Home
News

வெறும் ரூ.50 செலுத்தினால் ஜியோ மேட்சிங் நம்பர்.. ஒரே மாதிரி 2 மொபைல் நம்பர்கள்.. வாங்குவது எப்படி?

அட இவ்ளோ நாள் ஜியோ சிம் கார்டு யூஸ் பண்றோம். ஆனால் இது தெரியாம போச்சே - என்கிற படியாக, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது மேட்சிங் நம்பர் (Jio Matching Number) என்கிற வசதியை வழங்கி வருவது உங்களில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

அப்படியாக, ஜியோ மேட்சிங் நம்பர் என்றால் என்ன? ஒரே மாதிரியாக 2 ஜியோ மொபைல் நம்பர்கள் என்றால், அந்த 2 நம்பர்களுக்கும் எவ்வளவு ஒற்றுமை இருக்கும்? ஜியோ மேட்சிங் நம்பர் வாங்குவதற்கான கட்டணம் என்ன? ஜியோ மேட்சிங் நம்பரை வாங்குவது எப்படி? இதோ விவரங்கள்:

ஜியோ மேட்சிங் நம்பர்: வாங்குவது எப்படி?

ஜியோ மேட்சிங் நம்பர் என்றால் என்ன? ஜியோ மேட்சிங் நம்பர் என்பது உங்கள் தற்போதைய எண்ணுடன் ஓரளவு பொருந்தக்கூடிய புதிய ஜியோ மொபைல் எண்ணை தேர்வுசெய்ய உங்களை அனுமதிக்கும் ஒரு வசதி ஆகும். குறிப்பாக கடைசி சில இலக்கங்கள் அப்படியே இருக்கும்.

தனிப்பயனாக்கப்பட்ட அல்லது எளிதில் நினைவில் வைத்து கொள்ளக்கூடிய மொபைல் நம்பரை விரும்புவோருக்கு இது ஒரு கவர்ச்சிகரமான விருப்பமாகும். வாடிக்கையாளர்கள் எந்தவொரு ஜியோ சில்லறை விற்பனை நிலையத்திலும் அல்லது ஜியோ அதிகாரப்பூர்வ வலைத்தளம் (www.jio.com) வழியாக ஆன்லைன் மூலமாகவோ தங்களுக்கு விருப்பமான மேட்சிங் நம்பர் தேர்ந்தெடுத்து புதிய ஜியோ சிம் மூலம் அதை செயல்படுத்தலாம்.

வாடிக்கையாளர்கள் ரூ.50 முன்பணமாக செலுத்தினால் ரூ.499 மதிப்புள்ள மேட்சிங் நம்பரை பெறலாம். அந்த மேட்சிங் நம்பரை ரூ.349 ஹைப்ரிட் ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஆக்டிவேட் செய்யலாம். இந்த திட்டத்தின்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், அன்லிமிடெட் 5ஜி, ஒரு நாளைக்கு 2ஜிபி 4ஜி டேட்டா, ஜியோஹாட்ஸ்டார் சந்தா, ஒரு நாளைக்கு இலவச 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ ஆப்களுக்கான இலவச அணுகல் ஆகிய நன்மைகள் கிடைக்கும். இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும்.

ஜியோ மேட்சிங் நம்பரை எப்படி பெறுவது?
படி 1: முதலில் www.jio.com வலைத்தளத்திற்குள் சென்று "மேட்சிங் எண்" (Matching Number) என்கிற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது நேரடியாக ஜியோ மேட்சிங் நம்பர் என்று கூகுள் சேர்ச் செய்து குறிப்பிட்ட அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்

படி 2: உங்கள் தற்போதைய ஜியோ மொபைல் எண்ணை உள்ளிடவும், நீங்கள் ஒரு ஒடிபி-ஐ (OTP) பெறுவீர்கள். ஜியோ மேட்சிங் நம்பரை பெற அதை உள்ளிடவும்.
படி 3: அடுத்து உங்கள் பகுதியின் பின் கோட்-ஐ (PIN Code) வழங்க வேண்டும், பின்னர் அது உங்கள் இருப்பிடத்திற்கு கிடைக்கும் மேட்சிங் நம்பரை காண்பிக்கும்.
படி 4: கடைசியாக செயல்முறையை முடிக்க உங்களுக்கு விருப்பமான எண்ணைத் தேர்ந்தெடுத்து ரூ.50 கட்டணம் செலுத்தவும்.

ஜியோ சேவையின் கீழ் அறிவிக்கப்பட்ட சமீபத்திய ஆபர்களை பொறுத்தவரை, ஜியோ 5ஜி அன்லிமிடெட் திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூகுள் ஏஐ ப்ரோ சந்தாவானது 18 மாதங்களுக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஜியோ 5ஜி கஸ்டமர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த இலவச சலுகையின் உண்மையான மதிப்பு ரூ.35,100 ஆகும்.

முதலில் ​​18 முதல் 25 வயதுக்குட்பட்ட பயனர்கள் மட்டுமே இந்த இலவச சந்தாவிற்கு பரிசீலிக்கப்படுவார்கள் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூறியிருந்தது. பின்னர் இந்த சலுகை அனைத்து பயனர்களுக்கும் கிடைக்குமென்று அறிவித்தது. அதை தொடர்ந்து தற்போது ஜியோ நிறுவனம் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூகுள் ஏஐ ப்ரோ இலவச சந்தாவை செயல்படுத்த அனுமதிக்கிறது. இதை பெறுவது எப்படி என்கிற படிப்படியான வழிமுறைகளை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Matching Number How to get new Jio mobile number that matches existing mobile number
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X