Home
Mobile

சம்பவம்னா இதுதான்: ரூ.10,500க்கு 50எம்பி கேமரா உடன் 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த Moto!

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ எக்ஸ்40 ஆண்ட்ராய்டு போனை கடந்த வியாழக் கிழமை அறிமுகம் செய்தது. இது மிகவும் சக்தி வாய்ந்த ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த நிலையில் நிறுவனம் மற்றொரு மலிவு விலையில் ஒரு 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது. அதாவது நிறுவனம் பட்ஜெட் விலையில் Moto G53 என்ற பட்ஜெட் ஆண்ட்ராய்ட் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது.

ரூ.10,500க்கு 50எம்பி கேமரா உடன் 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த Moto!

பட்ஜெட் விலையில் Moto G53 5G கிடைக்கிறது என்றாலும் இதில் பல்வேறு மேம்பட்ட அம்சங்கள் இருக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி பிரதான கேமரா, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே உள்ளிட்ட பல சக்தி வாய்ந்த அம்சங்கள் இருக்கிறது. இதில் கவனிக்கத்தக் விஷயம் பட்ஜெட் விலையில் 5ஜி போன் என்பது தான்.

Motorola Moto G53 5ஜி ஸ்மார்ட்போனானது 720 X 1,600 பிக்சல்கள் தீர்மானத்துடனான 6.5 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 720 பிக்சல் திர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகித ஆதரவைக் கொண்டிருக்கிறது.

அதேபோல் இந்த பட்ஜெட் விலை Moto G53 5G ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480+ SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

மோட்டோ அறிமுகம் செய்த சமீபத்திய ஜி சீரிஸ் ஸ்மார்ட்போனில் 50 எம்பி பிரதான கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் என டூயல் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என 8 எம்பி கேமரா முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செல்பி கேமரா ஃபேஸ் அன்லாக் ஆதரவுக்காகவும் செயல்படுகிறது.

மோட்டோரோலாவின் மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதை சார்ஜ் செய்வதற்கு என 18 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. யூஎஸ்பி டைப்-சி ஆதரவும் இதில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் எடை 183 கிராம் ஆகும். ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MyUI 5.0 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஐபி52 மதிப்பீட்டைக் கொண்டிருக்கிறது.

Moto G53 5G விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Moto G53 5G ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது சீனாவில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரிண்ட்களில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வைட் மற்றும் பிளாக் வண்ண விருப்பங்களில் வெளியாகி உள்ளது.

ரூ.10,500க்கு 50எம்பி கேமரா உடன் 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த Moto!

மோட்டோரோலாவின் இந்த ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனம் உறுதி செய்யவில்லை என்றாலும் இந்தியா உட்பட சர்வதேச சந்தைகளில் Moto G53 5G அறிமுகம் செய்யப்படும் என அதிகளவு எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோரோலா நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

50 எம்பி பிரதான கேமரா, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே என பல மேம்பட்ட அம்சங்களுடன் பட்ஜெட் விலை 5ஜி போனாக இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் இது அமோக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோ ஜி53 5ஜி இன் நிர்ணய விலை குறித்து பார்க்கையில், இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 899 (தோராயமாக ரூ.10,500) எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,099 (தோராயமாக ரூ.13,000) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto Launched its 5G Smartphone at Rs.10,999: Moto G53 5G Specs, Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X