Home
News

50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!

சர்வதேச சந்தையில் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் உடன்
மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போனும் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி73 5ஜி

மோட்டோ ஜி73 5ஜி

ஏற்கனவே நாம் இந்த மோட்டோ ஜி53 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களை விரிவாகப் பார்த்துவிட்டோம். இப்போது மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை மட்டும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

அதாவது மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 1080 X 2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

 Dimensity 930 சிப்செட்

Dimensity 930 சிப்செட்

மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 930 சிப்செட் உடன் IMG BXM-8-256 GPU ஆதரவு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு

256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு

இந்த மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இதில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதி

5000 எம்ஏஎச் பேட்டரி வசதி

மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் சிறந்த பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 30 வாட்ஸ் டர்போ சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி73 5ஜி
ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஜி73 5ஜி  விலை

மோட்டோ ஜி73 5ஜி விலை

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு இந்த போனின் விலை EUR 300 (இந்திய மதிப்பில் ரூ.26,700) ஆக உள்ளது. விரைவில் இந்த
போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Moto G73 5G with 50MP cameras Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X