Home
News

பட்ஜெட் விலையில் ட்ரிபிள்ஸ் அடிக்கும் Xiaomi.. Redmi Note 13 சேல்ஸ் லைவ்.. ஒரே நாளில் 3 மாடல் விற்பனை..

பட்ஜெட் செக்மென்ட்டில் (Budget segment) பிளாக்ஷிப் போனுக்கு (Flagship phones) நிகரான அம்சங்களை பேக் செய்த ரெட்மி நோட் 13 சீரிஸ் (Redmi Note 13 Series) ஸ்மார்ட்போன்களின் (Smartphones) விற்பனை நாளை ஜனவரி 10, 2024 முதல் துவங்குகிறது.

இந்த ரெட்மி நோட் 13 சீரிஸ் வரிசையில் நிறுவனம், ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G), ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி (Redmi Note 13 Pro 5G), மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 13 Pro Plus 5G) என்ற 3 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

பட்ஜெட் விலையில் ட்ரிபிள்ஸ் அடிக்கும் Xiaomi.. Redmi Note 13 சேல்ஸ்..

இந்த 3 ஸ்மார்ட்போன் மாடல்களும் நாளை 12 மணி முதல் ஜனவரி 10, 2024 விற்பனைக்கு வாங்க கிடைக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் ஒவ்வொரு வேரியண்ட் மாடல்களின் விபரம் மற்றும் இவை விற்பனை செய்யப்படப்போகும் விலை விபரங்களை முழுமையாக இப்போது பார்க்கலாம்.

ரெட்மி நோட் 13 சீரிஸ் விற்பனை நாளை லைவ் (Redmi Note 13 Series Sale Live Tomorrow):

ரெட்மி நோட் 13 5ஜி விலை (Redmi Note 13 5G Price): இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G) ஸ்மார்ட்போன் சாதனம் 3 ஸ்டோரேஜ் விருப்பங்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் அடிப்படை வேரியண்ட் மாடல் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் ரூ.16,999 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இதன் 8ஜிபி ரேம் + 256 ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை ரூ.18,999 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியாக, ரெட்மி நோட் 13 5ஜி சாதனத்தின் உயர் வேரியண்ட் மாடலான 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.20,999 விலையில் நாளை முதல் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. இதற்கு அடுத்தபடியாக, ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி விலை (Redmi Note 13 Pro 5G Price): மாடலின் விலை பற்றி பார்க்கையில், இதன் அடிப்படை மாடல் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் ரூ.23,999 விலையில் வருகிறது.

பட்ஜெட் விலையில் ட்ரிபிள்ஸ் அடிக்கும் Xiaomi.. Redmi Note 13 சேல்ஸ்..

ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி (Redmi Note 13 Pro 5G) ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்ட மாடல்கள் முறையே இந்திய சந்தையில் ரூ.25,999 மற்றும் ரூ.27,999 என்ற விலையில் நாளை முதல் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ரீடெயில் ஸ்டோர்ஸ் வழியாக வாங்க கிடைக்கும்.

இறுதியாக, இந்த ரெட்மி நோட் 13 சீரிஸ் வரிசையின் உயர் திறன் மாடலான ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி விலை (Redmi Note 13 Pro Plus 5G Price): ஸ்மார்ட்போன் சாதனத்தின் விலை பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம். ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 13 Pro Plus 5G) ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.29,999 விலையில் விற்பனைக்கு வருகிறது.

இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை ரூ.31,999 என்று அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. இறுதியாக, ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 13 Pro Plus 5G) ஸ்மார்ட்போன் சாதனத்தின் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.33,999 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. mi.com வழியாகவும் இந்த சாதனங்களை நீங்கள் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 13 5G Redmi Note 13 Pro 5G and Redmi Note 13 Pro Plus Goes On Sale Tomorrow January 10 In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X