ISRO நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் என்ன ஆனாது? ககன்யான் திட்டம் குறித்த தகவல்!

|

ISRO நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டமானது எப்பொழுது நிகழும் என்ற தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக திட்டமிடப்பட்ட நாள் தள்ளி செல்லும் என்று ஒரு தரப்பு தெரிவித்து வந்தது. ஆனால், நடக்க பெரியளவில் வாய்ப்பு இல்லை என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். ககன்யான் திட்டம் குறித்த கூடுதல் தகவல் இதோ.

இஸ்ரோவின் ககன்யான் திட்டம்

இஸ்ரோவின் ககன்யான் திட்டம்

இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தை பற்றி தான் இப்பொழுது அனைத்து இடங்களிலும் அதிக பேச்சே, இந்தியாவின் விண்வெளி வீரர்கள் முதல் முறையாக விண்வெளிக்கு அனுப்பப்படும் திட்டம் தான் இந்த ககன்யான் திட்டம். இந்தியாவின் ககன்யான் திட்டம் கடந்த ஒரு வருடமாகவே வளர்ச்சியில் உள்ளது. இஸ்ரோ ககன்யான் மிஷன் முழு வீச்சில் படிப்படியாகத் தயாராகி வருகிறது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்திய விண்வெளித் துறைக்கு புதிய சகாப்தம்

இந்திய விண்வெளித் துறைக்கு புதிய சகாப்தம்

இந்திய விண்வெளித் துறைக்கு புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்துதல் (Ushering the New Era for Indian Space Sector) என்ற சமீபத்திய சர்வதேச விண்வெளி மாநாடு நிகழ்ச்சியில், இந்த இந்தியாவின் ககன்யான் திட்டம் தொடர்பான விண்வெளி பயணம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாகச் செய்து முடிக்க, இஸ்ரோவிற்கு சில ஒத்துழைப்புகள் தேவைப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI அதிரடி அறிவிப்பு: இனி பணம் எடுக்க ATM-ஐ மட்டும் பயன்படுத்த வேண்டாம்! ADWM கூட இருக்கே!SBI அதிரடி அறிவிப்பு: இனி பணம் எடுக்க ATM-ஐ மட்டும் பயன்படுத்த வேண்டாம்! ADWM கூட இருக்கே!

இஸ்ரோ கூடுதல் கவனம்

இஸ்ரோ கூடுதல் கவனம்

ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க, தேசிய மற்றும் சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து பணியாற்றுவதற்கான ஒத்துழைப்பை இஸ்ரோ நாடுகிறது என்று மனித விண்வெளி விமான மைய இயக்குனர் டாக்டர் உன்னிகிருஷ்ணன் நாயர் மாநாட்டில் கூறியுள்ளார். ககன்யான் திட்டம் பற்றி தெரிந்து கொள்ள பல காரணிகள் உள்ளன. சந்திரயான் திட்டத்தை விட, இந்த திட்டத்தில் இஸ்ரோ கூடுதல் கவனம் செலுத்திவருகிறது.

இஸ்ரோ அட்டவணை

இஸ்ரோ அட்டவணை

விண்வெளி வீரர்கள் பூமியின் முதன்மை சுற்றுப்பாதையை அடைய மூன்று நிலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய அட்டவணையின்படி, முதல் ஆளில்லா விண்வெளி பயணம் 2020 டிசம்பரில் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோ, இரண்டாவது ஆளில்லா பயணம் ஜூன் 2021 இல் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு, டிசம்பர் 2021 இல் மனிதர்களுடனான இறுதி விண்வெளி பயணம் நிகழும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உஷார்! ஆன்லைன் லோன் எடுத்த பெண்! மொபைலுக்கு வந்த அவரின் 'அந்த' புகைப்படம்!

விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி

விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி

இருப்பினும், கொரோனா தொற்று காரணமாக, தாமதம் ஏற்படக்கூடுமா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பதில் அளித்துள்ளார். இஸ்ரோவின் திட்டத்தில் எந்தவித தாமதமும் ஏற்படாது என்று ஆர் உறுதியுடன் கூறியுள்ளார். ககன்யான் திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு இந்திய விமானப்படை வீரர்களும் ரஷ்யாவில் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
India Set To Visit Low Earth Orbit On December 2021 via ISROs First Manned Space Mission Gaganyaan : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X