தவம் கிடக்கும் மக்கள்.. இந்தியாவுக்கு இந்த போன் எப்போ வரும்? சுட்டெரிக்கும் புது Redmi Note 13 Pro ஸ்பெஷல்..
சியோமி (Xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான ரெட்மி (Redmi) பிராண்ட்டின் ரெட்மி நோட் 13 ப்ரோ நியூ இயர் எடிஷன் (Redmi Note 13 Pro New Year Edition) ஸ்மார்ட்போன் இப்போது ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது.
கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பத்துடன் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ நியூ இயர் எடிஷன் (Redmi Note 13 Pro New Year Edition) ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது விற்பனைக்கு வந்துள்ளது. இது 6.67" இன்ச் அளவு கொண்ட 120Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate) உடன் கூடிய OLED டிஸ்பிளேவை (Display) ஆதரிக்கிறது. இது 2712×1220 பிக்சல் ரெசொலூஷன் உடன் வருகிறது.

இந்த டிஸ்பிளே டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் HDR10+ சப்போர்ட் ஆதரவை கொண்டுள்ளது. இது ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 SoC) உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 13 (Android 13) உடன் கூடிய MIUI 14 இயங்குதளத்தில் இயங்குகிறது. இது மிகவும் ஸ்மூத்தான மல்டிடாஸ்கிங் (smooth multitasking) அனுபவத்தை வழங்குகிறது.
ரெட்மி நோட் 13 ப்ரோ நியூ இயர் எடிஷன் (Redmi Note 13 Pro New Year Edition):
இந்த புதிய ரெட்மி நோட் 13 ப்ரோ நியூ இயர் எடிஷன் (Redmi Note 13 Pro New Year Edition) ஸ்மார்ட்போனின் கேமரா அம்சத்தை பற்றி பேசுகையில், இது 200MP ஆதரவை வழங்கும் கேமராவை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. இதில் 200MP + 8MP + 2MP கேமராவை கொண்டுள்ளது. இது 64MP கேமராவுடன் OIS உடன் வருகிறது.
முன்பக்கத்தில் இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ நியூ இயர் எடிஷன் (Redmi Note 13 Pro New Year Edition) ஸ்மார்ட்போன் சாதனம் 16MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 12GB | 16GB LPDDR5 ரேம் உடன் 256GB | 512GB UFS 3.1ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

ரெட்மி நோட் 13 ப்ரோ நியூ இயர் எடிஷன் விலை (Redmi Note 13 Pro New Year Edition Price):
இது 120W பாஸ்ட் சார்ஜிங் (Fast charging) உடன் வருகிறது. குறைந்த நேரத்தில் மிகவும் வேகமான சார்ஜிங்கை இது உறுதி செய்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஓவர் ஹீட்டிங் சிக்கல் எழக்கூடாது எனப்தற்காக நிறுவனம் 2000mm² கிராபைன் டிசைன் கூலிங் சிஸ்டம் (2,000mm² graphene-based cooling system) கூட இதில் வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஓவர் ஹீட்டிங் சிக்கலும் எழாது மற்றும் பேட்டரி வேகமாக தீர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறது.
இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ நியூ இயர் எடிஷன் (Redmi Note 13 Pro New Year Edition) ஸ்மார்ட்போனில் JBL ஸ்டீரியோ ஆடியோ டூயல் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. இது கேம்ஸ், வீடியோஸ், மூவீஸ் போன்றவைகளில் சிறந்த ஆடியோவை வழங்குகிறது. இது Hi-Res ஆடியோவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் டூயல் நானோ சிம் கார்டு ஆதரவுடன் 5G/4G/3G/2G நெட்வொர்க்கை ஆதரிக்கிறது.
இதில் கூடுதல் இணைப்பு விருப்பங்களாக ப்ளூடூத் 5.2, இன்ஃபிராரெட் சென்சார், WiFi 6, NFC 3.0 ஆதரவு, போன்ற அம்சங்களை அடக்கியுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பின் படி ரூ.24,000 என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இதுவொரு ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் சாதனம் என்பதனால், இது Giztop தளத்தில் பிரத்தியேகமாக ஆன்லைன் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








