Subscribe to Gizbot

30 ஜிபி 4ஜி டேட்டா இலவசம் - இது ஏர்டெல் சர்ப்ரைஸ் ஆபரின் அதிரடி.!

Written By:

புராண காலத்து மகாபாரத யுத்தத்தை விட மிகவும் உக்கிரமாக நடக்கிறது நவீன காலத்தின் தொலைத்தொடர்பு நிருவனங்களுக்குள் நடக்கும் கட்டண யுத்தம். தரமான நெட்வொர்க், முறையான கஸ்டமர் கேர் என்பதையெல்லாம் மலையேறி யார் சிறப்பான சேவையை வழங்குகிறார்கள் என்பது இலவசங்களை பொறுத்தே நிர்ணயிக்கப்படும் காலகட்டத்தில் நாம் இருக்கப்படுத்திக்க கொண்டுள்ளோம்.

இதற்கெல்லாம் காரணகர்த்தாவான ரிலைன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு பல பக்கம் நன்றிகளும் சில பக்கங்களில் இருந்து எதிர்ப்புகளும் கிளம்பிய வண்ணமிருக்க போட்டியாளர்கள் போட்டி போட்டு எதிர்ப்பை காட்ட இயலாமல் இலவசங்களை வழங்கி வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளும் நிலைப்பாட்டிற்குள் தள்ளப்பட்டுள்ளன. அந்த எதிர் நீச்சலில் முதலில் இருப்பது - பாரதி ஏர்டெல்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சிறப்பு சலுகை

சிறப்பு சலுகை

ஏகப்பட்ட விலைக்குறைப்புகள், சலுகைகள் மற்றும் கட்டண திருத்தங்கள் நிகழ்த்திய ஏர்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ அதன் ப்ரைம் கட்டண சேவையை அறிமுகம் செய்த பின்னரும் கூட, ஏர்டெல் அதன் சிறப்பு சலுகைகளை நிறுத்திக் கொள்வதாய் இல்லை.

30 ஜிபி அளவிலான 4ஜி

30 ஜிபி அளவிலான 4ஜி

அப்படியாக, மிகப்பெரிய தொலை தொடர்பு ஆப்ரேட்டர் ஆன ஏர்டெல் அதன் 'ஏர்டெல் சர்ப்ரைஸ்' வாய்ப்பை அறிமுகம் செய்து அதன் வழியாக இலவசமாக 30 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வரையிலாக வாடிக்கையாளர்கள் பெறும் சலுகையை வழங்கத்தொடங்கியுள்ளது.

க்ளைம் ப்ரீ டேட்டா

க்ளைம் ப்ரீ டேட்டா

இந்த சலுகையானது மைஏர்டெல் ஆப் மூலமாக அதன் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு கிடைக்கும் ஒரு சலுகையாகும் என்பதும், இதன் மூலம் ஏர்டெல் போஸ்ட்பெய்டு பயனர்கள் ஆப்பில் 'க்ளைம் ப்ரீ டேட்டா' (Claim Free Data) என்ற பேனரை கிளிக் செய்வதன் மூலம் இலவச தரவு பெற முடியும்.

ஏர்டெல் சர்ப்ரைஸ்

ஏர்டெல் சர்ப்ரைஸ்

"இந்தியாவின் அதிவேக மொபைல் நெட்வொர்க் என்று ஏர்டெல் நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய மற்றும் மிக நம்பகமான வேக சோதனை அமைப்பான ஊக்லா (Ookla) அறிவித்துள்ளது. இந்த சாதனையை நிகழ்த்த உறுதுணையாக இருந்த எமது பெறுமதிமிக்க போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு வார்த்தைகளால் நன்றி சொன்னால் மட்டும் போதாது. அதனால், நாங்கள் உங்களுக்கு ஒரு ஏர்டெல் சர்ப்ரைஸ் கொடுக்க விரும்புகிறோம்" என்று கோபால் விட்டல், தலைமை நிர்வாக அதிகாரி, பார்தி ஏர்டெல் - போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு மின்னஞ்சல் மூலம் கூறியுள்ளார். அதன் விளைவே இந்த ஏர்டெல் சர்ப்ரைஸ் சலுகையாகும்.

சீரமைக்கப்பட்ட திட்டங்கள்

சீரமைக்கப்பட்ட திட்டங்கள்

ரிலையன்ஸ் ஜியோவை எதிர்கொள்வதற்கான மேலுமொரு முயற்சியில், ஏர்டெல் வரம்பற்ற அழைப்புகள் சேர்ந்த நாள் ஒன்றுக்கு 1 ஜிபி அளவிலான 4ஜி தரவு வழங்கும் புதிய சீரமைக்கப்பட்ட திட்டங்களையும் கொண்டு வந்து விட்டது.

ரூ.345/-

ரூ.345/-

ஏர்டெல் தற்போது அதன் ரூ.345/- திட்டத்தின் கீழ் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுடன் சேர்த்து நாள் ஒன்றுக்கு 1ஜிபி அளவிலான 4ஜி தரவை வழங்குகிறது. ஒரு மாத காலம் செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் 1ஜிபி தரவந்து பகலில் 500 எம்பி மற்றும் இரவில் 500 எம்பி என இரண்டு பாகங்களாக பிரித்து வழங்கப்படும்.

ரூ.145/-

ரூ.145/-

உடன் ஏர்டெல் தொலைதொடர்பு நிறுவனம் அதன் ரூ.145/- திட்டத்தின் கீழ் இப்போது 28 நாட்கள் செல்லுபடியாகும் காலம் வரம்பு கொண்ட ஏர்டெல் டூ ஏர்டெல் (உள்ளூர் + தேசிய) அழைப்புகள் மற்றும் 2ஜிபி அளவிலான தரவு வழங்கும் வண்ணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரூ.82/- மற்றும் ரூ.83/-க்கு எல்லாமே கிடைக்கும் - ஏர்செல் அதிரடி.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Bharti Airtel offering up to 30 GB free 4G data to postpaid users via MyAirtel app. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot