Home
News

Jio-வை தொடர்ந்து TRAI-யிடம் சரண்டர் ஆன Airtel.. டேட்டா இல்லாமல் 2 புதிய Voice & SMS Only பிளான்கள் அறிமுகம்!

டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (Telecom Regulatory Authority of India) கட்டளையின்படி, பாரதி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனமானது அதன் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கான வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டங்களை (Voice and SMS Only Plans) அறிமுகப்படுத்தி உள்ளது.

வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி பிரிவின் கீழ் 2 புதிய திட்டங்களோடு சேர்த்து, நீண்ட கால வேலிடிட்டி உடன் குறைவான டேட்டா நன்மையை வழங்கும் மேலும் 2 புதிய திட்டங்கள் என மொத்தம் 4 திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவைகளின் விலை நிர்ணயம் என்ன? எவ்வளவு நாள் வேலிடிட்டி? என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

Airtel: டேட்டா இல்லாமல் 2 புதிய Voice & SMS Only பிளான்கள் அறிமுகம்!

01. ஏர்டெல் ரூ.499 வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 499 Voice and SMS Only Plan): ஏர்டெல்லின் இந்த புதிய ரூ.499 திட்டத்தின்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 900 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். கூடுதலாக ஏர்டெல் ரிவார்ட்ஸின்கீழ் 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸும் கிடைக்கும்.

02. ஏர்டெல் ரூ.1,959 வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 499 Voice and SMS Only Plan): ஏர்டெல்லின் இந்த புதிய ரூ.1,959 ப்ரீபெய்ட் திட்டத்தின்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3,600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். கூடுதலாக ஏர்டெல் ரிவார்ட்ஸின்கீழ் 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸும் கிடைக்கும்.

03. ஏர்டெல் ரூ.548 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 548 Prepaid Plan Details): குறைந்த அளவிலான டேட்டா மற்றும் 84 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியை மிகவும் மலிவான விலையில் வழங்கும் திட்டத்தை தேடுபவர்களுக்கென ஏர்டெல் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அல்லது அதன் பழைய ரூ.509 திட்டத்தை புதிய ரூ.548 திட்டத்துடன் திருத்தியமைத்துள்ளது என்றும் கூறலாம்.

ஏர்டெல்லின் ரூ.548 ப்ரீபெய்ட் திட்டமானது 7ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 900 எஸ்எம்எஸ்கள் ஆகியவைகளை வழங்கும். கூடுதலாக இது ஏர்டெல் ரிவார்ஸின் கீழ் 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் இலவச ஹலோ ட்யூன்களை வழங்குகிறது. ரூ.509 உடன் ஒப்பிடும் போது, இது ரூ.39 விலை அதிகரிப்புடன் இப்போது கூடுதலாக 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது

04. ஏர்டெல் ரூ.2,249 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 2249 Prepaid Plan Details): குறைந்த அளவிலான டேட்டா மற்றும் 1 ஆண்டு அல்லது 365 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியை மிகவும் மலிவான விலையில் வழங்கும் திட்டத்தை தேடுபவர்கள் இந்த புதிய திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். இதன் ஏர்டெல் நிறுவனத்தின் பழைய ரூ.1,999 திட்டத்தின் திருத்தமாகும்.

நன்மைகளை பொறுத்தவரை ஏர்டெல்லின் ரூ.2,249 ப்ரீபெய்ட் திட்டமானது 30ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 900 எஸ்எம்எஸ்கள் ஆகியவைகளை வழங்கும். கூடுதலாக இது ஏர்டெல் ரிவார்ஸின் கீழ் 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் இலவச ஹலோ ட்யூன்களை வழங்குகிறது. ரூ.1,999 உடன் ஒப்பிடும் போது, இது ரூ.250 விலை அதிகரிப்புடன் இப்போது கூடுதலாக 6ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

ஜியோ நிறுவனமும் கூட 2 புதிய வாய்ஸ்-எஸ்எம்எஸ் ஒன்லி பிளான்களை அறிமுகம் செய்துள்ளது: ஒன்றின் விலை ரூ.458 ஆகும் (Jio Rs 458 Voice SMS Only Plan Details) இது 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 1000 எஸ்எம்எஸ்கள், ஜியோடிவி, ஜியோசினிமா (பிரீமியம் சந்தா அல்ல) மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய ஆப்களுக்கான இலவச அணுகல் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

இரண்டாவது - ஜியோ ரூ.1,958 வாய்ஸ்-எஸ்எம்எஸ் ஒன்லி பிளான் (Jio Rs 1958 Voice SMS Only Plan Details) ஆகும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 ஆண்டு அல்லது 365 நாட்கள் நாட்கள் ஆகும். இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஜியோடிவி, ஜியோசினிமா (பிரீமியம் சந்தா அல்ல) மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய ஆப்களுக்கான இலவச அணுகல்கள் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Launched 2 New Voice and SMS Only Plans After TRAI Mandate Telecom Rule
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X