை, இரண்டுமே ஏறக்குறைய ஒரே மாதிரியான நன்மைகளையே வழங்குகின்றன. ஆனால், ஜியோ ரூ.199 திட்டம் முற்றிலும் வேறுபட்டது. உண்மையில் யார் வின்னர்? எது பெஸ்ட் ரீசார்ஜ்?

ரிலையன்ஸ் ஜியோ ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் 18 நாட்கள் சேவை செல்லுபடியுடன், தினசரி 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் வருகிறது. இந்த திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான சராசரி தினசரி செலவு ரூ.11.06 ஆகும். கூடுதல் பலன்களில் ஜியோ டிவி மற்றும் ஜியோஏஐகிளவுட் ஆப்கள் உள்ளன.
வோடபோன் ஐடியா ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்: வோடபோன் ஐடியாவின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டமானது 2ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்கள் சேவை செல்லுபடியுடன் வருகிறது. பயனர்களுக்கு 300 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற வாய்ஸ் காலிங் ஆகியவைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. கூடுதல் நன்மையாக நுகர்வோருக்காக விஐ மூவிஸ் & டிவி சந்தா கிடைக்கும்.
பார்தி ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்: பார்தி ஏர்டெல்லின் ரூ. 199 ப்ரீபெய்ட் திட்டமானது 28 நாட்கள் சேவை செல்லுபடியுடன் வருகிறது. இதில் மொத்தம் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவைகள் கிடைக்கும். கூடுதல் பலன்களில் ரூ.4,000 மதிப்புள்ள 12 மாத அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தா கிடைக்கும். மேலும் ஏர்டெல்லுடன் 'தி சேஃப் நெட்வொர்க்' அனுபவமும், பயனர்களுக்கு இலவச ஹலோடியூன்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தாவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
யார் வின்னர்? எது பெஸ்ட் ரீசார்ஜ்? சிறந்த திட்டத்தை தேடும் பயனர்களுக்கு இங்கே ஒரு தெளிவான வேறுபாடு உள்ளது. உங்களுக்கு அதிக டேட்டா தேவைப்பட்டால், ஜியோ சிறந்த தேர்வாகும். இருப்பினும், ரூ.4,000 மதிப்புள்ள அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியத்தை ஒரு வருடத்திற்கு இலவசமாக பயன்படுத்த விரும்பினால், ஏர்டெல்லின் ரூ.199 திட்டம் சிறந்தது. அனைத்து திட்டங்களும் வரம்பற்ற வாய்ஸ் காலிங்கை வழங்குகின்றன. உங்களுக்கு அதிக சேவை காலம் தேவைப்பட்டால் கூட, விஐ மற்றும் ஏர்டெல் திட்டங்கள் சிறந்த தேர்வுகளாகும்.
ஏர்டெல் தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை, இந்நிறுவனம் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக 'ப்ரையாரிட்டி போஸ்ட்பெய்ட்' சேவைகளை (Priority Postpaid services) அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த 'ப்ரையாரிட்டி போஸ்ட்பெய்ட்' சேவை ஆனது, வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் 5ஜி நெட்வொர்க்கிற்கான (Premium 5G network) அணுகலை வழங்கும்.
இந்த சேவையின் கீழ் பயனர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக, ஏர்டெல் நிறுவனமானது அடிப்படையில் நெட்வொர்க் ஸ்லைசிங் தொழில்நுட்பத்தை (Network slicing technology) பயன்படுத்தும். இது தற்போதைக்கு ஏர்டெல் நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கிறது. இந்த சேவையின் கீழ் ரூ.449 முதல் தொடங்கி ரூ.1749 வரை செல்லும் 5 புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
1. ரூ.449 + ஜிஎஸ்டி - தனிநபர் திட்டம்
2. ரூ.699 + ஜிஎஸ்டி - 2 பேர் கொண்ட பேமிலி திட்டம்
3. ரூ.999 + ஜிஎஸ்டி - 3 பேர் கொண்ட பேமிலி திட்டம்
4. ரூ. 1199 + ஜிஎஸ்டி - 4 பேர் கொண்ட பேமிலி திட்டம்
5. ரூ. 1749 + ஜிஎஸ்டி - 5 பேர் கொண்ட பேமிலி திட்டம்
இந்த திட்டங்களின் நன்மைகளை பற்றி இன்னும் விரிவாக அறிய, இது குறித்த பிரத்யேக செய்தி கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications