போச்சு.. ஜூன் 1 முதல் Gas புக் செய்ய புது ரூல்ஸ்.. புக்கிங் இன்டர்வல், சிலிண்டர் ரீஃபில் செய்வதில் மாற்றம்?
ஓஎம்சி-க்கள் (OMCs) என்கிற எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (oil marketing companies) ஆனது தொடர்ந்து பெரும் நஷ்டங்களை சந்தித்து வருவதால், எல்பிஜி விலைகள் உயரக்கூடும் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது. மேலும் வருகிற ஜூன் 1 ஆம் தேதி முதல் எல்பிஜி எரிவாயு சிலிண்டர் முன்பதிவிலும் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதோடு எல்பிஜி ரீபில் முடக்க காலம் (LPG refill lock-in period) மற்றும் இந்தேன் கேஸ், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி கேஸ் கனெக்ஷன்களை ஒப்படைக்கும் செயல்முறை (process of surrendering) ஆகியவற்றில் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் திருத்தங்களை செய்யலாம் என்கிற எதிர்பார்ப்புகளும் உள்ளன.

எல்பிஜி விலை உயர்வு: ஓஎம்சி-க்கள், வர்த்தக எரிவாயு விலையை இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிக விகிதத்தில் உயர்த்தியுள்ளன. கொல்கத்தாவில் ரூ.1,147 என்ற மிகப்பெரிய விலை உயர்வு பதிவாகியுள்ளது, இதன் மூலம் ஒரு சிலிண்டரின் விலை ரூ.3,355 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல சென்னையில், 19 கிலோ எல்பிஜி விலை ரூ.1,013 உயர்த்தப்பட்டு ரூ.3,259.5 ஆக உள்ளது. மும்பையில், 19 கிலோ சிலிண்டர் ரூ.3,046.5-க்கு விற்கப்படுகிறது. டெல்லியில், இது ரூ.3,071.5-க்கு விற்கப்படுகிறது.
பிஎன்ஜி (PNG) கனெக்ஷன் பெற்ற பிறகு 30 நாட்களில் எல்பிஜி இணைப்பை துண்டிக்க அரசு உத்தரவு: மத்திய அரசு தனது எல்பிஜி திருத்த ஆணை 2026-ஐ கடந்த மே 25 ஆம் தேதி அன்று வெளியிட்டது. இது, பிஎன்ஜி இணைப்புகளையும் பெற்றுள்ள வீட்டு உபயோக எல்பிஜி நுகர்வோருக்கு கூடுதல் தளர்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
இந்த புதிய விதியின்படி, ஒரு தனிநபர் பிஎன்ஜி இணைப்பை பெறும்போது, அவர் தனது எல்பிஜி இணைப்புகளை துண்டிக்க 30 நாட்கள் காலக்கெடு வழங்கப்படும். பிஎன்ஜி இணைப்பு பெற்ற பிறகு வாடிக்கையாளர்கள் தங்கள் எல்பிஜி இணைப்பை துண்டிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதால், அவர்கள் தங்கள் எல்பிஜி இணைப்பை மீண்டும் பெற அனுமதிக்கும் ஒரு விதிமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வீட்டிற்கு ஒரு எரிவாயு இணைப்பு: எல்பிஜி எரிவாயுவின் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த நடவடிக்கைகளில் ஒன்று, 'ஒரு வீட்டிற்கு ஒரு எரிவாயு இணைப்பு' என்ற விதியை அது முன்னெடுத்து வருகிறது. மேலும் பிஎன்ஜி இணைப்புகளை ஊக்குவிக்கவும், எல்பிஜி மீதான சார்பை குறைக்கவும், பிஎன்ஜி வாடிக்கையாளர்கள் புதிய எல்பிஜி இணைப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
எரிவாயு சிலிண்டர் முன்பதிவுக்கான முடக்கக் காலம்: எரிவாயு நிரப்புவதற்காக, ஏற்கனவே உள்ள 45 நாள் முடக்க காலத்தை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMCs) திருத்தியமைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, எல்பிஜி கொள்முதல் இடைவெளியை நகர்ப்புறங்களுக்கு 25 நாட்களாகவும், கிராமப்புறங்களுக்கு 45 நாட்களாகவும் நீட்டித்துள்ளது. முன்னதாக, இந்த இடைவெளி 21 நாட்களாக இருந்தது.
இதோடு சேர்த்து கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) ஆகிய ஆப்களை உள்ளடக்கிய யுபிஐ சேவையில் (UPI Service) மாற்றங்கள்.. பணப்பரிமாற்றம் (Transaction), மினி ஸ்டேட்மென்ட் (Mini Statement), ஏடிஎம் சார்ஜ் (ATM Charge) ஆகியவைகளை உள்ளடக்கிய வங்கித்துறை மாற்றங்கள் (Banking Changes).. புதிய பான் கார்டு விதிகள் (New PAN Card rules) என.. 2026 ஜூன் மாதத்தில் பல முக்கியமான ஒழுங்குமுறை மாற்றங்கள், புதிய விதிகள் அமலுக்கு வரவுள்ளன. அதுகுறித்த விரிவான கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications