Home
News

இனி பேடிம் (Paytm) மூலமும் ரிலையன்ஸ் ஜியோவை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்!

இனி பேடிம் (Paytm) மூலமும் ரிலையன்ஸ் ஜியோவை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்!

By Siva

இந்தியாவில் 4G தொழில்நுட்பத்தை இலவசமாக அறிமுகப்படுத்தி தொழில்நுட்ப புரட்சி செய்தது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ. ஆறுமாத காலம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஆறு மாத காலம் இலவசமாக சேவை செய்த ஜியோ நிறுவனம், வரும் ஏப்ரல் 1 முதல் ரீசார்ஜ் செய்ய அறிவுறுத்தியுள்ளது.

இனி பேடிம் (Paytm) மூலமும் ரிலையன்ஸ் ஜியோவை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்!

மேலும் ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் எளிதில் ரீசார்ஜ் செய்ய வசதியாக பிரபல ஆன்லைன் இகாமர்ஸ் நிறுவனமான பேடிம் (Paytm) உடன் கைகோர்த்துள்ளது.

தற்போது ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் ரூ.99 மற்றும் மாதந்திர வாடிக்கையாளர்கள் மட்டும் பேடிஎம்-இல் ரீசார்ஜ் செய்யும் வசதி உள்ளது. ஆனால் வெகுவிரைவில் அனைத்து பிளான்களுக்கும் ரீசார்ஜ் செய்யும் வசதி பேடிஎம் இணையதளத்தில் கொண்டு வரப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

30 ஜிபி 4ஜி டேட்டா இலவசம் - இது ஏர்டெல் சர்ப்ரைஸ் ஆபரின் அதிரடி.!

மேலும் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.499 பிளானை பேடிஎம்-இல் ரீசார்ஜ் செய்தால், பேடிஎம் நிறுவனம் அதற்கு ரூ.30 தள்ளுபடி செய்யும் சலுகையையும் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் ஜியோ இணையதளம் மற்றும் மைஜியோ செயலி ஆகிய இரண்டில் மட்டுமே ரீசார்ஜ் செய்யும் வசதி இருந்தது, ஆனால் தற்போது பேடிஎம்-இலும் இந்த வசதி வந்துவிட்டதால் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இனி எந்தவித அசெளகரியமும் இருக்காது என்றே கருதப்படுகிறது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் இப்போதைய சலுகையை தொடர்ந்து பெற வரும் 31ஆம் தேதிக்குள் ரூ.99 வருடக்கட்டணமாக செலுத்தி மெம்பர்ஷிப் செய்து கொள்ள வேண்டும். இதன் பிறகு வாடிக்கையாளர்கள் தங்களது தேவைக்கேற்ப ரூ.303 அல்லது ரூ.499 என்று ரீசார்ஜ் செய்து 4ஜி இண்டர்நெட் உள்பட அனைத்து சலுகைகளையும் தங்கு தடையின்றி அனுபவிக்கலாம்.

ரூ.303க்கு தினமும் 1GB இண்டர்நெட் டேட்டாவும் ரூ499க்கு தினமும் 2GB இண்டர்நெட் டேட்டாவும் பெற்று கொள்ளலாம். ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் ஆரம்பித்து கொள்ளலாம்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோவின் பிளான்களை சமாளிக்க அதன் போட்டி நிறுவனங்களான வோடோபோன், ஏர்டெல், ஐடியா உள்பட ஒருசில தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தினமும் 1GB இண்டர்நெட் டேட்டா, அளவில்லா அழைப்பு வசதி போன்ற கவர்ச்சியான பிளான்களை அறிவித்து வருகின்றனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Reliance Jio users can pay for their Prime subscription and tariff plans using Paytm. Read more...
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X