Home
News

ஆர்டர் அள்ளுது.. ஒரே நேரத்தில் 3 போன்கள், 8 இயர்பட்ஸ் மீது விலை குறைப்பு.. எல்லாமே Nothing, CMF மாடல்கள்!

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் மற்றும் ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தை தொடர்ந்து நத்திங் நிறுவனமும் அதன் 2025 சுதந்திர தின விற்பனை (Nothing Independence Day Sale 2025) அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையின் கீழ் பல்வேறு வகையான நத்திங் ஸ்மார்ட்போன்கள் மற்றும் நத்திங் இயர்பட்ஸ் மீது நேரடி தள்ளுபடிகள் மற்றும் அற்புதமான வங்கி சலுகைகள் கிடைக்கிறது

நத்திங் நிறுவனம் அறிவித்துள்ள 2025 சுதந்திர தின விற்பனை சலுகைகள் ஆனது - பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் (Flipkart), மின்த்ரா (Myntra), விஜய் சேல்ஸ் (Vijay Sales), க்ரோமா (Croma) மற்றும் முன்னணி ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகள் வழியாக அணுக கிடைக்கும்.

ஒரே நேரத்தில் 3 போன்கள், 8 இயர்பட்ஸ் மீது விலை குறைப்பு!

இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் பிரபலமான டிவைஸ்களின் மீது ரூ.9,000 வரை தள்ளுபடியை பெறலாம், மேலும் ஐசிஐசிஐ (ICICI) வங்கி, எஸ்பிஐ (SBI) கார்டு மற்றும் ஐடிஎப்சி பர்ஸ்ட் (IDFC FIRST) வங்கி பரிவர்த்தனைகளில் கூடுதலாக ரூ.2,000 உடனடி வங்கி தள்ளுபடியும் கிடைக்கும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட டிவைஸ்கள் மீது ரூ.1,000 வரை எக்ஸ்சேன்ஜ் போனஸும் கிடைக்கும்.

என்னென்ன ஸ்மார்ட்போன்கள் என்னென்ன தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது?
சிஎம்எப் போன் 2 ப்ரோ (CMF Phone 2 Pro) - ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது
நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) - ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கிறது
நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) - ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கிறது

நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.18,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. மறுகையில் உள்ள 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.20,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பிளாக், லைட் க்ரீன், ஆரஞ்சு மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.

இதேபோல நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் ஆனது அறிமுகமான நேரத்தில் வாங்க கிடைத்த ஆபர் விலைக்கு திரும்பியுள்ளது. நினைவூட்டும் வண்ணம், அறிமுகமான போது இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வங்கி சலுகைகளுடன் சேர்த்து ரூ.ரூ.22,999 க்கு வாங்க கிடைத்தது.

கடைசியாக உள்ள நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது அறிமுகமான நேரத்தில் கிடைத்த ஆபர் விலையை விட இன்னும் மலிவான விலைக்கு இறங்கியுள்ளது. நினைவூட்டும் வண்ணம் முதல் விற்பனையின் போது இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், வங்கி சலுகைகளுடன் சேர்த்து ரூ.27,999 க்கு வாங்க கிடைத்தது. இப்போது இன்னும் ரூ.1000 மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது

என்னென்ன இயர்பட்ஸ்கள் என்னென்ன தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது?
சிஎம்எப் பட்ஸ் 2ஏ (CMF Buds 2A) - ரூ.1,899
சிஎம்எப் பட்ஸ் 2 (CMF Buds 2) - ரூ.2,499
சிஎம்எப் பட்ஸ் 2 ப்ளஸ் (CMF Buds 2 Plus) - ரூ.3,099
சிஎம்எப் பட்ஸ் ப்ரோ (CMF Buds Pro) - ரூ.2,799

சிஎம்எப் பட்ஸ் ப்ரோ 2 (CMF Buds Pro 2) -ரூ.3,499
சிஎம்எப் நெக்பேண்ட் ப்ரோ (CMF Neckband Pro) - ரூ.1,899
நத்திங் இயர் ஏ (Nothing Ear a)- ரூ.5,999
நத்திங் இயர் (Nothing Ear) - ரூ.8,999

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Independence Day Sale 2025 Discounts on Nothing CMF Phones Earbuds Till Aug 10
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X