பழையபடி ரூ.200 போதும்.. டெய்லி 1.5GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ், SMS.. Jio-வின் சூப்பர் பட்ஜெட் பிளான்!
விலை ஏற்றப்பட்ட ஜியோ (Jio) ரீசார்ஜ் திட்டங்களை மேலோட்டமாக பார்த்து விட்டு எந்த முடிவுக்கும் வர வேண்டாம். அவசரப்பட்டு பிஎஸ்என்எல், ஏர்டெல் அல்லது வோடபோன் ஐடியா சேவைக்கு போர்ட் ஆகிவிட வேண்டாம். ஏர்டெல் மற்றும் விஐ-யின் திட்டங்களின் விலைகளும் கூட அதிகரிக்கப்பட்டு விட்டன தான். பிஎஸ்என்எல் திட்டங்கள் மலிவானவைகளான உள்ளன; ஆனால் 3ஜி ஸ்பீட் தான் கிடைக்கும்.
ஆக எங்கே சென்றாலும், எப்படி வட்டமடித்தாலும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ தான் - பெஸ்ட் சாய்ஸ் ஆக இருக்கிறது. "ஆனால் ஜியோ திட்டங்களின் விலைகள் தான் கடுமையாக உயர்ந்துவிட்டதே!" என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான் ஆனால் இன்னமும் ரூ.200 - ரூ.300 என்கிற சூப்பர் பட்ஜெட் விலைப்பிரிவின் கீழ் 3 ஜியோ திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.

இந்த 3 திட்டங்களிலும் 2 பொதுவான விஷயங்கள் உள்ளன. ஒன்று - இவைகள் அனைத்துமே டெய்லி 1.5ஜிபி டேட்டாவுடன் வருகின்றன. இரண்டு - இவைகள் அனைத்துமே 2ஜிபி-க்கும் குறைவான டேட்டாவை வழங்குவதால் இந்த 3 திட்டங்களுமே ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி நன்மையை வழங்காது
ஆனால் உங்களுடைய டெய்லி டேட்டா தேவை 1.5ஜிபி என்கிற வரம்பிற்குள் இருந்தால், உங்களுக்கு ஜியோவின் இலவச 5ஜி டேட்டா நன்மை தேவையில்லை என்றால்.. அதேசமயம் விலையுயர்ந்த திட்டங்களை நீங்கள் ரீசார்ஜ் செய்ய விரும்பவில்லை என்றால்.. அப்போது கண்களை மூடிக்கொண்டு இந்த 3 திட்டங்களில் ஒன்றை ரீசார்ஜ் செய்யவும்.
01. ஜியோவின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்கள் ஆகும். முன்னரே குறிப்பிட்டபடி இது டெய்லி 1.5 ஜிபி டேட்டாவை வழங்கும். எப்யூபி லிமிட்டிற்கு பின்னர், அதாவது 1,5ஜிபி டேட்டா காலியான பின்னர், இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
கூடவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றையும் வழங்கும். இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இது ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகியவைகளையும் வழங்குகிறது.
02. ஜியோவின் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த திட்டத்தின் வேலிடிட்டி 22 நாட்கள் ஆகும். இதுவும் டெய்லி 1.5 ஜிபி டேட்டாவை வழங்கும் மற்றும் எப்யூபி லிமிட்டிற்கு பின்னர் இண்டர்நெட் ஸ்பீட் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றையும் வழங்கும். இதன்கீழும் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோகிளவுட் ஆப் நன்மைகள் கிடைக்கும்.
03. ஜியோவின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இது டெய்லி 1.5 ஜிபி டேட்டா, எப்யூபி லிமிட்டிற்கு பின்னர் 64 கேபிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீட், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. இதன்கீழும் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோகிளவுட் ஆப் நன்மைகள் கிடைக்கும்.
சூப்பர் பட்ஜெட் விலையின் கீழ் கிடைக்கும் இந்த 3 ஜியோ திட்டங்களை பயன்படுத்துவதற்கான சராசரி தினசரி செலவு.. ரூ.199 திட்டத்திற்கு ரூ.11.05 ஆகும், ரூ.239 திட்டத்திற்கு ரூ.10.86 ஆகும் மற்றும் ரூ.299 திட்டத்திற்கு ரூ.10.67 ஆகும். ஒருவேளை 1.5ஜிபி டேட்டாவிற்கு மீறி, கூடுதல் டேட்டா தேவைப்படுபவர்கள் ஜியோ சேவையின்கீழ் கிடைக்கும் டேட்டா பேக்குகளை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஒருவேளை உங்களுக்கு ஜியோவின் வரம்பற்ற 5ஜி டேட்டா (Jio Unlimited 5G Data) வேண்டுமென்றால், சமீபத்தில் அறிமுகமான ரூ.601 மதிப்புள்ள திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். ஜியோ நிறுவனம் இந்த திட்டத்தை ட்ரூ 5ஜி அப்கிரேட் கிஃப்ட் வவுச்சர் (True 5G upgrade gift voucher) என்று அழைக்கிறது. இதன்கீழ் 2ஜிபிக்கும் குறைவான டெய்லி டேட்டாவை வழங்கும் திட்டங்களை ரீசார்ஜ் செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கூட இலவச 5ஜி டேட்டா கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








