Home
News

அள்ளிக்கோ.. OnePlus சுதந்திர தின விற்பனை.. ஆகஸ்ட் 17 வரை அடிமட்ட விலையில் போன்கள், இயர்பட்ஸ், டேப்லெட்!

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் தனது சுதந்திர தின விற்பனையை (OnePlus Independence Day Sale 2025) அறிவித்துள்ளது. இந்த விற்பனையின் கீழ் ஸ்மார்ட்போன்கள் மீதான லிமிடெட்-டைம் ஆபர்கள் ஆகஸ்ட் 17 வரையும், பிற தேர்ந்தெடுக்கப்பட்ட சலுகைகள் ஆகஸ்ட் 31 வரையும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனையின் போது ஒன்பிளஸ் 13 சீரிஸ் (OnePlus 13 Series) உட்பட பல ஸ்மார்ட்போன்கள் மீதும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் பேட் லைட் (OnePlus Pad Lite) உட்பட ஒன்பிளஸ் டேப்லெட்கள் மீதும், பலதரப்பட்ட ஒன்பிளஸ் ஆடியோ தயாரிப்புகள் (OnePlus Audio Products) மீதும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள் கிடைக்கிறது.

அள்ளிக்கோ.. OnePlus சுதந்திர தின விற்பனை.. ஆகஸ்ட் 17 வரை!

என்னென்ன ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ஆபர் / டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கிறது? ஒன்பிளஸ்-ன் 2025 சுதந்திர தின விற்பனையின் போது, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் தற்காலிகமாக ரூ.7,000 தள்ளுபடியை பெறும், இதன் மூலம் ஒன்பிளஸ் 13 மாடலின் ஆரம்ப விலை ரூ.62,999 ஆக குறையும்.

இதற்கிடையில், ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் 16GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.5,000 விலை குறைப்பின் கீழ் வாங்க கிடைக்கும். இதே ஸ்மார்ட்போனின் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது ரூ.3,000 விலைக்குறைப்பு கிடைக்கும். இந்த வரையறுக்கப்பட்ட நேர சலுகைகள் ஆனது ஆகஸ்ட் 17 வரை கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13ஆர் ரூ.42,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகமானது.

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் மீது ரூ.3,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது ரூ.5,000 வரை வங்கி தள்ளுபடி கிடைக்கிறது. இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 31 வரை அனைத்து வேரியண்ட்களின் மீதும் கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போன் ரூ.54,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது

மேலும் ஒன்பிளஸ்-ன் இந்த 2025 சுதந்திர தின விற்பனையின் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளில் ரூ.2,250 உடனடி வங்கி தள்ளுபடியுடன் ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 (OnePlus Nord CE 5) ஸ்மார்ட்போன்களை வாங்க முடியும். நினைவூட்டும் வண்ணம் இவ்விரு ஸ்மார்ட்போன்களும் முறையே ரூ.31,999 மற்றும் ரூ.24,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

என்னென்ன ஒன்பிளஸ் டேப்லெட்கள் ஆபர் / டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கிறது? சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பில்ஸ் பேட் லைட் டேப்லெட் ஆனது முதன்முறையாக ஒன்பிளஸ் சுதந்திர தின விற்பனையின் போது விற்பனைக்கு வந்துள்ளது. அறிமுக சலுகைகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளில் ரூ.2,000 தள்ளுபடி கிடக்கம். இந்த டேப்லெட்டின் 6GB + 128GB (வைஃபை) வேரியண்ட் ரூ.15,999 என்கிற தொடக்க விலையில் அறிமுகமானது.

மேலும் இந்த விற்பனையின் போது, ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) டேப்லெட் மீதும் உடனடி வங்கி தள்ளுபடிகள் மற்றும் ரூ. 2,000 வரை விலைக் குறைப்புடன், இலவச ஸ்டைலோ 2 (Stylo 2) ஸ்டைலஸும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் பேட் 2 ஆனது ரூ.39,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

என்னென்ன ஒன்பிளஸ் ஆடியோ தயாரிப்புகள் ஆபர் / டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கிறது? முன்னர் ரூ.5,999க்கு விற்கப்பட்ட ஒன்பிளஸ் பட்ஸ் 4 (OnePlus Buds 4) ஆனது இந்த சிறப்பு விற்பனை காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளில் ரூ.500 தள்ளுபடியின் கீழ் வாங்க கிடைக்கிறது. இதேபோல ரூ.1,699க்கு விற்கப்பட்ட ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இஸட்3 (OnePlus Bullets Wireless Z3) மாடல் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளில் ரூ.150 உடனடி வங்கி தள்ளுபடியின் கீழ் வாங்க கிடைக்கிறது

இதேபோல், ரூ.8,999க்கு விற்கப்பட்ட ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 (OnePlus Buds Pro 3) மாடல் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகள் மூலம் ரூ.2,000 உடனடி தள்ளுபடியுடன் கூடுதலாக ரூ. 1,000 தள்ளுபடியுடன் வாங்க கிடைக்கிறது. கடைசியாகப் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 ப்ரோ (OnePlus Nord Buds 3 Pro) குறிப்பிட்ட கால விலைக்குறைப்பின் கீழ் வாங்க கிடைக்கும்.

ஜூலை 31 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த விற்பனையை - ஒன்பிளஸ் இந்தியா (OnePlus India) வலைத்தளம், அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart), மின்த்ரா (Myntra) மற்றும் பிளிங்கிட் (Blinkit) வழியாக அணுக முடியும். ஒன்பிளஸ்-ன் இந்த சுதந்திர தின விற்பனை எப்போது முடிவடைகிறது என்பதை ஒன்பிளஸ் இன்னும் வெளியிடவில்லை, ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சலுகைகள் ஆகஸ்ட் 31 வரை செல்லுபடியாகும் என்று கூறுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Independence Day Sale 2025 Deals On Smartphones Tablets Audio Products Till August 31
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X