Home
Mobile

வச்சு செஞ்சுட்டாங்கயா.. iPhone 16 ரசிகர்களுக்கு விருந்து வைத்த Apple.. ஒரு போனில் இத்தனை ஸ்பெஷாலிட்டியா? விலை?

அந்தா வருது.. இந்தா வருது என்று நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த அந்த தருணம் இதோ இப்போது வந்துவிட்டது. ஒரு வழியாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 சீரிஸ் வரிசை ஸ்மார்ட்போன்கள் இப்போது உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 16 சீரிஸின் அடிப்படை வெண்ணிலா மாடலான ஐபோன் 16 (iPhone 16) மற்றும் பட்ஜெட்டில் பெரிய டிஸ்பிளேவை எதிர்பார்க்கும் ஆப்பிள் ரசிகர்களுக்காக ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus) ஆகிய இரண்டு மாடல்களை நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் முழு விபரங்களை இப்போது பார்க்கலாம்.

ஆப்பிள் நிறுவனம் இன்று அதன் சொந்தமான ஆப்பிள் பார்க்கில் அமைந்துள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கில் நடத்திய ஆப்பிள் இட்ஸ் க்ளோவ்டைம் ஈவென்ட் 2024 (Apple Its Glowtime Event 2024) என்ற நிகழ்வில் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன் சாதனங்களை ஒன்றின் பின் ஒன்றாக அறிமுகம் செய்துள்ளது. வழக்கம் போல, ஆப்பிள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த வருடமும் நிறுவனம் நிறைவேற்றியுள்ளது.

வச்சு செஞ்சுட்டாங்கயா.. iPhone 16 ரசிகர்களுக்கு விருந்து வைத்த Apple..

iPhone 16 ரசிகர்களுக்கு விருந்து வைத்த Apple.. ஒரு போனில் இத்தனை ஸ்பெஷாலிட்டியா?

சரி, இப்போது விஷயத்திற்கு செல்லலாம், ஆப்பிள் ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ஆகிய இரண்டு சாதனங்கள் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஐபோன் விருப்பமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 16 சாதனம் 128GB, 256GB மற்றும் 512GB வேரியண்ட் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்டோரேஜ் வேரியண்டில் ஐபோன் 16 பிளஸ் சாதனனமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் AI அம்சத்துடன் வெளியாகும் முதல் போன் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வச்சு செஞ்சுட்டாங்கயா.. iPhone 16 ரசிகர்களுக்கு விருந்து வைத்த Apple..

ஐபோன் 16 சிறப்பம்சம் (iPhone 16 Specifications):
- 6.1" இன்ச் Super Retina XDR டிஸ்பிளே
- 2000 நீட்ஸ் பீக் பிரைட்னஸ்
- 1200x 2600 பிக்சல்
- 60Hz ரெஃப்ரஷ் ரேட்
- 8GB ரேம் + 128GB / 256GB / 512GB ஸ்டோரேஜ்
- பயோனிக் A18 சிப்செட்
- ஆக்டா கோர் பிராசஸர்
- iOS v18 இயங்குதளம்
- பில்ட் இன் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்
- 48MP + 12MP டூயல் கேமரா
- 12MP செல்பி கேமரா
- 3561mAh பேட்டரி
- 25W மேக்சேஃப் (MagSafe)
- பாஸ்ட் சார்ஜிங்
- 20W ரிவர்ஸ் சார்ஜிங்

வச்சு செஞ்சுட்டாங்கயா.. iPhone 16 ரசிகர்களுக்கு விருந்து வைத்த Apple..

ஐபோன் 16 பிளஸ் சிறப்பம்சம் (iPhone 16 Plus Specifications):
- 6.7" இன்ச் Super Retina XDR டிஸ்பிளே
- 1200 நீட்ஸ் பீக் பிரைட்னஸ்
- 1284 x 2800 பிக்சல்
- 60Hz ரெஃப்ரஷ் ரேட்
- 8GB ரேம் + 128GB / 256GB / 512GB ஸ்டோரேஜ்
- பயோனிக் A18 சிப்செட்
- ஆக்டா கோர் பிராசஸர்
- iOS v18 இயங்குதளம்
- பில்ட் இன் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence)
- 48MP + 12MP டூயல் கேமரா
- 12MP செல்பி கேமரா
- 4006mAh பேட்டரி
- 25W மேக்சேஃப் (MagSafe)
- பாஸ்ட் சார்ஜிங்
- 20W ரிவர்ஸ் சார்ஜிங்
- 4G, 5G, VoLTE இணைப்பு
- Bluetooth v5.4, WiFi, NFC
- USB Type-C சார்ஜிங் போர்ட்

வச்சு செஞ்சுட்டாங்கயா.. iPhone 16 ரசிகர்களுக்கு விருந்து வைத்த Apple..

ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் விலை (iPhone 16 and iPhone 16 Plus Price):

ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான அம்சங்களை தான் கொண்டுள்ளது. குறிப்பிட்டு கூறும் வகையில், ஐபோன் 16 பிளஸ் சாதனத்தில் டிஸ்பிளே மற்றும் பேட்டரி அம்சம் மட்டும் சற்று பெரியதாக வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் விலை பற்றி பேசுகையில், ஐபோன் 16 சாதனம் $799 விலையில் வெளிவந்துள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 79,900 முதல் துவங்குகிறது.

வச்சு செஞ்சுட்டாங்கயா.. iPhone 16 ரசிகர்களுக்கு விருந்து வைத்த Apple..

ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் இந்திய விற்பனை தேதி (iPhone 16 and iPhone 16 Plus Sale Date In India):

ஐபோன் 16 பிளஸ் சாதனத்தின் விலை பற்றி பேசுகையில், இது $899 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த சாதனம் ரூ. 89,900 என்ற விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 2 மாடல்களும் அல்ட்ரா மரைன், டீல், பிங்க், வெள்ளை, பிளாக் ஆகிய 5 நிறங்களில் வாங்க கிடைக்கிறது. இதன் முன்பதிவு செப்டம்பர் 13, 2024 ஆம் தேதி துவங்குகிறது. செப்டம்பர் 20, 2024 ஆம் தேதி முதல் இந்தியாவில் iPhone 16 மற்றும் iPhone 16 Plus வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
iPhone 16 and iPhone 16 Plus Apple threw a party for iPhone 16 fans So many specialties in one phone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X