BSNL புதிய அல்ட்ரா பிளான்.. 6500ஜிபி, 9 ஓடிடி, 500 சேனல்.. Airtel, Jio-வுடன் சேர்த்து கேபிள் TV-க்கும் குட்பை!
அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) ஒரு புதிய அதிவேக பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இது பல ஓடிடி சந்தாக்கள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களுடன் மாதத்திற்கு 6500ஜிபி அளவிலான டேட்டாவையும் வழங்குகிறது.
நாம் இங்கே பேசுவது - பிஎஸ்என்எல் ஃபைபர் அல்ட்ரா ஓடிடி பிளானை (BSNL Fiber Ultra OTT Plan) பற்றித்தான். பல நபர்களை கொண்ட குடும்பங்கள் மற்றும் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு மற்றும் அதிக அளவிலான எட்ட தேவை உள்ளவர்களுக்கு தஇந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கூடவே பிஎஸ்என்எல்-ன் இந்த திட்டம் ரிலையன்ஸ் ஜியோ (Jio), பார்தி ஏர்டெல் (Airtel) மற்றும் வோடாபோன் ஐடியா (Vodafone Idea) ஆகியவற்றின் பிராட்பேண்ட் திட்டங்களுடன் நேரடியாக போட்டியிடவும் செய்கிறது. பிஎஸ்என்எல் ஃபைபர் அல்ட்ரா ஓடிடி பிளானின் விலை நிர்ணயம் என்ன? இதன்கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:
பிஎஸ்என்எல் ஃபைபர் அல்ட்ரா ஓடிடி பிளானின் விலை மற்றும் நன்மைகள்: இந்த திட்டம் மாதத்திற்கு ரூ.1,799 க்கு ரீசார்ஜ் செய்ய (BSNL Rs 1799 Fiber Ultra OTT Plan) கிடைக்கிறது. இது 300 எம்பிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடில் மாதத்திற்கு 6500ஜிபி அல்லது 6.5டிபி டேட்டாவை வழங்கும். டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர் இந்த பிளானின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 20எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
அதாவது 6500ஜிபி முடிந்தவுடன், பயனர்கள் கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் 20 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். மேலும் கூடுதல் கட்டணமின்றி 8 ஓடிடி இயங்குதளங்களுக்கான இலவச சந்தாக்கள், 500 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களுக்கான அணுகலும் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஓடிடி மற்றும் டிவி நன்மைகளின் விவரங்கள்: இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, இது 8 ஓடிடி இயங்குதள சந்தாக்களை இலவசமாக வழங்குகிறது: ஜியோ ஹாட்ஸ்டார், சோனி லைவ், ஜீ5, லயன்ஸ்கேட் பிளே, ஷீமாரூமீ, எபிகான் மற்றும் யப் டிவி.
நினைவூட்டும் வண்ணம் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஆனது மிகவும் சமீபத்தில் அறிமுகமான ஓடிடி தளமாகும். இந்த புதிய இயங்குதளமானது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய தளங்களின் முழு கன்டென்ட் லைப்ரரியையும் ஒன்றிணைக்கும் தளமாகும். இதன்கீழ் மொத்தம் 7 வகையான திட்டங்கள் உள்ளன. அதுகுறித்த விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் ஜியோஹாட்ஸ்டார் தளத்தின் கீழ் "வழக்கமான" நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் தவிர, பல்வேறு சர்வதேச ஸ்டுடியோக்கள் (International studios) மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களில் (Streaming platforms) இருக்கும் கன்டென்ட்களையும் அணுக முடியும். ஜியோஹாட்ஸ்டார் தளத்தின்கீழ் சுமார் 300,000 மணிநேர கன்டென்ட் (300000 hours of content) மற்றும் லைப் ஸ்போர்ட்ஸ் கவரேஜ் (Live sports coverage) அணுக கிடைக்கும் என்று ஜியோஸ்டார் கூறியுள்ளது.
பிஎஸ்என்எல் ஃபைபர் அல்ட்ரா ஓடிடி ரூ.1,799 திட்டமானது மேற்கண்ட 8 ஓடிடி தளங்களுக்கான அணுகல்களோடு சேர்த்து, அதன் சந்தாதாரர்களுக்கு 500 க்கும் மேற்ப்பட்ட லைவ் டிவி சேனல்களுக்கான அணுகல்களையும் வழங்குகிறது. இதில் செய்திகள், விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் பிராந்திய கன்டென்ட்களும் அடக்கம்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க புதிய பயனர்களை ஊக்குவிக்க, பிஎஸ்என்எல் நிறுவனமானது வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு மார்ச் 31, 2025 வரை இலவச பிராட்பேண்ட் நிறுவலையும் வழங்குகிறது. இத இலவச சலுகை ஆனது வாடிக்கையாளர்களுக்கு ஆரம்பகால செட்டப் செலவுகளை சேமிக்க உதவும். இந்த சலுகையைப் பெற ஆர்வமுள்ள பயனர்கள், மேலதிக விவரங்களுக்கு பிஎஸ்என்எல் இணையதளம் அல்லது மொபைல் ஆப்பை சரிபார்க்கவும்.


Click it and Unblock the Notifications








