புது EPFO ரூல்ஸ்.. UAN, Aadhaar இருக்குற PF அக்கவுண்ட்களுக்கு அடிச்ச அதிர்ஷ்டம்.. நிலுவைகள் இனி இல்லை!
இபிஎப்ஓ (EPFO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organization) ஆனது கடந்த வாரம் அதன் உறுப்பினர்களுக்கான புதிய விதிகளை (New Rules) அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த புதிய விதியானது மெம்பர்கள் தங்கள் இபிஎப்ஓ ப்ரொபல்-ஐ அப்டேட் செய்யும் செயல்முறையை எளிமைப்படுத்தும் நோக்கத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இபிஎப்ஓ-வின் புதிய விதியின்படி, ஏற்கனவே ஆதார் (Aadhaar) மூலம் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (Universal Account Number - UAN) சரிபார்ப்பை நிகழ்த்திய உறுப்பினர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களை (Personal information) இபிஎஃப்ஓ போர்ட்டல் (EPFO Portal) வழியாகவே அப்டேட் செய்யலாம்.

மேலும், இபிஎப்ஓ உறுப்பினர்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம், தேசியம், தந்தை அல்லது தாயின் பெயர், திருமண நிலை, மனைவியின் பெயர், சேரும் மற்றும் புறப்படும் தேதிகள் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களை எந்த ஆதார ஆவணங்களையும் (Supporting documents) பதிவேற்றாமல் அப்டேட் செய்ய முடியும்.
1-10-2017 க்கு முன்னர் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர்-ஐ பெறப்பட்ட சில அக்கவுண்ட்களுக்கு மட்டும், அப்டேட் செய்வதற்க்கு எம்பிளாயரின் சான்றிதழ் (certification of employer) தேவைப்படும் என்று தொழிலாளர் அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இபிஎப்ஓ-வின் இந்த புதிய விதிகளானது பல்வேறு கட்டங்களில், நிலுவையில் உள்ள சுமார் 3.9 லட்சம் உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு நேரடியாக பயனளிக்கும்.
சுய-அங்கீகாரம் (Self-approve) செய்யக்கூடிய எந்தவொரு இபிஎப்ஓ உறுப்பினரும், ஏற்கனவே எம்பிளாயரிடம் நிலுவையில் உள்ள தனது கோரிக்கையை தாக்கல் செய்திருந்தால், அவர்கள் தாங்கள் செய்த கோரிக்கையை நீக்கி விட்டு, இபிஎப்ஓ-வின் புதிய விதிகளின் கீழ் எளிமைப்படுத்தப்பட்ட செயல்முறையின்படி செல்ப்-அப்ரூவ் (self-approve) செய்து கொள்ளலாம்.
பெரும்பான்மையான கோரிக்கைகள் ஆனது உறுப்பினர்கள் நேரடியாக தாங்களாகவோ அல்லது சில தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் எம்பிளாயரால் சுயமாக அங்கீகரிக்கப்படலாம் என்றும் இபிஎப்ஓகுறிப்பிட்டுள்ளது ஆன்லைன் செயல்பாட்டில் செய்யப்பட்டுள்ள இந்த எளிமைப்படுத்தல், உறுப்பினர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் சரிசெய்வதற்கும், தரவு நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், பிழைகளின் அபாயத்தை குறைப்பதற்கும், உறுப்பினர்களுக்கு திறமையான சேவையை முறையாக வழங்குவதற்கும் உதவும் இபிஎப்ஓ கூறியுள்ளது.
உறுப்பினர் விவரங்களை மாற்றுவதற்கு அல்லது திருத்துவதற்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால், தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து ஆன்லைனில் தங்கள் கோரிக்கைகளை தாக்கல் செய்யக்கூடிய ஒரு செயல்பாட்டை இபிஎப்ஓ ஏற்கனவே வழங்கி உள்ளது. இதுபோன்ற கோரிக்கைகள் ஆன்லைன் மூலம் எம்பிளாயரால் அங்கீகரிக்கப்பட்டு இறுதி ஒப்புதலுக்காக இபிஎப்ஓ-க்கு அனுப்பப்படும்.
நடப்பு நிதியாண்டில், இபிஎப்ஓ-க்கு எம்பிளாயர்களால் மூலம் திருத்தம் செய்ய மொத்தம் 8 லட்சம் கோரிக்கைகள் வந்துள்ளன. இவற்றில், மாற்ற கோரிக்கைகளில் கிட்டத்தட்ட 45 சதவிகித கோரிக்கைகள் ஆனது எம்பிளாயர் சரிபார்ப்பு அல்லது ஒப்புதல் இல்லாமலேயே உறுப்பினரால் செல்ப்-அப்ரூவ் பெற முடியும். இதன்மூலம் ஜாயிண்ட் டிக்ளரேஷன்களை அங்கீகரிக்க எம்ப்ளாயர் எடுக்கும் 28 நாட்கள் (சராசரியாக) தாமதம் தானாகவே நீக்கப்படும்.
இதேபோல இந்தியா முழுவதும் உள்ள டெலிகாம் வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் ஒரு புதிய டிராய் விதியும் அமலுக்கு வந்துள்ளது. லிகாம் நிறுவனங்கள் ஆனது எஸ்டிவி (STV) என்று அழைக்கப்படும் வாய்ஸ் மற்றும் மெசேஜ்களுக்கென ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர்களை (Special Tariff Vouchers) அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற டிராய்-ன் சமீபத்திய உத்தரவிட்டு இருந்தது.
அதற்கு இணங்கும் விதமாக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மற்றும் சுனில் பார்தி மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் நிறுவனம் ஆகிய 2 நிறுவனங்களுமே தலா 2 புதிய வாய்ஸ் அன்ட் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டங்களை (Voice and SMS Only Plans) அறிமுகம் செய்துள்ளன. அதுகுறித்த விரிவான கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








