Home
News

மோட்டோரோலா வீடியோவில் இருந்து வெளியான மோட்டோ X 2017 குறித்த தகவல்கள்

மோட்டோரோலா வீடியோவில் இருந்து வெளியான மோட்டோ X 2017 குறித்த தகவல்கள்

By Siva

மொபைல் சேவை உலகில் காலடி எடுத்து வைத்து 44 ஆண்டுகள் நிறைவு பெறுவதை அடுத்து மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ அமெரிக்காவின் அதிகாரபூர்வ யூடியூப் சேனலில் ஒரு வீடியோ அப்லோட் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அப்லோட் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவில் விரைவில் வெளியாகவுள்ள மோட்டோ X 2017 மாடல் குறித்த அரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன

மோட்டோரோலா வீடியோவில் இருந்து வெளியான மோட்டோ X 2017 குறித்த தகவல்கள்

மோட்டோ அமெரிக்காவின் யூடியூப் சேனலில் பதிவு செய்யப்படுள்ள இந்த வீடியோவில் மோட்டோரோலாவின் பழைய போன்கள் முதல் சமீபத்திய வெளியீடான மோட்டோ G5 மாடல்கள் வரையிலான தகவல்கள் உள்ளன.

இவற்றில் நமக்கு தெரிவிக்கும் ஒரு செய்தியாக மோட்டோ X 2017 குறித்த தகவல்களும் உள்ளன. இந்த வீடியோவில் நீல நிறத்தில் பளிச்சென தெரியும் ஒரு புதிய மாடல் மோட்டோ X 2017 என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோரோலா வீடியோவில் இருந்து வெளியான மோட்டோ X 2017 குறித்த தகவல்கள்

நீங்கள் மோட்டோ G5 குறித்த தகவல்களை ஞாபகம் வைத்து இருந்தீர்கள் என்றால், இரு மாடல்களுக்கும் இடையே வேறு பெரிய வித்தியாசங்கள் இல்லை என்பதை உணர்வீர்கள். மேலும் இந்த மோட்டோ X 2017 மாடல் டூயல் கேமிரா என்று சமீபத்தில் செய்தி வெளியானது. ஆனால் இந்த வீடியோவில் உள்ள இந்த மாடலின் படத்தை பார்க்கும்போது அது சிங்கிள் கேமிரா மாடல் போன்றே தெரிகின்றது.

மேலும் இந்த மாடலின் பின்பக்கத்தில் ஒரு ஸ்பீக்கர் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றது. இந்த ஸ்பீக்கர் இதற்கு முன்னர் வெளியான இந்த மாடல்களின் புகைப்படத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வீடியோவில் இருந்து வெள்ளை நிற மாடல் ஒன்று மோட்டோ X 2017 போல தெரிகிறது. அதன் பின்பக்கத்தில் ஸ்பீக்கர் இருப்பது தெரிகின்றது. ஆனால் வேறு எந்த முக்கிய விஷயங்களையும் இந்த வீடியோவில் இருந்து புரிந்து கொள்ள முடியவில்லை.

லாவா இசெட்25 : விலை மற்றும் சிறப்பம்சங்கள்.!

ஒருசில நாட்களுக்கு முன்னர் டுவிட்டரில் அவ்வப்போது இதுகுறித்த செய்திகளை லீக் செய்யும் ரோலண்ட் குவாண்டிட் என்பவர் தனது டுவீட்டில் கூறியபோது, 'மோட்டோ X 2017 மாடல் சாண்டர்ஸ் மற்றும் XT180x ஆகிய கோட் பெயர்களில் வெளிவர வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

மேலும் அவர் இந்த மோட்டோ X 2017 மாடலின் மற்ற விபரங்கள் குறித்து கூறியபோது, இந்த மாடலில் 12 MP கேமிரா , ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர், 3GB/4GB ரேம் மற்றும் 32/64 GB ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் என்று தனது டுவீட்டில் கூறியுள்ளார். இந்த விபரங்கள் மோட்டோ X 2017 மாடலுடன் பொருந்துகின்றதா? என்பதை இந்த மாடல் வெளியாகும்போதுதான் தெரியவரும்

Best Mobiles in India

English summary
Motorola is celebrating 44 years of cellular mobility. The company has posted a video that shows many of its mobiles and smartphones. It also shows a glimpse of the Moto X (2017) and a mysterious white smartphone.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X