இதோ அடுத்த ஆப்பு வச்சிட்டாங்க.. SIM கார்டு, Google Pay-வை தொடர்ந்து புதிய IT விதிகள்.. 2024 ஆரம்பமே இப்படியா!
2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல், சிம் கார்டுகளுக்கான புதிய விதிகள் (New SIM Card Rules) தொடங்கி கூகுள் பே, பேடிஎம் போன்றவைகளுக்கான புதிய யுபிஐ விதிகள் (New UPI Rules) வரையிலாக.. பல புதிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன.
அதனொரு பகுதியாக, இந்திய அரசாங்கம் 2021 ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப விதிகளை (Information Technology (IT) Rules of 2021) திருத்தம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருத்தங்கள் விரைவில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் (Ministry of Electronics and Information Technology) அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடி விதிகளில் என்ன மாதிரியான திருத்தங்களை எதிர்பார்க்கலாம்? ஏன் இந்த திடீர் நடவடிக்கை? இந்திய அரசாங்கமானது, செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் (Artificial intelligence companies) மற்றும் ஜெனரேட்டிவ் ஏஐ மாடல்களை (Generative AI models) ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த ஒழுகுபடுத்தலின்கீழ் 3 முக்கியமான விதிகள் கொண்டுவரப்படும். முதலாவதாக - ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் அல்காரிதம்கள் (Artificial intelligent algorithms) அல்லது லேங்குவேஜ் மாடல்களை (Language models) பயன்படுத்தி தங்கள் மெஷின்களை பயிற்றுவிக்கும் தளங்கள் எந்தவிதமான "சார்பும்" இல்லாமல் (No Bias) இருக்க வேண்டும்.

இரண்டாவதாக - டீப்ஃபேக் மற்றும் சிந்தடிக் கன்டென்ட்டை (Deepfake and Synthetic content) சரிபார்ப்பதற்கான மற்றும் தடுப்பதற்கான புதிய விதிகளை இந்திய அரசாங்கம் கொண்டு வரலாம். மூன்றாவதாக - லோன் ஆப்களுக்கான (Loan Apps), அதன் கடன் அளிக்கும் ஆப்களுக்கான கடுமையான வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்படும்.
இதற்கு முன்னதாக ஆன்லைன் பேங்கிங் (Online Banking) மற்றும் கட்டண பரிவர்த்தனை (Payment Transaction) அனுபவத்தில் கணிசமான மேம்பாடுகளை கொண்டுவரும் நோக்ககத்தின்கீழ் இந்திய ரிசர்வ் வங்கியானது (Reserve Bank of India - RBI) கூகுள் பே, பேடிஎம் மற்றும் போன்பே போன்ற ஆப்களுக்கான புதிய யுபிஐ விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அமலுக்கு கொண்டு வந்தது. இதுகுறித்த விரிவான தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

அதற்கு முன்னதாக பேங்க் லாக்கர் ஒப்பந்தங்கள் ( Bank Locker Agreements), காப்பீட்டு கொள்கை (Insurance Policy), வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return Filing), சிம் கார்டு விதிமுறைகள் (SIM Card Regulations) போன்றவைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. இதுகுறித்த விரிவான தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








