சாமானியரின் எட்டா கனியாக மாறிய iPhone 16.. என்ன விலை தெரியுமா? ஆரம்பமே ஜாஸ்தி விலை.. முடிவை கேட்கவா வேணும்?
ஆப்பிள் நிறுவனம் நேற்று நள்ளிரவு நடத்திய ஆப்பிள் க்ளோவ்டைம் ஈவென்ட் 2024 (Apple Glowtime Event 2024) நிகழ்வின் மூலம் ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 Series) ஸ்மார்ட்போன்களை உலக சந்தையில் ஒன்றின் பின் ஒன்றாக அறிமுகம் செய்துள்ளது. வழக்கம் போல, 4 புதிய மாடல்களை ஆப்பிள் இம்முறையும் அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் என்றாலே அதன் விலை சற்று அதிகமாக தான் இருக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே என்றாலும், இம்முறை விலை கொஞ்சம் ஜாஸ்தியாகவே இருக்கிறதென்று ஆப்பிள் ரசிகர்களே வியக்கும் அளவில் விலைகள் நம்மை திகைப்பூட்டுகின்றன.
நீண்ட காத்திருப்பு மற்றும் நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஐபோன் 16 தொடர் போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த ஐபோன் வரிசையில், ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 6 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) ஆகிய நான்கு மாடல்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சாமானியரின் எட்டா கனியாக மாறிய iPhone 16 ஸ்மார்ட்போன்:
உலகளவில் விலை உயர்ந்த போன் என்றாலே எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு அது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தான் என்று யோசிக்காமல் கூறிவிடுவார்கள். இதை நிரூபிக்கும் விதமாக, ஆப்பிள் ரசிகர்களே வாய் பிளந்து வியக்கும் வகையில் ஐபோன் 16 தொடர் ஸ்மார்ட்போன்களின் விலை அமைந்துள்ளது. ஐபோன் 16 தொடரின் அடிப்படை மாடலே ரூ. 79,990 என்ற விலை முதல் துவங்குகிறது.
இந்த வரிசையில் ராஜா போல கெத்தாக டாப்பில் நிற்கும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) விலையை கேட்கவா வேணும்? இதன் ஹை-எண்டு மாடலான 1TB வேரியண்ட் விலை இந்தியாவில் ரூ. 1,84,900 என்று பட்டியலிடப்பட்டுள்ளது. என்னது ஒரு கையடக்க ஸ்மார்ட்போனிற்கு ஏறக்குறைய 2 லட்சம் நெருங்கி செலவு செய்ய வேண்டுமா? என்று சாமானியர்கள் மற்றும் பட்ஜெட் ஆப்பிள் ரசிகர்களும் கூட திகைத்து போய் நிற்கிறார்கள்.
ஐபோன் 16 விலை இந்தியாவில் எவ்வளவு தெரியுமா? (iPhone 16 Price In India):
இந்த விலையை பார்க்கையில், கண்டிப்பாக எல்லோராலும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் வாங்க இயலாது. ஆகையால், பட்ஜெட் ஆப்பிள் ரசிகர்கள் வழக்கம் போல வெண்ணிலா மாடலான அடிப்படை ஐபோன் 16 வாங்க தான் முயல்வார்கள். ஐபோன் 16 (iPhone 16 Price) இன் அடிப்படை ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலான 128GB ஸ்டோரேஜ் மாடல் இப்போது இந்தியாவில் ரூ. 79,990 என்ற விற்பனை விலையில் துவங்குகிறது.
இதுவும் ஏறக்குறைய முக்கால் லட்சத்தை தாண்டி செல்கிறது. இது அடிப்படை வேரியண்ட் மாடலின் விலை என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திக்கொள்கிறோம். இதற்கு அடுத்தபடியாக, ஐபோன் 16 இல் வாங்க கிடைக்கும் ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் தான் 256GB ஸ்டோரேஜ் மாடல், இதன் விலை இந்தியாவில் ரூ. 89,900 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இறுதியாக, 512GB ஸ்டோரேஜ் கொண்ட ஹை - எண்டு ஐபோன் 16 மாடல் சாதனம் ரூ. 1,09,900 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
புதிய ஐபோன் 16 (iPhone 16) மாடல்களும் அல்ட்ரா மரைன் (Ultramarine), டீல் (Teal), பிங்க் (Pink), வெள்ளை (White), பிளாக் (Black) ஆகிய 5 நிறங்களில் வாங்க கிடைக்கிறது. இதன் முன்பதிவு செப்டம்பர் 13, 2024 ஆம் தேதி முதல் துவங்குகிறது. ஐபோன் 16 விற்பனை தேதியை பற்றி பேசுகையில் (iPhone 16 sale date India), செப்டம்பர் 20, 2024 ஆம் தேதி முதல் இந்தியாவில் iPhone 16 விற்பனைக்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதன் விலை சாமானியர்களுக்கு எட்டா கனியை போல் மாறியுள்ளது.
ஐபோன் 16 சிறப்பம்சம் (iPhone 16 Specifications):
- 6.1" இன்ச் Super Retina XDR டிஸ்பிளே
- 2000 நீட்ஸ் பீக் பிரைட்னஸ்
- 1200x 2600 பிக்சல்
- 60Hz ரெஃப்ரஷ் ரேட்
- 8GB ரேம் + 128GB / 256GB / 512GB ஸ்டோரேஜ்
- பயோனிக் A18 சிப்செட்
- ஆக்டா கோர் பிராசஸர்
- iOS v18 இயங்குதளம்
- பில்ட் இன் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்
- 48MP + 12MP டூயல் கேமரா
- 12MP செல்பி கேமரா
- 3561mAh பேட்டரி
- 25W மேக்சேஃப் (MagSafe)
- பாஸ்ட் சார்ஜிங்
- 20W ரிவர்ஸ் சார்ஜிங்


Click it and Unblock the Notifications