ஜூன் 1 முதல் மொத்தமா மாறுது.. UPI, ATM சார்ஜ், Gas, PAN கார்டு புது ரூல்ஸ்.. ஒரே நேரத்தில் 4 பெரிய மாற்றங்கள்!
கூகுள் பே, போன்பே ஆகிய ஆப்களை உள்ளடக்கிய யுபிஐ சேவையில் மாற்றங்கள்.. பணப்பரிமாற்றம், மினி ஸ்டேட்மென்ட், ஏடிஎம் சார்ஜ் ஆகியவைகளை உள்ளடக்கிய வங்கித்துறை மாற்றங்கள்.. புதிய பான் கார்டு விதிகள் என.. 2026 ஜூன் மாதத்தில் பல முக்கியமான ஒழுங்குமுறை மாற்றங்கள், புதிய விதிகள் (New Rules) அமலுக்கு வரவுள்ளன.
மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் பணம் பரிமாற்றம் மற்றும் வங்கி அட்ஜெஸ்ட்மென்ட்கள்: டிஜிட்டல் மோசடியை கட்டுப்படுத்தும் நோக்கில், என்பிசிஐ (NPCI) என்கிற இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (National Payments Corporation of India) ஆனது மிகவும் வெளிப்படையான பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்துகிறது.

ஒரு க்யூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்யும்போது அல்லது ஒரு மொபைல் எண்ணை உள்ளிடும்போது, யுபிஐ ஆப்கள் பெறுநரின் சரிபார்க்கப்பட்ட, வங்கியில் பதிவுசெய்யப்பட்ட பெயரை ஸ்க்ரீனில் காண்பிக்கும். இது, பயனரால் வரையறுக்கப்பட்ட புனைப்பெயர்கள் அல்லது சரிபார்க்கப்படாத அடையாளங்களுக்கு பதிலாக, மோசடிக்காரர்கள் நுகர்வோரை ஏமாற்றுவதை மிகவும் கடினமாக்குகிறது.
மேலும், இபிஎப்ஓ (EPFO) என்கிற ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees' Provident Fund Organisation) ஆனது யுபிஐ மூலம் நேரடியாக வருங்கால வைப்பு நிதியை எடுக்க அனுமதிக்கும் சோதனைகளை இறுதி செய்து வருகிறது. இது, பாரம்பரிய பரிவர்த்தனைகளுக்கு ஒரு வேகமான மாற்றை அறிமுகப்படுத்துகிறது. இதன் விளைவாக பாரம்பரிய வங்கி சேவைகள் சற்று அதிக செலவு மிக்கதாக மாறக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
பல வணிக வங்கிகள் தங்களின் பரிவர்த்தனை கட்டமைப்புகளைச் சரிசெய்து வருகின்றன. இதன் பொருள், ஏடிஎம் (ATM) என்கிற தானியங்கி பண இயந்திரங்களின் வழியாக - பணம் எடுத்தல் (cash withdrawals), மினி ஸ்டேட்மென்ட் கோரிக்கைகள் (mini-statement requests) மற்றும் பேலன்ஸ் விசாரணைகளுக்கு (balance enquiries) அதிக கட்டணங்கள் விதிக்கப்படலாம்.
புதிய பான் கார்டு (PAN Card) கட்டாயங்கள்: அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க உள்கட்டமைப்புக்கான ஒழுங்குமுறை சூழலும் மாறி வருகிறது. புதுப்பிக்கப்பட்ட 2026 வரி வரையறைகளின்படி, ரூ.50,000 க்கு மேல் உள்ள சாதாரண தினசரி ரொக்க வைப்புகளுக்கு நிரந்தர கணக்கு எண் (PAN) இனி கட்டாயமில்லை.
சொத்து விற்பனைக்கு பான் தேவைப்படும் வரம்பு ரூ.10 லட்சத்தில் ஒருந்து ரூ.20 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், பெரிய பரிவர்த்தனைகள் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது: ரூ.45 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள சொத்து ஒப்பந்தங்கள், அன்பளிப்பு பத்திரங்கள் மற்றும் கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தங்களுக்கு இப்போது பான் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சத்திற்கு மேல் ஆண்டுதோறும் ரொக்கமாக பணம் எடுக்கும்போதும், ஆட்டோமெடட் பான் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
எரிசக்தி விலைகள்: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் உள்ள வழக்கமான நடைமுறையின்படி, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG), அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) மற்றும் குழாய்வழி இயற்கை எரிவாயு (PNG) ஆகியவற்றின் விலைகளை மதிப்பாய்வு செய்து புதுப்பிக்கின்றன. கடந்த மாதத்தில் வணிக ரீதியான 19-கிலோகிராம் சிலிண்டர் விலைகளில் ஏற்பட்ட கடுமையான உயர்வுகளை தொடர்ந்து, மேலும் விலை உயர்வுகள் ஏற்படக்கூடும் என்பது குறித்து உள்ளூர் சந்தைகள் எச்சரிக்கையாக உள்ளன.
வரிக் காலக்கெடு மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள்: ஜூன் மாதம் தொடங்கும் நிலையில், வரி செலுத்துவோரும் முதலீட்டாளர்களும் தொடர்ச்சியான மாற்றங்களுக்கு விரைவா தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். மிக முக்கியமான உடனடி தேதி ஜூன் 15, 2026 ஆகும், இது 2026-27 நிதியாண்டிற்கான தங்களின் முதல் முன்வரி தவணையை (First advance tax instalment) தனிநபர்கள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவாகும்.
மதிப்பிடப்பட்ட நிகர வரிப் பொறுப்பு ரூ.10,000 க்கு மேல் உள்ள வரி செலுத்துவோர், இந்த தேதிக்குள் தங்களின் முன்வரியில் 15 சதவீதத்தை செலுத்த வேண்டும். முக்கியமாக, இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரிச் சட்டம் 2025 மற்றும் வருமான வரி விதிகள் 2026 ஆகியவற்றின் கட்டமைப்பின் கீழ் முழுமையாக செயல்படும் முதல் முன்கூட்டி வரி செலுத்தும் சுழற்சியை குறிக்கிறது.
இந்த காலக்கெடுவை தவறவிட்டால், மாதத்திற்கு 1 சதவீத வட்டி அபராதம் விதிக்கப்படும். அதே நேரத்தில், சம்பளம் பெறும் நபர்கள் பழைய வரி விதிப்பின் கீழ் திருத்தப்பட்ட விலக்குகளை பெற்று வருகின்றனர். குழந்தைகள் கல்வி உதவித்தொகை விலக்கு, ஒரு குழந்தைக்கு மாதத்திற்கு ரூ.100 இலிருந்து ரூ.3,000 ரூபாயாக கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், விடுதி உதவித்தொகை விலக்கு மாதத்திற்கு ரூ.9,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, பெங்களூரு, புனே, ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அதிகாரப்பூர்வமாக 50 சதவீத வீட்டு வாடகைப்படி விலக்கு பிரிவில் (House Rent Allowance exemption category) சேர்க்கப்பட்டு உள்ளன.


Click it and Unblock the Notifications