Jio லேட்டு.. 5 புதிய பிரீமியம் 5ஜி பிளான்களை அறிமுகம் செய்த Airtel.. ரூ.449-க்கு டேட்டா, வாய்ஸ், SMS, OTT, பல!
பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனம், இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக 'ப்ரையாரிட்டி போஸ்ட்பெய்ட்' சேவைகளை (Priority Postpaid services) அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த 'ப்ரையாரிட்டி போஸ்ட்பெய்ட்' சேவை ஆனது, வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் 5ஜி நெட்வொர்க்கிற்கான (Premium 5G network) அணுகலை வழங்கும்.
இந்த சேவையின் கீழ் பயனர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக, ஏர்டெல் நிறுவனமானது அடிப்படையில் நெட்வொர்க் ஸ்லைசிங் தொழில்நுட்பத்தை (Network slicing technology) பயன்படுத்தும். இது தற்போதைக்கு ஏர்டெல் நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கிறது. இந்த சேவையின் கீழ் ரூ.449 முதல் தொடங்கி ரூ.1749 வரை செல்லும் 5 புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

1. ரூ.449 + ஜிஎஸ்டி - தனிநபர் திட்டம்:
- ஃபாஸ்ட்லேன் தொழில்நுட்பத்துடன் 5ஜி-யில் முன்னுரிமை
- ஸ்பேம் டிடெக்ஷன் மற்றும் ஸ்பேம் அலெர்ட் சேவைகள்
- அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்
- 3000 எஸ்எம்எஸ்
- ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா
- அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தா
- 100ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ்
2. ரூ.699 + ஜிஎஸ்டி - 2 பேர் கொண்ட பேமிலி திட்டம்:
- ஃபாஸ்ட்லேன் தொழில்நுட்பத்துடன் 5ஜி-யில் முன்னுரிமை
- ஸ்பேம் டிடெக்ஷன் மற்றும் ஸ்பேம் அலெர்ட் சேவைகள்
- அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்
- 3000 எஸ்எம்எஸ்
- ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா
- அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தா
- 100ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ்
- அமேசான் பிரைம் சந்தா
- ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா
3. ரூ.999 + ஜிஎஸ்டி - 3 பேர் கொண்ட பேமிலி திட்டம்
- மேலே உள்ள அனைத்து நன்மைகளும் கிடைக்கும். கூடுதலாக ஆப்பிள் டிவி பிளஸ் (Apple TV Plus) சந்தா மற்றும் ஆப்பிள் மியூசிக் (Apple Music) சந்தா கிடைக்கும்.
4.ரூ. 1199 + ஜிஎஸ்டி - 4 பேர் கொண்ட பேமிலி திட்டம்: இது ரூ.999 வழங்கும் அதே நன்மைகளை வழங்கும்
5.ரூ. 1749 + ஜிஎஸ்டி - 5 பேர் கொண்ட பேமிலி திட்டம்: மேலே உள்ள அனைத்தும் நன்மைகளும் கிடைக்கும். கூடுதலாக நெட்ஃபிளிக்ஸ் சந்தா கிடைக்கும்
ஏர்டெல் ப்ரையாரிட்டி போஸ்ட்பெய்ட் சேவையின் கீழ் முக்கிய சிறப்பம்சங்கள்: 'ப்ரையாரிட்டி' சேவையானது, வேலை, பொழுதுபோக்கு, கேமிங் மற்றும் ஆன்லைன் கோலாப்ரேஷன் ஆகியவற்றிற்கு தடையற்ற மற்றும் சிறந்த இணைப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. ரூ.449 + ஜிஎஸ்டி என்கிற விலையில் தொடங்கும் இதன் திட்டங்கள் வரம்பற்ற டேட்டா, ஓடிடி சந்தாக்கள், கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் மோசடி பாதுகாப்பு சேவைகள் போன்ற பலன்களையும் உள்ளடக்கியுள்ளன.
இணக்கமான 5ஜி ஸ்டாண்டலோன் (SA) ஸ்மார்ட்போன்களை கொண்ட வாடிக்கையாளர்கள் 'ப்ரையாரிட்டி' சேவையை அணுகலாம் என்றும் ஏர்டெல் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது 5ஜி எஸ்ஏ வசதி கொண்ட எந்தவொரு ஸ்மார்ட்போனிலும் வாடிக்கையாளர்கள் தனது முன்னுரிமை சேவையை (Priority service) பெறலாம் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இன்று பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள், குறிப்பாக நடுத்தர அல்லது பிரீமியம் விலை பிரிவில் உள்ளவை, 5ஜி எஸ்ஏ-வை ஆதரிக்கின்றன.
வாடிக்கையாளர்கள் ஏர்டெல் ஆப்பில் லாக்-இன் செய்வதன் மூலம், ஏர்டெல் முன்னுரிமை சேவைகளுக்கு தங்கள் ஸ்மார்ட்போன் தயாராக உள்ளதா என்பதை சரிபார்க்கலாம். இதன் மூலம் - சில்லறை வாடிக்கையாளர்களுக்கு 5ஜி ஸ்லைசிங்கை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சி செய்த ஜியோவை ஏர்டெல் நிறுவனம் முந்தியுள்ளது.
நினைவூட்டும் வண்ணம் ரிலையன்ஸ் ஜியோவும், சில்லறை வாடிக்கையாளர்கள் 5ஜி நெட்வொர்க்கின் சிறந்த பலன்களைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, பிரீமியம் 5ஜி எனப்படும் 5ஜி ஸ்லைசிங்கை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருந்தது. இருப்பினும், ஏர்டெல் ஜியோவை முந்திக்கொண்டு இந்தியாவில் 5ஜி ஸ்லைசிங்கை அறிமுகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications