Home
News

நுபியா ரெட் மேஜிக் 5ஜி லைட் ஸமார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

நுபியா ரெட் மேஜிக் 5ஜி லைட் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது தற்சமயம் அதிகாரப்பூர்வ அறிமுகமாகி உள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆனது சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போனின் மெலோவர்
பதிப்பாகும்.

MOLED டிஸ்பிளே

நுபியா ரெட் மேஜிக் 5ஜி லைட் ஸ்மார்ட்போன் ஆனது 6.65-இன்ச் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 1080 × 2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன்

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 2.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 765ஜி 7என்எம் பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 620ஜிபியுவசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன்.

வானத்திலிருந்து மிகுந்த சத்தத்துடன் விழுந்த மர்மப்பொருள்! பீதியில் மக்கள்!

 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக

இந்த நுபியா ரெட் மேஜிக் 5ஜி லைட் ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

எம்பி மேக்ரோ

நுபியா ரெட் மேஜிக் 5ஜி லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 12எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,
செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் அடக்கம்.

பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக்

நுபியா ரெட் மேஜிக் 5ஜி லைட் ஸ்மார்ட்போனில் 5100எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி

புளூடூத் 5, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், டூயல் 4ஜி வோல்ட்இ, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த நுபியா ரெட் மேஜிக் 5ஜி லைட் ஸ்மார்ட்போனின்இந்திய விலை மதிப்பு ரூ.52,275-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Nubia Red Magic 5G Lite Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X