ரூ.3,990க்கு பாக்கெட் வாஷிங் மெஷின்..!!

Posted By:
    X

    நம்ம ஊர்ல கால் மணி நேரம் வெளியே போனால் சட்டையில் படும் தூசி சில மணி நேரத்தில் சட்டையை அலங்கோலமாக்கி விடும். இதற்காக அடிக்கடி சட்டையை மாற்றவும் முடியாது. இந்நிலையில் அடிக்கடி மழை பெய்து சாலையை சேறும் சகதியுமாக மாற்றி அனைவருக்கும் தொல்லையாகவே இருக்கின்றது. இதை நன்கு அறிந்த ஹையர் நிறுவனம் ராசியில்லாதவர்களுக்காக புதிய கருவியை தயாரித்திருக்கின்றது.

    'இந்த' ஜப்பான் மூளையை அடகு கூட வைக்க முடியாது..!

    இந்த கருவி இருக்கும் போது துணியில் கறை ஏற்ப்பட்டால் கவலை வேண்டாம் என்கின்றது ஹையர் நிறுவனம். வெளியில் செல்லும் போது அடிக்கடி துணிகளில் அழுக்கு படிந்தால் உடனடியாக அவற்றை அகற்ற உதவும் பாக்கெட் வாஷிங் மெஷின் கருவியை அந்நிறுவனம் தயாரித்திருக்கின்றது. கீழ் வரும் ஸ்லைடர்களில் கோடோ வாஷிங் மெஷின் குறித்த விரிவான தகவல்களை பாருங்கள்..

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
    கோடோ
      

    ஹையர் நிறுவனத்தின் புதிய வாஷிங் மெஷின் தான் கோடோ

    அளவு
      

    மற்ற வாஷிங் மெஷின்களுடன் ஒப்பிடும் போது  அளவு குறைவாக இருக்கும் இந்த கருவியை நீங்கள் கையில் எடுத்து செல்ல முடியும்.

    பாட்டிள்
      

    500 மில்லி தண்ணீர் பாட்டிலை விட சிறியதாக இந்த கருவி இருக்கின்றது.

    ஆபத்து
      

    வெளியில் செல்லும் போது திடீரென ஆடையில் கறை ஏற்ப்பட்டால் இந்த கருவியை கொண்டு அதே இடத்தில் உடனடியாக ஆடையை சுத்தம் செய்து கொள்ள முடியும்.

    பேட்டரி
      

    கோடோ மூன்று AAA பேட்டரிகளை கொண்டு சக்தியூட்டப்படுகின்றதோடு இதன் எடை 200 கிராம் மட்டுமே.

    துணி
      

    இந்த பேட்டரிகளை கொண்டு அதிகபட்சம் 50 முறை துணிகளை சுத்தம் செய்ய முடியும்.

    நேரம்
      

    இந்த கருவி துணியில் இருக்கும் அழுக்கிற்கு ஏற்ப 30 முதல் 120 நொடிகள் வரை சுத்தம் செய்ய எடுத்து கொள்கின்றது.

    வேலை
      

    இந்த கருவியின் மேல் பகுதியில் பேட்டரி மற்றும் பவர் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது, கீழ் பகுதியில் 200 மில்லி நீர் அல்லது டிடெர்ஜென்ட் கொண்டு நிரப்பி கொள்ளலாம்.

    பம்ப்
      

    ட்ரில் போன்று பம்ப் ஆகும் இந்த கருவி நிமிடத்திற்கு 700 முறை மேல் இருந்து கீழ் பக்கம் அடிக்கும். இதோடு சிறிதளவில் நீரும் வெளியேறுவதால் துணியில் இருக்கும் அழுக்கு நீங்கி விடுகின்றது.

    விலை
      

    இந்த கருவி ஸ்னாப்டீல் தளத்தில் ரூ.3,990க்கு கிடைக்கின்றது.

    வாஷிங் மெஷின் இயங்கும் வீடியோ

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    Read more about:
    English summary
    Codo Is a Pocket-Sized Washing Machine That Costs Only Rs. 3,999. Check out here the full details about codo. This is interesting and you will like this.
    Please Wait while comments are loading...

    Social Counting

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more