ஸ்மார்ட்போனை பயன்பாடு : அனைவரும் செய்யும் தவறுகள்.!!
ஸ்மார்ட்போன் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே ஆகி விட்டது. யாரை பார்த்தாலும் ஸ்மார்ட்போனை வைத்து பார்த்து கொண்டிருக்கும் நிலை உள்ளது. இதன் பயன்பாடு அதிகம் என்றாலும் சிலர் இதை சரியாக பய்னபடுத்துவதில்லை என்பதுதான் உண்மை. இதனால் தகவல் பரிமாற்றத்தின் போது பல பிழைகள் நடக்கின்றன. இதனால் உங்கள் ரகசியங்கள் மற்றவர் அறியும் படி இருக்கின்றது. சில நேரங்களில் சேமித்து வைத்த தரவுகள் களவு போகும் நிலையும் உள்ளது.
இம்மாதிரியான பிரச்சனைகளை தவிர்க்க ஸ்மார்ட்போனை கையாளும் விதத்தின் அறிவு அவசியம். ஸ்மார்ட்போனை ஒழுங்காக பயன்படுத்தி பலன் பெற இதோ பத்து டிப்ஸ்.

பொது வை-பை
பொதுவான வை-பை நெட்வர்க்குகளை பயன்படுத்துவது மலிவுதான் ஆனால் அவைகள் பெரிய அளவில் உங்கள் தகவல்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில்லை. இதில் ஆபத்து என்னவென்றால் வை-பை நெட்வர்கை யாரேனும் கண்காணிக்க கூடும். நீங்கள் பரிமாறிகொள்ளும் தகவல்களை அவர்களால் கண்கானிக்க முடியும். உங்களுக்கே தெரியாமல் உங்கள் டிவைஸை அவர்கள் பயன்படுத்தி கொள்ளும் அபாயமும் உள்ளது.

ஆண்டி வைரஸ்
ஸ்மார்ட்போனை பயன்படுத்த பலருக்கு தெரிவதில்லை. ஸ்மார்ட்போனுக்கு வைரஸ் அபாயம் அதிகம் உள்ளது. ஆண்டி வைரஸ் பொருத்த மறந்தால் அதாவது உங்கள் சாதனத்தில் வைரஸ் பயன்பாடு நிறுவியை புறகணித்தால் உங்கள் கணினியில் இருந்து கோப்புகளை பரிமாறும் போது வைரஸ் பரவுவதையோ தாக்குவதையோ தவிர்க்க முடியாது.

மேம்படுத்தல்
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களும், அதன் பயன்பாட்டை முன்னோக்கி எடுத்து செல்பவர்களும் ஸ்மார்ட்போன் பிரச்சினைகளை சரி செய்யவும் அதன் செயல்பாட்டை மேம்படுத்தவும், பாதுகாப்பு விரிசல்களை சரி செய்யவும் என்று பல விதங்களில் முயற்சி செய்து மென்பொருள் மேம்படுத்துதல் கூறுகளை வழங்குகின்றனர். உங்கள் போனை அடிக்கடி அப்டேட் செய்து கொள்ள வேண்டும். அதிலும் OEM வழங்கிய OS அப்டேட் மற்றும் ஆப்ஸ் அப்டேட் போன்றவற்றை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

ஆப்ஸ்
உங்கள் ஸ்மார்ட் போனில் சேமிக்கும் தரவுகளுக்கான பயன்பாடுகளை பற்றிய தெளிவான அறிவு உங்களுக்கு தேவை படுகின்றது. நீங்கள் எந்த பயன்பாட்டையும் பதிவிறக்கம் செய்யும் முன் ஒரு நம்பகமான பயன்பாடு மேம்பாட்டாளரிடம் இருந்து பெறுதல் அவசியம். அதை செய்யும் முன் அதை பற்றிய ஆய்வையும் கூறுகளையும் பற்றி நன்கு படித்து பின் செய்தல் நல்லது.

லிங்ஸ்
ஸ்மார்ட்போன் பாதுகாப்பு பற்றிய ஆராய்ச்சியாளர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு சில பாதுகாப்பு நடவடிக்கைகளை ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களுக்கு என்று வழங்கி உள்ளனர். அவர்களின் கூற்று படி கணினி பயன்படுத்துபவர்களை விட ஸ்மார்ட்போனில் நெட் பயன்பாடு மிகவும் ஆபத்து என்று கூறுகின்றனர். போலியான லாகின் பக்கத்தை ஸ்மார்ட்போனில் கண்டு பிடிப்பது என்பது மிக மிக கடினம். இதை தவிர்க்க சிறந்த வழி என்னவென்றால் உரை செய்தி அல்லது உடனடி செய்தி பயன்பாடுகளின் மூலம் அனுப்பப்படும் இணைப்புகளை (Links) கிளிக் செய்வதை தவிர்ப்பதே.

ஸ்மார்ட்போன் ரூட்டிங்
ஸ்மார்ட்போன் ரூட்டிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சில உரிமைகளை வழங்கியுள்ளது. அதாவது அண்ட்ராய்டு போனை பயன்படுத்துபவர்கள் கஸ்டம் ROM மற்றும் பொருந்தாத ஆப்ஸையும் இன்ஸ்டால் செய்ய உரிமை வழங்கி உள்ளது. ஆனால் இதற்கு வாரண்டி கிடையாது. எனினும், ரூட் அணுகலை பயன்பாடுகள் போனுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

லாக்
நீங்கள் ஸ்மார்ட் போனை பயன்படுத்தி பின் ஒவ்வொரு முறையும் அதை லாக் செய்ய வேண்டும். இது உங்களுக்கு எரிச்சலாகதான் இருக்கும். ஆனால் பின் கோடு கொண்டோ அல்லது மற்ற வழிகளிலோ ஸ்மார்ட்போனை பயன்படுத்திய பின் லாக் செய்வது மிகவும் அவசியம். இதனால் உங்கள் தகவலை மற்றவர் அறிந்து கொள்ளாதபடி காத்து கொள்ள முடியும். தற்பொழுது புதிய ஸ்மார்ட்போன்களில் உங்கள் கைரேகையை கொண்டும் லாக் செய்ய முடியும்.

சுவிட்ச் ஆஃப்
ஜிபிஎஸ், ப்ளூடூத் மற்றும் வை-பை போன்ற சேவைகளை ஸ்மார்ட் போனில் பயன்படுத்தும் நபரா நீங்கள். அப்பொழுது இதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு பயன்பாட்டின் முடிவில் அவற்றை அணைத்து வைப்பது அவசியம். இதனால் உங்கள் பேட்டரி பாதுகாக்கப் படும் அதை விட உங்கள் தகவலை யாரும் அறியாத படி பார்த்து கொள்ள முடியும்.

லாக் அவுட்
ஸ்மார்ட் போனில் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய நீங்கள் ப்ளிப்கார்ட், ஈபே, அமேசான் போன்ற ஆப்ஸை பயன்படுத்தினால் லாக் இன் (log in) செய்து பயன்படுத்தி விட்டு பின்பு லாக் அவுட் (log out) செய்து விடுங்கள். மறந்தால் உங்கள் பணம் ஆபத்தில் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

முக்கிய விவரங்கள்
உங்கள் போனில் முக்கிய விவரங்களை சேமிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் டெபிட் கார்ட், ஆன்லைன் கடவுச் சொல் போன்றவற்றின் தகவலை போனில் வைக்காமல் இருப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications








