72 மணி நேரத்தில் பத்து லட்சம் கருவிகள் முன்பதிவு..!!

By Meganathan
|

ஒன் ப்ளஸ் நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன் ப்ளஸ் 2 கருவியை ஜூலை மாதம் 27 ஆம் தேதி வெளியிட்டது. சீன நிறுவனத்தின் புதிய கருவியை இதுவரை சுமார் 10 லட்சம் பேர் முன்பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சுமார் 1.5 மில்லியன் ஒன் ப்ளஸ் ஒன் கருவிகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆஃப்லைனில் கூகுள் மேப்ஸ் பயன்படுத்துவது எப்படி..?

 72 மணி நேரத்தில் பத்து லட்சம் கருவிகள் முன்பதிவு..!!

64 ஜிபி ஒன் ப்ளஸ் 2 கருவியின் விற்பனை இந்தியாவில் ஆகஸ்டு 11 ஆம் தேதியில் இருந்து துவங்குகின்றது. இந்த கருவி அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5.5 இன்ச் 1080பி டிஸ்ப்ளே, கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதன் கைரேகை ஸ்கேனரில் அதிகபட்சம் ஐந்து கைரேகைகளை பதிவு செய்து கொள்ள முடியும்.

ரூ.3,990க்கு பாக்கெட் வாஷிங் மெஷின்..!!

கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, மற்றும் புதிய கேமரா மூலம் 50எம்பி போட்டோ மற்றும் ஸ்லோ மோஷன் புகைப்படங்களையும் எடுக்க முடியும். இதோடு ஸ்னாப்டிராகன் 810 மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் ஓஎஸ் கொண்டிருக்கும் இந்த கருவியில் சில மாற்றங்களும் 3300 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
OnePlus launched the much talked about OnePlus 2 in the world’s first virtual reality launch event on July 27.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X