Home
News

பிளிப்கார்ட் எக்ஸ்சேன்ஞ்சில் ரூ.9,990/-க்கு ஆப்பிள் ஐபோன் 6.!

ஆப்பிள் ஐபோன் கருவியின் முந்தைய மாறுபாடு ஆன ஐபோன் 6 இப்போது வெறும் ரூ.9,990/-க்கு பிளிப்கார்ட்டில் விற்பனை.!

By Muthuraj

ஐபோன் என்பது பெரும்பாலானோர்களின் கனவு கருவி என்றே கூறலாம். அந்த கனவு எப்போதுமே ஒரு பகல் கனவாகவே கழிய முக்கிய காரணமாக அக்கருவியின் விலை திகழ்கிறது. ஆப்பிள் ஐபோன் கருவிகளின் விலை சார்ந்த நமது புலம்பல் ஆப்பிள் நிறுவனத்திற்கு கேட்டதோ இல்லையோ, பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு கேட்டு விட்டது போலும்.

பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் முந்தைய ஐபோன் மாறுபாடான ஐபோன் 6 ஸ்மார்ட்போன் கருவியை ரூ.10,000/-க்கும் குறைவான விலையில் ஒரு புதிய எக்ஸ்சேன்ஜ் தள்ளுப்படியின் கீழ் ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளமான பிளிப்கார்ட் விற்பனை செய்கிறது. பிளிப்கார்ட் இணையதளம் மூலம் கிடைக்கும் இந்த ஐபோன் 6 கருவியின் விண்வெளி சாம்பல் நிற, 16ஜிபி மாறுபாட்டில் ரூ.22,000/- என்றவொரு மிகப்பெரிய தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

ஐபோன் 6 (16 ஜிபி மாறுபாடு)

ஐபோன் 6 (16 ஜிபி மாறுபாடு)

மேலும் பயனர்கள் தங்கள் வங்கி அட்டைகளை பயன்படுத்தி தயாரிப்பை வாங்கினால் மேலும் 5% தள்ளுபடி பெறுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரூ.31,990/- என்ற விலை கொண்ட ஐபோன் 6 (16 ஜிபி மாறுபாடு) கருவியை இந்த அனைத்து தள்ளுபடிகளின் கீழும் கிட்டத்தட்ட ரூ.27,000/- தள்ளுப்படி நிகழ, நீங்கள் ரூ.10,000/-க்கும் குறைவான விலையில் அதை வாங்க முடியும்.

அதிகபட்சமாக ரூ.22,000/-

அதிகபட்சமாக ரூ.22,000/-

இந்த எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பின் கீழ் ஒரு ஸ்மார்ட்போன்களின் பட்டியல் உள்ளது மற்றும் அதன்கீழ் அதிகபட்சமாக ரூ.22,000/- வரை பழைய ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியானது பயனர்கள் பரிமாற்றம் செய்யும் கருவிகளை சார்ந்ததாக இருந்தாலும் கூட, அதிகபட்ச தள்ளுபடியானது ஆப்பிள் ஐபோன் 6 எஸ் சாதனத்திற்குததான் வழங்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ரூ.2,000 அதிகரிப்பு

ரூ.2,000 அதிகரிப்பு

ஐபோன் 6 எஸ் கருவி கொண்டுள்ளவர்கள் யாரும் ஐபோன் 6 கருவிக்காக அதை எக்ஸ்சேன்ஜ் செய்வது மிகவும் குறைவு என்பது ஒருபக்கமிருக்க வழக்கமான ஐபோன் ப்ளிப்கார்ட் எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பை காட்டிலும் இம்முறை ரூ.2,000 அதிகரிப்பு ஏற்பட்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

பேட்டரி சார்ந்த குற்றசாட்டுகள்

பேட்டரி சார்ந்த குற்றசாட்டுகள்

இந்த தள்ளுபடியின் கீழ் வெள்ளி சாம்பல் 16ஜிபி ஐபோன் 6 மாடல் மட்டுமே கிடைக்கும். மேலும் பிற எக்ஸ்சேன்ஜ் வாய்ப்புகளை பயனப்டுத்தி ரூ .20,000/- வரை சமீபத்திய ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஆகிய கருவிகளிலும் தள்ளுபடி பெற முடியும். தற்செயலாக, ஆப்பிள் ஐபோன் 6 கருவியில் பேட்டரி சார்ந்த குற்றசாட்டுகள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது அதாவது விரைவாக சார்ஜ் தீர்ந்து போவதகவும், கிட்டத்தட்ட 30% பேட்டரி லைஃப் மீதம் இருக்கும்போதேபோன் ஸ்விட்ச் ஆப் ஆகி விடுவதாகவும் குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.

மேலும் படிக்க

மேலும் படிக்க

அடடே சொல்லவைக்கும் சாம்சங் ஏ (2017) தொடரின் விலை/அம்சங்கள்.!

Best Mobiles in India

English summary
Flipkart sells Apple iPhone 6 for under Rs 10,000 in a new exchange offer. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X