Home
News

இந்த நாடுகளில் iPhone 14 Pro Max விலையே இவ்வளவு கம்மி-ஆ? ரூ.52,000 வரை விலை குறைகிறதா? எந்த நாட்டிலப்பா?

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என்பது உலகில் அதிகம் விரும்பப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ.1,39,000 என்ற விலையில் துவங்குகிறது. இதன் ஹை-வேரியண்ட் மாடலான 1TB மாடல் ரூ.1,89,900 என்ற விலையில் விற்பனையாகிறது.

2 லட்சம் ரூபாய் விலையை நெருங்கும் இந்த ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max) சாதனத்தின் விலை சில நாடுகளில் குறைவாகவே இருக்கிறது. மற்ற சில நாடுகளுடன் ஒப்பிடுகையில், இதன் விலை இந்திய சந்தையில் பலருக்கும் விலையுயர்ந்த முதலீடாகவே இருக்கிறது. ஆனால், குறிப்பிட்ட 5 நாடுகளில் மட்டும் இதன் விலை ஒப்பீட்டளவில் மலிவானதாக இருக்கிறது.

இந்த நாடுகளில் iPhone 14 Pro Max விலை இவ்வளவு கம்மி-ஆ? ரூ.52000 குறைவு

ஸ்மார்ட்போன்களுக்கான விலைக் கண்காணிப்பாளரான நுகேனியின் (Nukeni) கூற்றுப்படி, ஐபோன் மாடல்களின் விலையில் இந்தியா அதிக விலை கொண்ட தரவரிசையில் உள்ளது. இதன் விளைவாக, வாடிக்கையாளர்கள் அதிக மலிவு விலைகளைக் கண்டறிய, பிற நாட்டு சந்தைகளை ஆராய்வதில் ஆர்வம் காட்டலாம். நீங்களும் மலிவான விலையில் iPhone 14 Pro Max ஐ வாங்க விரும்பினால், நுகேனியால் அடையாளம் காணப்பட்ட இந்த ஐந்து நாடுகளில் குறைந்த விலையில் ஐபோன் வாங்க பரிசீலிக்கலாம்.

1. அமெரிக்கா
USA சந்தையில் ஐபோன் 14 சீரிஸ் முதல் அணைத்து மாடல்களும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஐபோன் 14 அமெரிக்காவில் வெறும் ரூ.66,000 முதல் கிடைக்கிறது. iPhone 14 Plus இன் ஆரம்ப விலை தோராயமாக ரூ.73,500 ஆகவும், iPhone 14 Pro இன் ஆரம்ப விலை தோராயமாக ரூ.79,900 ஆகவும் உள்ளது.

மிகவும் விலையுயர்ந்த மாடலான ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ், அமெரிக்காவில் வெறும் ₹87,000 முதல் துவங்குகிறது. இந்தியாவுடன் ஒப்பிடுகையில் ரூ.52,000 விலை குறைவாக கிடைக்கிறது. ரூ.50,000-திற்கு மேல் விலை குறைகிறது என்றால், யார் தான் வாங்க தயக்கம் காட்டுவார்கள் சொல்லுங்கள். அமெரிக்காவில் நண்பர்கள் யாரும் இருந்தால் ஆர்டர் போட சொல்லுங்கள்.

இந்த நாடுகளில் iPhone 14 Pro Max விலை இவ்வளவு கம்மி-ஆ? ரூ.52000 குறைவு

2. ஜப்பான்
ஜப்பானில் ஐபோன் 14 இன் விலையும் இதேபோல் மிகவும் மலிவு. iPhone 14 மற்றும் 14 Plus ஆனது முறையே ரூ.66,500 மற்றும் ரூ.75,000 முதல் தொடங்குகிறது. iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max முறையே ரூ.83,000 மற்றும் ரூ.91,500 விலையில் கிடைக்கிறது.

3. தென் கொரியா
தென் கொரியாவில் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஆகியவை முறையே ரூ.72,000 மற்றும் ரூ.78,000 விலையில் கிடைக்கிறது. ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் முறையே ரூ.89,500 மற்றும் ரூ.1,00,000 விலையில் கிடைக்கிறது.

4. ஹாங்காங்
ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் விலை முறையே ரூ.70,000 மற்றும் ரூ.78,000 ஆகும். ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆரம்ப விலைகள் முறையே ரூ.87,000 மற்றும் ரூ.95,000 ஆகும்.

இந்த நாடுகளில் iPhone 14 Pro Max விலை இவ்வளவு கம்மி-ஆ? ரூ.52000 குறைவு

5. கனடா
இறுதியாக iPhone 14 இன் விலை ரூ.70,500 ஆகவும், ஐபோன் 14 பிளஸ் இன் விலை ரூ.80,000 ஆகவும் உள்ளது. iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max இன் விலைகள் முறையே ரூ.90,000 மற்றும் ரூ.99,000 ஆக உள்ளது.

ஒருவேளை உங்களுக்கும் இந்த ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் சாதனத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், இந்த நாட்டில் வசிக்கும் நண்பர்களிடம் கொஞ்சம் ஹெல்ப் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள். குறிப்பாக, உங்கள் சொந்த நாட்டில் பொருந்தக்கூடிய வரி மற்றும் இறக்குமதி வரிகளை நீங்கள் பரிசீலிப்பது முக்கியமானது. ஏனெனில் இவை சாதனத்தின் இறுதி விலையை கணிசமாக அதிகரிக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Buy iPhone 14 Pro Max For Cheapest Price in These 5 Countries Around The World
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X