Home
News

உலகமே மெய்சிலிர்க்க போகும் சூப்பர் அம்சத்துடன் வருகிறதா iPhone 15 Pro Max? அப்படி என்ன இருக்கு?

உலகமே பார்த்து மெய்சிலிர்க்க போகும் சூப்பர் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகமாகவிருக்கிறது ஆப்பிளின் அடுத்த புது வரவான ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) சாதனம். அப்படி என்னப்பா ஸ்பெஷல்லா இந்த போன்ல வரப்போகுது?

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் சாதனம் இந்த ஆண்டின் சூப்பர் பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலாக ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இருக்கும் அம்சங்கள் எல்லாமே பிரீமியம் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது இப்போது உலகம் முழுக்க உள்ள ஆப்பிள் பயனர்களால் அதிகம் விரும்பப்படும் மாடலாக திகழ்கிறது. இருப்பினும், இதன் அதிக விலை காரணமாக இந்த போனை வாங்க சிலர் தயக்கம் காட்டி வருகின்றனர்.

உலகமே மெய்சிலிர்க்க போகும் அம்சத்துடன் வருகிறதா iPhone 15 Pro Max?

இந்த வரிசையில் அடுத்தபடியாக வரும் செப்டம்பர் மாதத்தில் அறிமுகமாக ரெடியாகிக் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் மாடல் தான் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் சாதனமாகும். இது ஒரு சூப்பர் பிளாக்ஷிப் (Super Flagship) ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் டீஸ் செய்துள்ளது. இந்த டிவைஸ், இதுவரை இல்லதா அளவில், உலகத்தின் மிகவும் ஸ்லிம்மான டிஸ்பிளே பெசல்களை கொண்டிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இத்துடன் இன்னும் சில சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதையும் தெரிந்துகொள்ளலாம் வாங்க. வரவிருக்கும் ஐபோன் 15 (iPhone 15) தொடர் தற்போதைய ஐபோன் 14 (iPhone 14) வரிசையை விட ஒரு பெரிய மேம்படுத்தலாக மாறுகிறது. பிரபல டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஸ்கிரீன் ப்ரொடக்டரை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். இது சாதனம் எப்படி இருக்கும் என்பதற்கான படத்துடன் சில விஷயங்களை காண்பித்துள்ளது.

இது உலக ஸ்மார்ட்போனில், இதுவரை காணப்படாத ஸ்லிம்மான பெசல்களை கொண்டிருக்கும் என்பதை அந்த புகைப்படம் தெளிவுபடுத்தியுள்ளது. ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max) மெலிதான பெசல்களைக் கொண்டுள்ளது. இது பிரீமியம் பார்வை அனுபவத்தை அளிக்கிறது. இருப்பினும், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விஷயங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாக தெரிகிறது. காரணம், ஐபோன் 14 ப்ரோவின் பெசல்கள் வெறும் 2.17 மிமீ அளவை கொண்டுள்ளது.

உலகமே மெய்சிலிர்க்க போகும் அம்சத்துடன் வருகிறதா iPhone 15 Pro Max?

சியோமி 13 இன் பெசல் அளவு வெறும் 1.81 மிமீ மட்டுமே. இதை விட குறைந்த பெசல் அளவை ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் சாதனம் கொண்டிருக்கும் என்று டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. சியோமியின் டிஸ்பிளே பெசல்கள் தான் தற்போது சந்தையில் காணப்படும் மெலிதானத பெசல் ஆகும். உலகத்தின் மிகவும் ஸ்லிம்மான பெசல்களுடன் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஒரு 'சூப்பர்-ஃபிளாக்ஷிப்' ஆக இருக்கும் என்று ஐஸ் யுனிவர்ஸ் கூறுகிறது.

நம்பகமான டிப்ஸ்டர் ShrimpApple Pro இன் முந்தைய கசிவு படி, iPhone 14 Pro Max உடன் ஒப்பிடும்போது, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் இன் பெசல்கள் நன்றாக வளைந்திருக்கும் என்று கூறப்படுகிறது. இது ஆப்பிள் வாட்ச் போன்ற தோற்றத்தை அளிக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக வதந்திகள் வந்தாலும், அதிக செலவுகள் மற்றும் உற்பத்தி சிக்கலான தன்மை காரணமாக புதிய ஐபோன்களில் இனி சாலிட்-ஸ்டேட் பட்டன்களை பெறாது என்று கூறப்படுகிறது.

அதேபோல், புதிய ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் சாதனத்தில் 48MP பிரைமரி கேமராவுடன் பெரிஸ்கோப் லென்ஸ்களை பெற அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்பிள் ஒரு புதிய 1-இன்ச் கேமரா சென்சார், மியூட் சுவிட்ச், பெரிஸ்கோப் லென்ஸ் மற்றும் USB டைப்-C போன்ற பல அம்சங்களை புதிதாக பெரும் என்று வதந்திகள் பரிந்துரைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 15 Pro Max Could Get Slimmest Display Bezel Seen On a Smartphone Ever
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X