Home
Mobile

புத்திசாலிகள் யாரும் ஜூலை 15 வரை எந்த புது போனும் வாங்க மாட்டாங்க.. அதுக்கு ஒரு காரணம் இருக்கு!

"மிஞ்சி மிஞ்சிப் போனால் ரூ.500.. இல்லனா அதிகபட்சம் ரூ.1000 தள்ளுபடி கிடைக்குமா? அது எனக்கு வேணாம்" என்று ஏளனமாக நினைத்து, ஒவ்வொரு மாதமும் ஏதோவொரு பெயரில் நடக்கும் இ-காமர்ஸ் வலைத்தளங்களின சிறப்பு விற்பனைகளை தவிர்க்கும் எல்லாருமே.. ஏதோவொரு வகையில் ஏமாளிகள் தான்!

மறுகையில் ரூ.200 ரூபாய் தள்ளுபடியாக இருந்தாலும் "அது நமக்கு லாபம் தானே!" என்று நினைத்து, அவரசப்பட்டு எந்தவொரு போனையும் வாங்காமல், நல்ல சலுகைகளுக்காக காத்திருக்கும் எல்லோருமே நிச்சயம் புத்திசாலிகள் தான். அப்படியானவர்களில் நீங்களும் ஒருவரென்றால்.. ஜூலை 15 ஆம் தேதியை குறித்து வைத்துகொள்ளவும்.

புத்திசாலிகள் யாரும் ஜூலை 15 வரை எந்த புது போனும் வாங்க மாட்டாங்க!

ஏனென்றால், அமேசான் ப்ரைம் மெம்பர்களுக்கான அமேசான் ப்ரைம் டே விற்பனையானது (Amazon Prime Day Sale) வருகிற ஜூலை 15 ஆம் தேதியன்று தான் தொடங்கவுள்ளது. வெறும் 2 நாட்கள் மட்டுமே நடக்கும் இந்த சிறப்பு விற்பனையின் கீழ் பல வகையான ஸ்மார்ட்போன்கள் மீது மிகப்பெரிய தள்ளுபடிகள் கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, புதிய ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் அமேசான் ப்ரைம் மெம்பர்கள் இந்த சிறப்பு விற்பனையை சரியாக பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். ஒருவேளை உங்கள் பட்ஜெட் ரூ.10,000 ரூ.20,000, ரூ.30,000, ரூ.50,000 மற்றும் ரூ.60,000 ஆக இருந்தால்.. கீழ்வரும் 5 ஸ்மார்டபோன்களையும் கண்டிப்பாக நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்!

01. ஐபோன் 14 (iPhone 14): உங்கள் பட்ஜெட் ரூ.60,000 ஆக இருந்தால், நீங்கள் கண்களை மூடிக்கொண்டு ஐபோன் 14-ஐ வாங்கலாம். தற்போது இது ரூ.66,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் அமேசான் ப்ரைம் டே விற்பனையின் போது இதன் விலையை ரூ.60,000 வரை குறைக்கமுடியும். இதுபோன்ற சலுகைக்கு அனைவரும் காத்திருப்பார்கள் என்பதால் "அவுட் ஆப் ஸ்டாக்" என்று அறிவிக்கப்படும் முன்பே ஆர்டர் செய்வது நல்லது.

02. ஐக்யூ 11 (iQOO 11): உங்கள் பட்ஜெட் ரூ.50,000 என்றால் ஐக்யூ 11-ஐ நம்பி வாங்கலாம். தற்போது இது ரூ.54,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஆனால் ஜூலை 15 தொடங்கும் அமேசான் ப்ரைம் டே விற்பனையின் போது இதன் விலையை ரூ.49,000 ஆக குறைக்கமுடியும்.

03. ரெட்மி கே50ஐ 5ஜி (Redmi K50i 5G): ரூ.30,000 க்கு கீழ் ஒரு நல்ல பெர்ஃபார்மென்ஸ் ஸ்மார்ட்போனை எதிர்பார்ப்பவர்களை இந்த ஸ்மார்ட்போனை கருத்தில் கொள்ளலாம். தற்போது இது ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கிறது. அமேசான் ப்ரைம் டே விற்பனையின் போது இதன் விலை ரூ.21,000 ஆக அல்லது ரூ.22,000 ஆக குறையலாம்.

04. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் (OnePlus Nord CE 3 Lite): ரூ.20,000 க்குள் ஒரு நல்ல ஒன்பிளஸ் போனை தேடுபவர்களுக்கு இதுவொரு பெஸ்ட் ஆப்ஷன் ஆகும். தற்போது இது ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது. அமேசான் ப்ரைம் டே விற்பனையின் போது, இது ரூ.1000 என்கிற தள்ளுபடியை பெறுமென்று எதிர்பார்க்கலாம்.

05. ரியல்மி நார்சோ என்53 (Realme Narzo N53): இது ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் ஒரு நல்ல ஸ்மார்ட்போனாகும். இது ஏற்கனவே ரூ.8,999 என்கிற விலைக்கு வாங்க கிடைக்கிறது; அமேசான் ப்ரைம் டே விற்பனையின் போது, இதன் விலை இன்னும் குறையும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Prime Members Be Ready Next Amazon Prime Day Sale Starts on July 15 Check Best Deals on Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X