Home
News

அட்றா சக்கை.. Apple உடன் கூட்டு சேர்ந்த NOKIA.. அடுத்தது என்ன? கலவையான புது போன் வருமா?

ஒரு காலத்தில், உலகளாவிய மொபைல் போன் சந்தையில் "கால் மேல் கால் போட்டு உட்காந்து கொண்டு" ராஜாங்கம் செய்து கொண்டிருந்த நோக்கியா (NOKIA) நிறுவனமானது, தற்போது லாவா, இன்பினிக்ஸ் போன்ற சிறிய நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுடன் போட்டிபோட்டு கொண்டிருக்கிறது என்பதே கசப்பான உண்மை!

இதற்கிடையில், ஆப்பிள் (Apple) நிறுவனத்துடன் புதிய நீண்ட கால காப்புரிமை உரிம ஒப்பந்தத்தில் (Patent License Agreement) கையெழுத்திட்டுள்ளதாக நோக்கியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேற்குறிப்பிட்ட ஒப்பந்தத்தின் விதிமுறைகள் (Terms of the Agreement) இவ்விரு நிறுவனங்களுக்கு இடையே ரகசியமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்றா சக்கை.. Apple உடன் கூட்டு சேர்ந்த NOKIA.. அடுத்தது என்ன?

ஒருவேளை, இவ்விரு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து புதிய வகை ஸ்மார்ட்போன்களை உருவாக்குமா என்கிற கேள்வி உங்களுக்குள் எழுந்தால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. மைக்ரோசாஃப்ட் உடன் கூட்டு சேர்நது நோக்கியா லூமியா (Nokia Lumia) ஸ்மார்ட்போன்கள் வெளியாகி, பின்னர் அது படுதோல்வியுற்ற வரலாற்றை நாம் அறிவோம்.

ஆனால் அப்படி எதுவும் இங்கே நடக்கப்போவதில்லை. அதாவது ஆப்பிள்-நோக்கியாவின் ஹைபிரிட் ஸ்மார்ட்போன்கள் (Hybrid Smartphones) உருவாகப்போவது இல்லை. ஏனென்றால் ஆப்பிள் மற்றும் நோக்கியா நிறுவனங்களுக்கு இடையேயான இந்த ஒப்பந்தமானது முழுக்க முழுக்க 5ஜி மற்றும் பிற தொழில்நுட்பங்களில் நோக்கியாவின் புதிய கண்டுபிடிப்புகளை உள்ளடக்கியது.

இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், நோக்கியா நிறுவனத்திடம் கிட்டத்தட்ட ரூ.12,55,260 கோடி மதிப்பிலான காப்புரிமைகள் (Patents) உள்ளன. நோக்கியாவின் கூற்றுப்படி, அதனிடம் சுமார் 20,000 காப்புரிமைகள் உள்ளன. அதில் 5,500 க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் ஆனது 5ஜி தொழில்நுட்பத்திற்கு அவசியமானவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

புத்திசாலிகள் யாரும் ஜூலை 15 வரை எந்த புது போனும் வாங்க மாட்டாங்க.. அதுக்கு ஒரு காரணம் இருக்கு!

அந்த காப்புரிமைகளை ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்திக்கொள்ள உள்ளது; அதற்காகவே இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால் நோக்கியா நிறுவனத்திற்கு என்ன லாபம்? என்று கேட்டால் - இந்த ஒப்பந்தத்தின் கீழ் அடுத்த பல வருட காலத்திற்கு ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து நோக்கியா நிறுவனம் பணம் பெற உள்ளது.

சொந்த பணத்தில் அல்லது முதலீடுகளில் புதிய கண்டுபிடிப்புகளில் வேலை செய்ய முடியாத அல்லது வேலை செய்ய விரும்பாத நிறுவனங்கள், மற்ற நிறுவனங்களின் காப்புரிமைக்ளுக்காக பணம் கொடுப்பது ஒன்றும் புதிதல்ல. இப்படி செய்வதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தயாரிப்புக;ளின் உருவாக்கம் மிகவும் வேகமாக நடக்கும்.

"இந்த ஒப்பந்தமானது எங்களுடைய காப்புரிமை இலாகாவின் பலத்தை வெளிப்படுத்துவதோடு நில்லாமல், பல தசாப்தங்களாக ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் நாங்கள் செய்த முதலீடுகள், செல்லுலார் தரநிலைகள் மற்றும் பிற தொழில்நுட்பங்களில் நோக்கியாவின பங்களிப்பு போன்றவைகளையும் பிரதிபலிக்கிறது" என்று நோக்கியா டெக்னாலஜிஸின் தலைவரான ஜென்னி லுகாண்டர் (Jenni Lukander) கூறியுள்ளார்.

ஆப்பிள் மற்றும் நோக்கியா ஆகிய இரண்டுமே நீண்ட கூட்டாண்மையை பகிர்ந்து கொள்கின்றன. நினைவூட்டும் வண்ணம் கடந்த 2018 ஆம் ஆண்டில், நோக்கியா நெட்வொர்க்கின் தலைமை வாடிக்கையாளர் செயல்பாட்டு அதிகாரியான ஆஷிஷ் சவுத்ரியை ஆப்பிள் அதன் இந்திய செயல்பாட்டு தலைவராக நியமித்தது. அவர் கடந்த ஜனவரி 2019 முதல் ஆப்பிள் இந்தியாவின் தலைவராக பணியாற்றி வருகிறார்.

இந்த நடவடிக்கையின் வழியாகவே, ஆப்பிள் நிறுவனத்தால் டெல்லி மற்றும் மும்பையில் இரண்டு அதிகாரப்பூர்வ ஸ்டோர்களை திறக்க முடிந்தது. மேலும் ஆப்பிள் பிகேசி (Apple BKC) மற்றும் ஆப்பிள் சாகெட் (Apple Saket) ஆகிய இரண்டுமே, விற்பனையின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் ரீடெயில் ஸ்டோர்களாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia and Apple Joined Their Hands Signed new long term patent cross license agreement
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X