இன்போசிஸ் ஊழியர்ளுக்கு பிங்க் ஸ்லீப்

Posted By:

இன்றைக்கு சாப்ட்வேர் கம்பெனிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனலாம் அதில் தற்போது மிகவும் முக்கியமான கம்பெனியான இன்போசிஸ் நிறுவனம்.

இந்த நிறுவனமும் தற்போது கடும் நஷ்டத்தில் தான் இயங்கிவருகிறது பணியில் இருந்து ஓய்வு பெற்ற இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி கம்பெனி செல்லும் நிலைமையை கண்டு அஞ்சி கடந்த ஆண்டு மீண்டும் பணியில் சேர்ந்தார்.

இவர் சமீபத்தில் இந்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசினார் அப்போது தன் ஊழியர்கள் குறித்து பேசிய அவர் மிகவும் வேதனை மற்றும் வருத்தத்துடன் சில கருத்துக்களை தெரிவித்தார்.

இன்போசிஸில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள் இவர்கள் அனைவருக்கும் மற்ற கம்பெனிகளில் கொடுக்கும் சம்பளத்தை விட இன்போசிஸ் மிக அதிகமாக கொடுத்து வருகிறது.

இன்போசிஸ் ஊழியர்ளுக்கு பிங்க் ஸ்லீப்

இவர்களில் சிலர் தங்களது பணியை ஒழுங்காக செய்வதில்லை இதனால் எங்களுடயை வியாபாரத்தில் பல நஷ்டங்களை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறோம்.

இதனால் அதிக சம்பளம் வாங்குபவர்களை நாங்கள் தனித் தனியாக அவர்களது பெர்பாமன்ஸை கண்காணிக்க இருக்கிறோம் இதன் முலம் வேலை செய்யாதவர்களை விரைவில் வீட்டுக்கு அனுப்ப இருக்கிறோம் என்று கூறினார்.

மேலும் அமெரிக்காவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் பணிகளை கவனித்து வந்த அமெரிக்க பிரிவு தலைவர் அசோக் வேல்மூரி, அடுத்து பிபிஓ பிரிவு தலைவர் பாலகிருஷ்ணன் என முக்கிய உயர் அதிகாரிகள் பணியில் இருந்தும் விலகி விட்டனர் இது பெரும் அடியாக இன்போசிஸ்க்கு அமைந்துள்ளது.

உலக அளவில் பெரும் நிறுவனமான IBM சென்ற வாரம் 15 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டம் போட்டது அதையடுத்து தற்போது இன்போசிஸும் அதே திட்டத்தை பின்பற்றவது ஊழியர்களின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் பலருக்கு பிங்க் நோட்டீஸ் கொடுத்து வழியனுப்ப இன்போசிஸ் திட்டமிட்டுள்ளது...உங்களுக்கான சில நகைச்சுவை படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்...

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot