Home
News

மொபைல் போட்டோகிராபிக்கு என்னென்ன உபகரணங்கள் வாங்கலாம்.?

மொபைல்போனில் ஒருசில கருவிகளை இணைத்தால் அதில் இருந்து கிடைக்கும் புகைப்படத்தின் தரம் அதிசயிக்க வைக்கும்.

By Siva

நீங்கள் ஒரு புதிய மொபைல் போன் வாங்க செல்கின்றீர்கள் என்றால் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பிராஸசர், பேட்டரி, ஓஎஸ், டிஸ்ப்ளே, சைஸ். இவையெல்லாம் முக்கியம் தான். ஆனால் ஒவ்வொருவரும் மொபைல் போன் வாங்கும்போது முதலில் கவனிப்பது கேமிராதான்

மொபைல் போட்டோகிராபிக்கு என்னென்ன உபகரணங்கள் வாங்கலாம்.?

எத்தனை எம்பி செல்பி கேமிரா, எத்தனை எம்பி பின் கேமிரா, ரெசலூசன் மற்றும் புகைப்படத்தின் தரம் இவற்றைத்தான் அனைவரும் முதலில் பார்ப்பார்கள்.

பிளிப்கார்ட் எக்ஸ்சேன்ஞ்சில் ரூ.9,990/-க்கு ஆப்பிள் ஐபோன் 6.!

பண்டிகை நாட்களில் அலுவலகத்திலும், வீட்டிலும் எடுத்து வைக்கும் புகைப்படங்கள் பின்னாளில் நமது மலரும் நினைவுகளை அசைபோட வைக்க உதவும்

தற்போது மொபைல் போன் கேமிராவில் அதிக தரம் இருந்தாலும் ஒரு புரபொசனல் கேமிராவில் உள்ள தெளிவு, அவுட்புட் கிடைக்குமா? என்று கேட்டால் இல்லை என்ற பதில்தான் வரும். என்னதான் ஆப்பிள் ஐபோனில் புகைபப்டம் எடுத்தாலும் ஒரு புரபொசனல் கேமிரால் படம் எடுத்ததற்கு ஈடு ஆகாது.

மலிவு விலையில் டூவல் ரியர் கேமிரா, நீண்ட பேட்டரி கொண்ட ஹானர் 6எக்ஸ்.!

ஆனால் அதே நேரத்தில் மொபைல்போனில் ஒருசில கருவிகளை இணைத்தால் அதில் இருந்து கிடைக்கும் புகைப்படத்தின் தரம் அதிசயிக்க வைக்கும். அவை என்னென்ன பொருட்கள் என்று பார்ப்போமா?

பாக்கெட் ஸ்பாட்லைட் (Pocket Spotlight)

பாக்கெட் ஸ்பாட்லைட் (Pocket Spotlight)

பொதுவாக புகைப்படம் எடுக்கும்போது பெரும் பிரச்சனையாக இருப்பது வெளிச்சம்தான். என்னதான் மொபைல்போனில் பிளாஷ் இருந்தாலும் நல்ல வெளிச்சம் இருந்தால்தான் புகைப்படம் தெளிவாக இருக்கும். இதற்கு உதவும் உபகரணம்தான் பாக்கெட் ஸ்பாட்லைட்.

இந்த லைட்டை மொபைல்போனுடன் பொருத்தி கொண்டால் நல்ல வெளிச்சத்தை தரும். அதிக வெளிச்சம், சுமாரான வெளிச்சம், மிக சுமாரான வெளிச்சம் தரும் வகையில் மூன்று விதமாக இந்த பாக்கெட் ஸ்பாட்லைட் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாக்கெட் ஸ்பாட்லைட், ஹெட்போன் போல சிறிய அளவில் பாக்கெட்டில் வைத்து கொள்ளும் அளவில் இருக்கும். மேலும் இதில் தனியாக பேட்டரி பொருத்தப்பட்டு உள்ளதால் உங்கள் மொபைல் போனின் பேட்டரி இதனால் வீணாகாது.

டிரைபாட்ஸ் (Tripods)

டிரைபாட்ஸ் (Tripods)

புகைப்படங்கள் எடுக்கும்போது பலருக்கு ஏற்படும் பிரச்சனை கை நடுங்குவது. புகைப்படம் எடுக்கும்போது கை அசையாமல் இருக்க வேண்டும். இல்லையெனில் எடுக்கப்படும் புகைப்படத்தில் தெளிவு இருக்காது. எனவே இதற்காக உங்களுக்கு உதவும் உபகரணம்தான் டிரைபாட்ஸ்.

இந்த டிரைபாட்ஸ்-இல் மொபைல் போனை பொருத்திவிட்டு புகைப்படம் எடுத்தால் தெளிவாக இருக்கும். குறிப்பாக சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை தொடர்ந்து பல ஷாடுக்கள் எடுக்க வேண்டும் என்றால் இந்த உபகரணம் மிகவும் உதவியாக இருக்கும்

செல்பி ஸ்டிக்:

செல்பி ஸ்டிக்:

இன்று செல்பிதான் உலகம் என்று மாறிவிட்டது. ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்கள் செல்பி எடுக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். சிலர் ஆபத்தான் செல்பியை எடுத்து உயிரையும் இழந்து வருவதை பார்த்துவருகிறோம்.

இந்நிலையில் செல்பியை சரியான கோணத்தில் எளிமையாக எடுக்க நமக்கு உதவும் உபகரணம்தான் செல்பி ஸ்டிக். குறிப்பாக குரூப்பாக செல்பி எடுக்கும்போது இந்த ஸ்டிக் இல்லாமல் எடுக்க முடியாது. புளூடூத் மூலம் இயங்கும் செல்பி ஸ்டிக்களும் இப்போது வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

அடிஷனல் லென்ஸ்:

அடிஷனல் லென்ஸ்:

தற்போது ஒரு முழு குறும்படத்தையே தரமான செல்பியில் எடுத்து விடுகின்றனர். அதற்கு காரணம் மொபைல் போனில் பொருத்தப்படும் அடிஷனல் லென்ஸ்தான். இந்த லென்ஸ் மூலம் சரியான கோணத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் மிக எளிதாக எடுக்க முடியும். இந்த லென்ஸ் பலவகைகளில், பல வடிவத்தில் கிடைக்கின்றது

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Must-have smartphone camera accessories to capture DSLR-like picture.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X