Jio சிம் இருக்கா.. 2 கிளிக்கில் ரூ.35,100 இலவசம்.. 18 மாதங்களுக்கு Google AI Pro சந்தா பெறுவது எப்படி?
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது தனது பயனர்களுக்கு 18 மாத இலவச கூகுள் ஏஐ ப்ரோ சந்தாவை (Google AI Pro subscription) வழங்க தொடங்கி உள்ளது. இதற்காக கூட்டு சேர்ந்துள்ள கூகுள் (Google) நிறுவனமும், ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸும் (Reliance Intelligence) ஜியோ பயனர்களுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு (அதாவது 18 மாதங்களுக்கு) கூகுள் ஏஐ ப்ரோவிற்கான இலவச அணுகலை வழங்க உள்ளன
இதுகுறித்த வெளியீட்டின் போது, 18 முதல் 25 வயதுக்குட்பட்ட பயனர்கள் மட்டுமே இந்த இலவச சந்தாவிற்கு பரிசீலிக்கப்படுவார்கள் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூறியிருந்தது. பின்னர் அனைத்து பயனர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று ஜியோ அறிவித்தது இருப்பினும் தற்போது ஜியோ நிறுவனம் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூகுள் ஏஐ ப்ரோ இலவச சந்தாவை செயல்படுத்த அனுமதிக்கிறது.

ஜியோ வழங்கும் இலவச கூகுள் ஏஐ ப்ரோ சந்தாவை பெறுவது எப்படி? ஜெமினியின் பிரீமியம் அம்சங்களுக்கான 18 மாத இலவச சந்தாவை பெறுவதற்கு முன், அன்லிமிடெட் 5ஜி திட்டத்தால் ரீசார்ஜ் செய்யப்பட்ட, ஆக்டிவ் ஆக உள்ள ஜியோ சிம் கார்டு உங்களிடம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஏனென்றால் இதுதான் கூகுள் ஏஐ ப்ரோ சந்தாவை பெறுவதற்கான முதல் மற்றும் முக்கிய தகுதியாகும். இந்த 2 தகுதிகளையும் (ஜியோ சிம், 5ஜி அன்லிமிடெட் பிளான்) உறுதிசெய்த பின், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள மைஜியோ (MyJio) ஆப்பிற்கு செல்லவும். ஒருவேளை உங்களிடம் மைஜியோ ஆப் இல்லை என்றால் அதை பிளே ஸ்டோர் வழியாக பதிவிறக்கம் செய்யவும்.
ஜியோ வழங்கும் ரூ.35,100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ சந்தாவை 18 மாதங்களுக்கு பெறுவது எப்படி?
1. மை ஜியோ ஆப்பின் ஹோம் பேஜின் மேலே "எர்லி அக்சஸ்" (Early access) என்கிற பேனரை காண்பீர்கள்.
2. அந்த பேனரில் உள்ள "கிளைம் நொவ்" (Claim now) என்கிற பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
3. இப்போது ப்ரவுசரில் ஒரு புதிய பக்கத்தை திறக்கும்படி உங்களிடம் கேட்கப்படும்.
4. நீங்கள் வெப் பேஜை திறந்தவுடன், திட்டத்தின் விவரங்கள் உங்களுக்கு காண்பிக்கப்படும்.
5. கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்து "அக்ரி" (Agree) என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யவும்
அவ்வளவுதான். இப்போது நீங்கள் ஜெமினி ஆப்பிற்கு சென்று உங்களுக்கு கிடைத்துள்ள ப்ரோ ஸ்டேட்டஸ் (Pro status) உறுதிப்படுத்தலாம்.
கூகுள் ஜெமினி ப்ரோ சந்தாவின் கீழ் என்னென்ன கிடைக்கும்? இதன்கீழ் ஜியோ பயனர்கள் ஜெமினி ஆப்பின் (Gemini App) மூலம் கூகுளின் மிகவும் சக்திவாய்ந்த ஏஐ அம்சங்களில் சிலவற்றை நேரடியாக பயன்படுத்தலாம். சிக்கலான பகுத்தறிவு, டெக்ஸ்ட் உருவாக்கம் மற்றும் ஆக்கப்பூர்வமான பணிப்பாய்வுகளுக்காக வடிவமைக்கப்பட்ட கூகுளின் ஜெனரேட்டிவ் ஏஐ மாடலின் மிகவும் திறமையான வெர்ஷன் ஆன ஜெமினி 2.5 ப்ரோவையும் சந்தாதாரர்கள் பயன்படுத்த முடியும்.
சாட் மற்றும் ப்ரொடெக்டிவிட்டிக்கு அப்பால், உயர்தர இமேஜ்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட கூகுளின் இரண்டு கிரியேட்டிவ் ஏஐ மாடல்கள் ஆன நானோ பனானா (Nano Banana) மற்றும் வியோ 3.1 (Veo 3.1) ஆகியவற்றையும் கூட ஜியோ பயனர்கள் அணுகலாம். முன்னதாக கூகுள் சந்தாக்கள் மூலம் மட்டுமே கிடைத்த இந்த டூல்கள், இப்போது கூடுதல் கட்டணமின்றி ஜியோவின் 5ஜி திட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் இலவசமாக கிடைக்கும் கூகுள் ஏஐ ப்ரோ திட்டத்தில் கூகுள் ஏஐ-பவர்டு நோட்-டேக்கிங் மற்றும் ரிசர்ச் கம்பானியன் ஆன நோட்புக்எல்-எம்-க்கான (NotebookLM) விரிவாக்கப்பட்ட அணுகலும் கிடைக்கும். இது பயனர்கள் ஸ்டடி மெட்டீரியல்களை ஒழுங்கமைக்கவும், ஆவணங்களை ஆட்டோமெட்டிக் ஆக சம்மரைஸ் செய்யவும் உதவும்.


Click it and Unblock the Notifications








