வார்த்தைகள், சைகைகளை வைத்து பொய் சொல்பவர்களை கண்டுப்பிடிக்கலாம்..!

Written By:

பொலிகிராஃப் (Polygraph) என்றால் என்னவென்று தெரியுமா ? பொலிகிராஃப் என்பது உலகில் பெருமளவில் பொய்யை கண்டறிய பயன்படுத்தப்படும் கருவிகளில் ஒன்றாகும். இந்த கருவியானது இதயத்துடிப்பு, குருதியமுக்கம், தோலின், மின்கடத்துதிறன், சுவாச வீதம் போன்றவைகளை கணக்கீடு செய்து பொய்களை கண்டறியும். அப்படியான பொலிகிராஃப் கருவியை மிஞ்சும்படியாக பொய்யை கண்டறியும் சாப்ட்வேர் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

வார்த்தைகள், சைகைகளை வைத்து பொய் சொல்பவர்களை கண்டுப்பிடிக்கலாம்..!

75% துல்லியமாக செயல்படும் இந்த சாப்ட்வேரை உருவாக்கியது மிச்சிகன் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது பேசுபவர் களின் வார்த்தைகள் மற்றும் சைகைகளில் இருந்து உண்மை எது பொய் எது என்பதை பிரித்து பார்க்கும் படியாக உருவாக்கப்பட்டுள்ளது.

வார்த்தைகள், சைகைகளை வைத்து பொய் சொல்பவர்களை கண்டுப்பிடிக்கலாம்..!

இந்த ஆய்வில் இருந்து பொய் சொல்பவர்கள் தங்கள் கைகளை அதிகமாக அசைப்பார்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளன. மேலும், "உம்", "அஹ", "உஹ" போன்ற வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தி பேசுவது மற்றும் கண்கள், புருவங்கள், கைகள், தலை போன்றவைகளின் குறிப்பிட்ட 9 வகையான அசைவுகள் மூலம் இந்த சாப்ட்வேர் தயாராகி உள்ளது.

வார்த்தைகள், சைகைகளை வைத்து பொய் சொல்பவர்களை கண்டுப்பிடிக்கலாம்..!

பொய்யை கணடறியும் சாப்ட்வேரை உள்ளடக்கிய இயந்திரமானது, பொய்கள் மற்றும் உண்மைகள் நிறைந்த சுமார் 120 வீடியோ கிளிப்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :
டிப்ஸ் : எது போலி..? எது நிஜம்..? கண்டுபிடிப்பது எப்படி..!
ஸ்மார்ட்போனை பயன்பாடு : அனைவரும் செய்யும் தவறுகள்.!!
அவசர காலத்தில் மின்சாரமின்றி போனினை சார்ஜ் செய்வது எப்படி.??

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Read more about:
English summary
New software analyzes words, gestures to detect lies. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot