Home
News

ஏர்டெல், வோடாபோன் கதை முடிஞ்சது.. மாசத்துக்கு ரூ.50, வருஷத்துக்கு ரூ.600.. Jio-வின் புதிய 5ஜி பிளான் அறிமுகம்!

சரிக்கு சமமாக நிற்கும் பார்தி ஏர்டெல், முட்டிமோதி மேலே வரும் வோடாபோன் ஐடியா மற்றும் பூதாகரமான வளர்ச்சி திட்டங்களை செய்து வரும் பிஎஸ்என்எல் என.. இந்திய டெலிகாம் துறையில் உள்ள மற்ற அனைத்து டெலிகாம் நிறுவனங்களின் கதையையும் முடிக்கும் படியான ஒரு புதிய 5ஜி திட்டத்தை, ரிலையன்ஸ் ஜியோ திட்டம் அறிமுகம் செய்துள்ளது.

முகேஷ் அம்பானி தலைமையிலான டெலிகாம் நிறுவனமான ஆன ரிலையன்ஸ் ஜியோ, ரூ.601 மதிப்புள்ள ஒரு புதிய திட்டத்தை (Jio Rs 601 plan) அறிமுகம் செய்துள்ளது. ஜியோ நிறுவனம் இந்த திட்டத்தை ட்ரூ 5ஜி அப்கிரேட் கிஃப்ட் வவுச்சர் (True 5G upgrade gift voucher) என்று அழைக்கிறது.

மாசத்துக்கு ரூ.50, வருஷத்துக்கு ரூ.600.. Jio-வின் புதிய 5ஜி பிளான்!

பெயர் குறிப்பிடுவது போலவே ஜியோவின் புதிய ரூ.601 திட்டமானது ஒரு டேட்டா வவுச்சர் (Data Voucher) ஆகும். இது ஒரு வருடம் முழுவதும் வரம்பற்ற 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) வழங்குவதோடு மட்டுமில்லமால் 5ஜி கனெக்டிவிட்டியை (5G Connectivity) வழங்காத ஜியோ திட்டங்களுடன் இணைக்கப்படும் ஆதரவையும் கொண்டுள்ளது.

அதாவது இது 4ஜி நெட்வொர்க்கில் உள்ள பயனர்களை 5ஜியை அனுபவிக்க அனுமதிக்கும் ஒரு திட்டமாகும். நினைவூட்டும் வண்ணம் 2ஜிபி தினசரி டேட்டா அல்லது அதற்கு மேற்பட்ட டேட்டாவை வழங்கும் ஜியோ திட்டங்களுடன் மட்டுமே இலவச ஜியோ 5ஜி டேட்டா நன்மை அணுக கிடைக்கிறது. எனவே, 1.5ஜிபி டெய்லி டேட்டாவை வழங்கும் ஜியோ திட்டத்தை ரீசார்ஜ் செய்தவர்கள் 5ஜி டேட்டாவை பெற முடியாத சிக்கல் இருந்தது

இந்த சிக்கலை சரி செய்யும் நோக்கத்தின் கீழே ரூ.601 மதிப்புள்ள 5ஜி அப்கிரேட் வவுச்சர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.601 ஆனது மொத்தம் 12 தனிப்பட்ட டேட்டா வவுச்சர்களை உள்ளடக்கிய திட்டமாகும். அதாவது இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு.. அடுத்த 1 ஆண்டுக்கு ஒவ்வொரு மாதமும், வரம்பற்ற 5ஜி டேட்டாவை வழங்கும் ரூ.51 மதிப்புள்ள டேட்டா வவுச்சர் கிடைக்கும். இப்படி மொத்தம் 12 மாதங்களுக்கு 12 டேட்டா வவுச்சர்கள் கிடைக்கும்.

வாடிக்கையாளர்கள் இந்த வவுச்சர்களை ஒவ்வொரு மாதமும் மைஜியோ ஆப்பில் இருந்து ரிடீம் செய்ய வேண்டும். சுவாரசியமாக ரூ.601 டேட்டா வவுச்சரை பரிசு வடிவில் எந்தவொரு ஜியோ பயனருக்கும் டிரான்ஸ்பர் செய்ய முடியும். ஆனால் உங்கள் ஜியோ மொபைல் எண்ணின் கீழ் இந்த டேட்டா வவுச்சரை ஒருமுறை ஆக்டிவேட் செய்த பின்னர், தனிப்பட்ட ரூ.51 மாதாந்திர வவுச்சர்களை டிரான்ஸ்பர் செய்ய முடியாது.

தற்போது இந்த திட்டம் ஜியோவின் அதிகாரப்பூர்வ ஆப் ஆன மைஜியோ (MyJio) மற்றும் ஜியோ இணையதளம் வலுயாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் ஜியோவின் கீழ் ரூ. 51, 101 மற்றும் ரூ.151 மதிப்புள்ள மூன்று 5ஜி டேட்டா வவுச்சர்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. இந்த வவுச்சர்கள் முறையே 1 மாதம், 3 மாதங்கள் மற்றும் 1 ஆண்டு வேலிடிட்டி உடன் வருகிறது.

ஆனால் ரூ.601 திட்டமானது மலிவு விலையிலான பேஸிக் திட்டத்தை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கான அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை உறுதி செய்கிறது. அதாவது ஜியோவின் ட்ரூ 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் பகுதியில் இருந்தும் கூட, அதிக விலை நிர்ணயம் கொண்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்ய முடியாமல் தொடர்ந்து ஜியோ 4ஜி நெட்வொர்க்கை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக இருக்கும்.

ரூ.601 டேட்டா வவுச்சரை மட்டுமல்ல எந்தவொரு டேட்டா வவுச்சரை ரீசார்ஜ் செய்ய வேண்டுமென்றாலும் கூட, உங்கள் ஜியோ மொபைல் எண்ணி ஆக்டிவ் ஆக உள்ள ஒரு பேஸிக் திட்டம் இருக்க வேண்டும் என்பதை இங்கே நினைவூட்ட விரும்புகிறோம். அதாவது பேஸிக் ரீசார்ஜ் இல்லாமல் டேட்டா வவுச்சரை ரீசார்ஜ் செய்ய முடியாது மற்றும் 5ஜி டேட்டா வவுச்சரின் வேலிடிட்டியும் கூட உங்களுடைய பேஸிக் திட்டத்தின் அதே வேலிடிட்டி உடன் தான் ஒற்றுப்போகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Introduced New Rs 601 Plan True 5G Upgrade Data Voucher With Unlimited 5G Data for 1 Year
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X