நோக்கியாவின் புதிய 3310 உங்கள் உயிரையே காப்பாற்றும்! எப்படி தெரியுமா?

By Siva
|

நான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்ற 'கபாலி' பட வசனம் மிகச்சரியாக நோக்கியா 3310 மாடலுக்கு பொருந்துகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் சற்றும் சளைக்காமல், தற்போதுள்ள ஆரோக்கியமான போட்டியில் நோக்கியும் களத்தில் குதிக்கின்றது.

நோக்கியாவின் புதிய 3310 உங்கள் உயிரையே காப்பாற்றும்! எப்படி தெரியுமா?

இந்த மாடலை அறிமுகம் செய்யும் ரஷ்ய நிறுவனமான கேவியர் என்ற நிறுவனம் இந்த மாடலுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமின் புதினுக்கு நிகரான சக்தியை கொண்டது என்று அறிமுகம் செய்கிறது.

சுப்ரீமோ புதின் என்ற பெயரில் அரிமுகமாகவுள்ள இந்த நோக்கியா 3310 மாடல் கோல்ட் நிறத்தில் யாரும் எதிர்பார்க்காத விலையில் அதாவது $1690 (ரூ.1,12,785) விலையில் வெளிவரவுள்ளது. ரஷ்யாவை தவிர வேறு நாடுகளில் இந்த சுப்ரீமோ புதின் மாடல் விற்பனையாவது கொஞ்சம் கடினம்தான். ஆனால் ரஷ்யாவில் புதினின் பெயருக்காகவே அவரது ஏராளமான ரசிகர்கள் வாங்குவதற்கு காத்திருக்கின்றனர்.

நோக்கியாவின் புதிய 3310 உங்கள் உயிரையே காப்பாற்றும்! எப்படி தெரியுமா?

இந்த நோக்கியா 3310 புதிய மாடலில் அப்படி என்ன விசேஷம் இருக்கின்றது என்பது குறித்து பார்ப்போம். இந்த மாடலில் ஆடம்பர டிசைனோ, ஒளிரச்செய்யும் வேலைப்பாடுகளோ இல்லை. ஆனால் இதில் மிக முக்கியமான புல்லட்புரூப் உள்ளது.

ஆம், நோக்கியா நிறுவனம் இந்த மாடலை முழுக்க முழுக்க டைட்டானியம் என்ற உலோகத்தால் உருவாக்கியுள்ளதால் இந்த போனை துப்பாக்கி குண்டுகள் துளைக்க முடியாது. ஒரு துப்பாக்கி குண்டை இந்த போன் துளைக்க முடியாது என்று இந்த மாடலின் பேட்டர்னில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது தான் இந்த போனின் சிறப்பு

இந்த நோக்கியா 3310 மாடல் குறித்து கேவியர் நிறுவனம் மேலும் கூறியபோது, 'அதிகபட்ச பலமுள்ள டைட்டானியம் உலோகத்தால் இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளதால் இதன் சக்தி குறித்து குறைத்து மதிப்பிட வேண்டாம். உடைக்க முடியாது, மிக வலிமையான பாடியால் இந்த போன் கவரப்பட்டுள்ளதற்கு மிலிட்டரியில் பயன்படுத்தப்படும் ஸ்டீலுக்கு இணையானது இந்த போன் என்று கூறியுள்ளது.

ஐபோன்8, 7எஸ் &7எஸ் பிளஸ் கருவிகள் பார்க்க இப்படிதான் இருக்கும்.!

இந்த போனை யாராவது சோதனை செய்ய விரும்பினால் துப்பாக்கி குண்டு காரணமாக அந்த நபரின் சட்டையில் மட்டும் ஒரு பெரிய ஓட்டை விழும் என்பது உறுதி என்று அடித்து கூறுகிறது கேவியர் நிறுவனம். இந்த போனின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.3 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போன் தனது உரிமையாளரின் உயிரை காக்கும் அளவுக்கு வலிமையான போனாக இருப்பதால் இந்த போனை வாங்குவது குறித்து உங்கள் கருத்து என்ன என்பதை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்

Most Read Articles
Best Mobiles in India

English summary
A Russian company called Caviar has launched a newly designed Nokia 3310 (2017) with a titanium body.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X