யாரு சொன்னது FREE இல்லனு.. எந்தெந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்தால் JioHotstar இலவசம்.. Jio வெளியிட்ட பட்டியல்!
ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) என்கிற புதிய ஓடிடி ஸ்ட்ரீமிங் தளத்தை அறிமுகம் செய்த கையோடு, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது எந்தெந்த ப்ரீபெய்ட், ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர் ஃபைபர் திட்டங்களின் கீழ் ஜியோஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக கிடைக்கும் என்கிற பட்டியலை தனது வலைத்தளத்தில் புதுப்பித்துள்ளது.
ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் படி, 1 ப்ரீபெய்ட் திட்டம், 5 ஜியோ ஃபைபர் திட்டங்கள் மற்றும் 3 ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்கள் என மொத்தம் 9 ஜியோ ரீசார்ஜ்களுடன் ஜியோஹாட்ஸ்டார் சந்தா முற்றிலும் இலவசமாக கிடைக்கும் (Jio Plans with Free JioHotstar Subscription). அதென்ன திட்டங்கள்? இதோ விவரங்கள்:

01. ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம்: ரிலையன்ஸ் ஜியோ அதன் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளில் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவையும் சேர்த்துள்ளது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, ஜியோ டிவி, ஜியோ க்ளவுட் ஆகிய நன்மைகளுடன் சேர்த்து, இனிமேல் இது 3 மாதங்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவையும் வழங்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.
02. ஜியோஃபைபர் ரூ.999 திட்டம்: 150 எம்பிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களை வழங்கும் இந்த திட்டத்துடன் அமேசான் பிரைம் லைட் மற்றும் 8 மற்ற ஓடிடி சந்தாக்களுடன் சேர்த்து இனிமேல் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவும் இலவசமாக கிடைக்கும்.
03. ஜியோஃபைபர் ரூ.1,499 திட்டம்: 300 எம்பிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களை வழங்கும் இந்த திட்டத்துடன் அமேசான் பிரைம் லைட் மற்றும் 8 மற்ற ஓடிடி சந்தாக்களுடன் சேர்த்து இனிமேல் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவும் இலவசமாக கிடைக்கும்.
04. ஜியோஃபைபர் ரூ.2,499 திட்டம்: 500 எம்பிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களை வழங்கும் இந்த திட்டத்துடன் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் லைட் மற்றும் 8 மற்ற ஓடிடி சந்தாக்களுடன் சேர்த்து இனிமேல் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவும் இலவசமாக கிடைக்கும்.
05. ஜியோஃபைபர் ரூ.3,999 திட்டம்: 1 ஜிபிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களை வழங்கும் இந்த திட்டத்துடன் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் லைட் மற்றும் 8 மற்ற ஓடிடி சந்தாக்களுடன் சேர்த்து இனிமேல் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவும் இலவசமாக கிடைக்கும்.
06. ஜியோஃபைபர் ரூ.8,499 திட்டம்: 1 ஜிபிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் 6600 ஜிபி டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களை வழங்கும் இந்த திட்டத்துடன் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் லைட் மற்றும் 8 மற்ற ஓடிடி சந்தாக்களுடன் சேர்த்து இனிமேல் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவும் இலவசமாக கிடைக்கும்.
07. ஜியோ ஏர்ஃபைபர் ரூ.599 திட்டம்: 1000ஜிபி டேட்டா, 30எம்பிபிஎஸ் ஸ்பீட் மற்றும் இலவச வாய்ஸ் கால்கள் மற்றும் 800 டிவி சேனல்கள் உடன் சேர்த்து இனிமேல் இந்த திட்டம் ஜியோஹாட்ஸ்டார் உட்பட மொத்தம் 9 ஓடிடி சந்தாக்களை இலவசமாக வழங்கும்
08. ஜியோ ஏர்ஃபைபர் ரூ.899 திட்டம்: இந்த திட்டத்தின் கீழ் 100 எம்பிபிஎஸ் என்கிற அளவிலான இண்டர்நெட் ஸ்பீட்டின் கீழ் 1000 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால்கள், 800 டிவி சேனல்கள் உடன் சேர்த்து இனிமேல் ஜியோஹாட்ஸ்டார் சந்தா உட்பட மொத்தம் 13 ஓடிடி சந்தாக்கள் இலவசமாக கிடைக்கும்.
09. ஜியோ ஏர்ஃபைபர் ரூ.1199 திட்டம்: இந்த திட்டத்தின் கீழ் 100 எம்பிபிஎஸ் என்கிற அளவிலான இண்டர்நெட் ஸ்பீட்டின் கீழ் 1000 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால்கள், 800 டிவி சேனல்கள் உடன் சேர்த்து இனிமேல் ஜியோஹாட்ஸ்டார் சந்தா உட்பட மொத்தம் 13 ஓடிடி சந்தாக்கள் இலவசமாக கிடைக்கும். இதில் கூடுதலாக நெட்பிளிக்ஸ் சந்தாவும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications