1 இல்ல 2 இல்ல.. 7 JioHotstar திட்டங்கள் அறிமுகம்.. மாதாந்திரம் வெறும் ரூ.42 முதல், வருடத்திற்கு ரூ.1499 வரை!
எங்கு திரும்பினாலும் ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotStar) விளம்பரம் தான். ஜியோ ஹாட்ஸ்டார் என்பது ஜியோ சினிமா (JioCinema) மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை (Disney Plus Hotstar) ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட புதிய ஓடிடி ஸ்ட்ரீமிங் தளம் (New OTT Streaming Platform) ஆகும்.
அதாவது 2 தனித்தனி ஓடிடி இயங்குதளங்களாக இருந்த ஜியோசினிமாவும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரும் ஒரே தளமாக மாற்றப்பட்டுள்ளது; இரண்டின் கீழும் கிடைத்த அனைத்து கன்டென்ட்களும் இனி ஒரே தளத்தில் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) போட்டிகள் மற்றும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து போன்ற விளையாட்டுகளும் அடங்கும்.

கூடவே இந்த புதிய ஸ்ட்ரீமிங் இயங்குதளமானது 10 மொழிகளில் கன்டென்ட்களை வழங்கும் மற்றும் பல்வேறு சர்வதேச ஸ்டுடியோக்கள் மற்றும் என்பிசி யுனிவர்சல் பீகாக், வார்னர் பிரதர்ஸ், டிஸ்கவரி, எச்பிஓ மற்றும் பாரமவுண்ட் போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகளின் கீழ் கிடைக்கும் கன்டென்ட்களையும் ஒருங்கிணைக்கும்.
1 மாதத்திற்கு வெறும் ரூ.42 என்கிற செலவில் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை பெறுவது எப்படி? ஜியோ ஹாட்ஸ்டார் சேவையின் கீழ் மொத்தம் 3 வகையான சந்தா திட்டங்கள் உள்ளன: மொபைல் பிளான், சூப்பர் பிளான் மற்றும் ப்ரீமியம் பிளான். இதில் மொபைல் பிளான் தான மிகவும் மலிவான திட்டமாகும். மேலும் இது 2 வகையான சந்தா விருப்பங்களுடன் வருகிறது.
ஒன்று - 3 மாத கால சந்தாவுடன் வரும் மொபைல் பிளான். விளம்பர ஆதரவுடன் வரும் இந்த திட்டம், ஒரு நேரத்தில் ஒரே ஒரு மொபைலில் மட்டும், எச்டி ரெசல்யூஷனின் (720பி) கன்டென்ட்களை பார்க்க அனுமதிக்கும். இந்த திட்டத்தின் விலை ரூ.149 ஆகும். அதாவது மாதத்திற்கு ரூ.50 என்கிற செலவின் கீழ் இது கிடைக்கும்.
இரண்டாவது - 1 ஆண்டு கால சந்தாவுடன் வரும் மொபைல் பிளான்: இதுவும் ரூ.149-ஐ போலவே விளம்பர ஆதரவுடன் வரும் இந்த திட்டமாகும். மேலும் ஒரு நேரத்தில் ஒரே ஒரு மொபைலில் மட்டுமே எச்டி ரெசல்யூஷனின் (720பி) கன்டென்ட்களை பார்க்க அனுமதிக்கும். ஆனால் இது 1 ஆண்டு அல்லது 12 மாதங்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது.
1 ஆண்டு வேலிடிட்டி உடன் வரும் இந்த திட்டத்தின் விலை ரூ.499 ஆகும். அதாவது மாதத்திற்கு சுமார் ரூ.42 என்கிற செலவின் கீழ் இது கிடைக்கும். 3 மாத கால சந்தாவுடன் ஒப்பிடும் போது, இந்த திட்டத்திற்கான மாதாந்திர செலவு ரூ.8 குறைவானதாக உள்ளது.
ஒருவேளை உங்களுக்கு மொபைல் சப்போர்ட் மட்டுமே போதாது. மாறான லேப்டாப், ஸ்மார்ட் டிவி அல்லது மல்டிபிள் டிவைஸ்களுக்கான ஆதரவு வேண்டும் என்றால் அல்லது விளம்பரங்கள் இல்லாத ஸ்ட்ரீமிங் எக்ஸ்பீரியன்ஸ் வேண்டும் என்றால் ஜியோஹாட்ஸ்டாரின் சூப்பர் பிளான் அல்லது பிரீமியம் பிளானை தேர்வு செய்யலாம்.
ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள்: இதுவும் விளம்பர ஆதரவுடன் வரும் திட்டம் தான். ஆனால் இது ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களுக்கான லாக்-இன்களை அனுமதிக்கும். மேலும் ஃபுல்எச்டி (1080பி) ரெசல்யூஷனில் கன்டென்ட்களை பார்க்க அனுமதிக்கிறது மற்றும் இது டால்பி அட்மோஸ் ஆதரவுடன் வருகிறது. விலை மூன்று மாதங்களுக்கு - ரூ.299 மற்றும் 12 மாதங்களுக்கு - ரூ.899.
ஜியோஹாட்ஸ்டார் ப்ரீமியம் திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள்: இது விளம்பரங்கள் இல்லாத திட்டமாகும். இது ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களுக்கான லாக்-இன்களை அனுமதிக்கும். மேலும் 4கே ரெசல்யூஷனில் கன்டென்ட்களை பார்க்க அனுமதிக்கும். ஆனால் விளையாட்டு மற்றும் பிற லைவ் நிகழ்வுகலில் சில விளம்பரங்கள் இருக்கும் என்று ஜியோஸ்டார் நிறுவனம் கூறுகிறது. விலை 1 மாதத்திற்கு ரூ.299, 3 மாதங்களுக்கு - ரூ.499 மற்றும் 12 மாதங்களுக்கு - ரூ.1499.


Click it and Unblock the Notifications








