Home
News

கேபிள் டிவியை முடிச்ச கையோடு Smart TV-க்கு வந்த அம்பானி.. JioTele OS அறிமுகம்.. எந்தெந்த டிவிகளில் கிடைக்கும்?

3 மாதங்களுக்கு வெறும் ரூ.149 முதல் என்கிற விலைக்கு அறிமுகமாகி, பல வீடுகளில் உள்ள கேபிள் டிவி கனெக்ஷன்களை கட் செய்ய தூண்டியுள்ள ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) அறிமுகத்தை தொடர்ந்து.. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது ஸ்மார்ட் டிவிகளுக்கான தனது சொந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆன ஜியோடெலி ஓஎஸ்-ஐ (JioTele OS) அறிமுகம் செய்துள்ளது.

இது ஸ்மார்ட் டிவிக்கான இந்தியாவின் முதல் ஆப்ரேட்டிங் சிஸ்டம் (India's first operating system for smart TV) ஆகும். ஜியோடெலி ஓஎஸ் ஆனது நாளுக்கு நாள் வளர்ந்து வரும் ஸ்மார்ட் டிவிகளுக்கான தேவையை பூர்த்தி செய்யும் அதே வேளையில், ஸ்மார்ட் டிவிகளை தயாரிக்கும் நிறுவனங்கள் ஆனது மலிவான விலையில் நல்ல எக்ஸ்பீரியன்ஸை வழங்க வழிவகுக்கும் என்றும் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

JioTele OS அறிமுகம்.. எந்தெந்த டிவிகளில் கிடைக்கும்?

ஜியோ நிறுவனம் ஆனது அதன் ஜியோடெலி ஓஎஸ்-ஐ "அடுத்த தலைமுறைக்கான தளம்" என்று குறிப்பிடுகிறது மற்றும் இது இந்திய நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்யும் மறுகையில் பொழுதுபோக்கு அனுபவத்தை மறுவரையறை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடுகிறது.

ஜியோடெலி ஓஎஸ் ஆனது தாம்சன், கோடாக், பிபிஎல் மற்றும் ஜேவிசி போன்ற பிராண்டுகளுடன் அறிமுகம் செய்யப்படுவதால், புதிய ஜியோடெலி ஓஎஸ் மூலம் இயங்கும் ஸ்மார்ட் டிவிகள் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2025 ஆம் ஆண்டில் அதிக பிராண்டுகள் இந்த வரிசையில் சேர உள்ளன, இது இந்திய நுகர்வோருக்கு பரந்த அளவிலான விருப்பங்களை உறுதி செய்யும் என்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூறியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் இந்த அறிவிப்பு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) அறிமுகமான வேகத்தில் வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் இந்த புதிய இயங்குதளமானது, ஓடிடி (OTT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் 2 ஓவர்-தி-டாப் (Over-the-top) இயங்குதளங்களின் (ஜியோசினிமா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்) முழு கன்டென்ட் லைப்ரரியையும் ஒன்றிணைக்கிறது. ஜியோவின் இந்த புதிய இயங்குதளம் ஒரு புதிய லோகோவையும் (New Logo) பெறுகிறது, இது சமச்சீரற்ற ஏழு புள்ளிகள் கொண்ட நட்சத்திரத்துடன் ஜியோஹாட்ஸ்டார் என்கிற வார்த்தையை உள்ளடக்குகிறது.

மேலும் ஜியோஹாட்ஸ்டார் தளத்தின் கீழ் "வழக்கமான" நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் தவிர, பல்வேறு சர்வதேச ஸ்டுடியோக்கள் (International studios) மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களில் (Streaming platforms) இருக்கும் கன்டென்ட்களையும் அணுக முடியும். ஜியோஹாட்ஸ்டார் தளத்தின்கீழ் சுமார் 300,000 மணிநேர கன்டென்ட் (300000 hours of content) மற்றும் லைப் ஸ்போர்ட்ஸ் கவரேஜ் (Live sports coverage) அணுக கிடைக்கும் என்று ஜியோஸ்டார் கூறியுள்ளது.

ஜியோ ஹாட்ஸ்டார் சேவையின் கீழ் மொத்தம் 3 வகையான சந்தா திட்டங்கள் உள்ளன: மொபைல் பிளான், சூப்பர் பிளான் மற்றும் ப்ரீமியம் பிளான். இதில் மொபைல் பிளான் தான மிகவும் மலிவான திட்டமாகும். மேலும் இது 2 வகையான சந்தா விருப்பங்களுடன் வருகிறது. ஒன்று - 3 மாத கால சந்தாவுடன் வரும் மொபைல் பிளான்.

ரூ.149 ஆனது விளம்பர ஆதரவுடன் வரும் இந்த திட்டம், ஒரு நேரத்தில் ஒரே ஒரு மொபைலில் மட்டும், எச்டி ரெசல்யூஷனின் (720பி) கன்டென்ட்களை பார்க்க அனுமதிக்கும். இந்த திட்டத்தின் விலை ரூ.149 ஆகும். அதாவது மாதத்திற்கு ரூ.50 என்கிற செலவின் கீழ் இது கிடைக்கும். இரண்டாவது - 1 ஆண்டு கால சந்தாவுடன் வரும் மொபைல் பிளான்: இதுவும் ரூ.149-ஐ போலவே விளம்பர ஆதரவுடன் வரும் இந்த திட்டமாகும்.

1 ஆண்டு வேலிடிட்டி உடன் வரும் இந்த திட்டத்தின் விலை ரூ.499 ஆகும். இது ஒரு நேரத்தில் ஒரே ஒரு மொபைலில் மட்டுமே எச்டி ரெசல்யூஷனின் (720பி) கன்டென்ட்களை பார்க்க அனுமதிக்கும். ஆனால் இது 1 ஆண்டு அல்லது 12 மாதங்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது.

ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள்: இதுவும் விளம்பர ஆதரவுடன் வரும் திட்டம் தான். ஆனால் இது ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களுக்கான லாக்-இன்களை அனுமதிக்கும். மேலும் ஃபுல்எச்டி (1080பி) ரெசல்யூஷனில் கன்டென்ட்களை பார்க்க அனுமதிக்கிறது மற்றும் இது டால்பி அட்மோஸ் ஆதரவுடன் வருகிறது. விலை மூன்று மாதங்களுக்கு - ரூ.299 மற்றும் 12 மாதங்களுக்கு - ரூ.899.

ஜியோஹாட்ஸ்டார் ப்ரீமியம் திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள்: இது விளம்பரங்கள் இல்லாத திட்டமாகும். இது ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களுக்கான லாக்-இன்களை அனுமதிக்கும். மேலும் 4கே ரெசல்யூஷனில் கன்டென்ட்களை பார்க்க அனுமதிக்கும். ஆனால் விளையாட்டு மற்றும் பிற லைவ் நிகழ்வுகலில் சில விளம்பரங்கள் இருக்கும் என்று ஜியோஸ்டார் நிறுவனம் கூறுகிறது. விலை 1 மாதத்திற்கு ரூ.299, 3 மாதங்களுக்கு - ரூ.499 மற்றும் 12 மாதங்களுக்கு - ரூ.1499.

மேலும் ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் படி, 1 ப்ரீபெய்ட் திட்டம், 5 ஜியோ ஃபைபர் திட்டங்கள் மற்றும் 3 ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்கள் என மொத்தம் 9 ஜியோ ரீசார்ஜ்களுடன் ஜியோஹாட்ஸ்டார் சந்தா முற்றிலும் இலவசமாக கிடைக்கும் (Jio Plans with Free JioHotstar Subscription). அதென்ன திட்டங்கள்? என்கிற விவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X