வானத்திலிருந்து மிகுந்த சத்தத்துடன் விழுந்த மர்மப்பொருள்! பீதியில் மக்கள்!

|

ராஜஸ்தானில் உள்ள சஞ்சூர் நகர் பகுதியில் வெள்ளிக்கிழமை (நேற்று) காலை வானத்திலிருந்து அடையாளம் தெரியாத ஒரு மர்மப்பொருள் மிகுந்த சத்தத்துடன் தரையில் விழுந்துள்ளது. இந்த மர்மப்பொருள் வானத்திலிருந்து தரையில் விழுந்த பொழுது பெரிய வெடிப்பு சத்தத்துடன் தரையிறங்கியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

வானத்திலிருந்து விழுந்த மர்மப்பொருள்

வானத்திலிருந்து விழுந்த மர்மப்பொருள்

நேற்று காலை மிகுந்த சத்தத்துடன் வானத்திலிருந்து இந்த மர்மப்பொருள் தரையில் விழுந்துள்ளது. தரையில் விழுந்த அந்த பொருள் பார்ப்பதற்கு விண்கல் போன்று தோற்றமளிக்கிறது. தரையில் விழுந்த இந்த அடையாளம் தெரியாத பொருள் ஒரு அடி ஆழமான பள்ளத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பொருள் தரையில் விழுந்த பொழுது இரண்டு கிலோமீட்டர் தொலைவு வரை வெடிப்பு சத்தத்தை உருவாக்கியுள்ளது.

மக்களை பீதியடைய செய்த அபாரமான சத்தம்

மக்களை பீதியடைய செய்த அபாரமான சத்தம்

உள்ளூர் வாசிகளின் கூற்றுப்படி, பொருள் வானத்திலிருந்து விழுந்தபோது மிகுந்த வெடிக்கும் சத்தம் கேட்டது என்றும், இந்த அபாரமான சத்தம் இப்பகுதியில் உள்ள மக்களைப் பீதியில் உறையவைத்துள்ளது என்றும் கூறியுள்ளனர். உள்ளூர் மக்கள் முதலில் இந்த அபாரமான சத்தத்தைக் கேட்டு எதோ விமானம் அருகில் விபத்துக்குள்ளாகி இருக்கிறது என்று கருதியுள்ளனர்.

பூமியின் 'அதிசயமான' மிகப்பெரிய நீர்வீழ்ச்சி இதுதான்! இது எங்கே இருக்கிறது தெரியுமா?பூமியின் 'அதிசயமான' மிகப்பெரிய நீர்வீழ்ச்சி இதுதான்! இது எங்கே இருக்கிறது தெரியுமா?

மூன்று மணிநேரங்களுக்குப் பிறகும் கூட வெப்பமாக இருந்த பொருள்

மூன்று மணிநேரங்களுக்குப் பிறகும் கூட வெப்பமாக இருந்த பொருள்

வானத்திலிருந்து என்ன விழுந்தது என்று அப்பகுதி மக்கள் அக்கம்பக்கத்தில் உள்ள இடங்களைத் தேடிய பொழுது தான் ஒரு அடி பள்ளத்தில் இந்த மர்மப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மர்மப்பொருள் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான மூன்று மணிநேரங்களுக்குப் பிறகும் கூட அதிக வெப்பத்துடன் இருந்துள்ளது. அது வெடிக்கக்கூடும் என்று பலர் அருகில் செல்லாமல் பயத்துடன் தூரத்திலிருந்து நோட்டம்விட்டுள்ளனர்.

முதலில் நேரில் பார்த்த அஜ்மல் தேவசி

முதலில் நேரில் பார்த்த அஜ்மல் தேவசி

அஜ்மல் தேவசி என்ற உள்ளூர் வாசி தான் முதலில் இந்த மர்மப் பொருளை அடையாளம் கண்டுள்ளார். இந்த மர்மப்பொருள் இவரின் வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் தான் விழுந்துள்ளது என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மர்மப்பொருள் கண்டதும் அவர் உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். சம்பவ இடத்திற்கு ஜலூர் மாவட்ட தகவல் பணியாக ஆய்வாளர் மங்கல் சிங் நேரில் வந்திருக்கிறார்.

விற்பனைக்கு வந்தது ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் மாடல்..! விலை இவ்வளவு தான்.!விற்பனைக்கு வந்தது ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் மாடல்..! விலை இவ்வளவு தான்.!

விசாரணை

விசாரணை

மங்கல் சிங் கூறுகையில், "அடையாளம் தெரியாத பொருள் குறித்த தகவல் எங்களுக்குக் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு துறை அதிகாரிகள் உடனடியாக இடத்தை அடைந்தனர். அடையாளம் தெரியாத பொருள் மூன்று கிலோ எடை கொண்டதாகவும், மிகவும் வெப்பமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது" என்றும் அவர் கூறியுள்ளார். இந்த மர்மப்பொருள் உண்மையில் என்ன என்று விசாரணை நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.

Best Mobiles in India

Read more about:
English summary
Mysterious Meteorite Like Object Falls From Sky Near Rajasthan In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X