மைக்ரோசாஃப்ட் லூமியா 535 வெளியாகியிருக்கு, நீங்க வாங்கிட்டீங்களா?

Written By:

ஒரு வழியாக மைக்ரோசாஃப்ட் லூமியா 535 வெளியானது, ஸ்மார்ட்போன் சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் என்பதோடு நோக்கியா பெயர் நீக்கப்பட்ட முதல் போன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாஃப்ட் லூமியா 535 வெளியாகி விட்டது..

லூமியா 535 டூயல் சிம் கொண்ட 5 இன்ச் ஸ்மார்ட்போன், க்லாஸி ப்ளாஸ்டிக் கவர் மற்றும் மைக்ரோசாஃப்ட் லோகோ கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. கியுஎஹ்டி டிஸ்ப்ளே மற்றும் 960*540 பிக்ஸல் 854*480 ரெடல்யூஷன் இருக்கின்றது. மேலும் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் சிபியு மற்றும் ஸ்னாப்டிராகன் 200 சிப்செட் இருப்பதோடு 1 ஜிபி ராம் மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

கேமராவை பொருத்த வரை எல்ஈடி ப்ளாஷ் ஆட்டோபோக்கஸ் வசதி கொண்ட 5 எம்பி ப்ரைமரி கேமராவும், 5 எம்பி முன் பக்க கேமராவும் இருப்பது பலரையும் கவரும் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. லூமியா 535 விண்டோஸ் போன் 8.1 மூலம் இயங்குவதோடு 1900 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. மேலும் 3ஜி, 4ஜி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய லூமியா 535 மாடலில் ஸ்கைப் வீடியோ கால், ஆபிஸ் ஆப்ஸ் மற்றும் கார்டெனா வசதிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Microsoft launches Lumia 535 smartphone without Nokia logo. Here is the first Microsoft smartphone with lumia brand.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot