உஷார்! ஆன்லைன் லோன் எடுத்த பெண்! மொபைலுக்கு வந்த அவரின் 'அந்த' புகைப்படம்!

|

ஐ கிரெடிட் (iCedit) என்ற ஆன்லைன் லோன் அப்ளிகேஷன் மூலம் கடன் தொகையைப் பெற்ற பெண்ணிற்கு, அவரின் அந்தரங்க புகைப்படங்கள் அனுப்ப பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைனில் வாங்கிய கடனை திரும்பிச் செலுத்தக் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்ட காரணத்தினால், பணம் வசூலிக்கும் கும்பல் அப்பெண்ணின் போனில் இருந்த 'அந்த'ரங்க புகைப்படங்களை அவருக்கே வாட்ஸ்அப் மெசேஜ் செய்துள்ளது.

ஐ கிரெடிட்

சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 25 வயதான பெண்,கொரோனா ஊரடங்கு காரணமாக நிலைமையைச் சமாளிக்க முடியாததால் விளம்பரத்தில் வந்த இன்ஸ்டன்ட் ஆன்லைன் லோன் அப்ளிகேஷன் மூலமாக ரூ. 20,000 கடனாக பெற்றுள்ளார். ஐ கிரெடிட் என்ற ஆன்லைன் லோன் அப்ளிகேஷன் மூலம் இந்த கடனை ஏழு நாட்களில் திரும்பித் தரும் ரூ.7000 வட்டியுடன் கூடிய திட்டத்தை அந்த பெண் தேர்வு செய்துள்ளார்.

படி ஏழு நாட்களில் பணம்

அந்த பெண் தேர்வு செய்த திட்டத்தின் படி ஏழு நாட்களில் அவரால் பணத்தை திரும்பத்தர முடியவில்லை, இதனால் அந்த பெண் தான் எதிர்பார்த்திடாத பல இக்கட்டான விபரீதங்களைச் சந்தித்திருக்கிறார். பணத்தை வசூலிக்கும் கும்பல் அவருக்கு போன் மூலம் அழைப்புவிடுத்து கடனை திரும்பச் செலுத்தும்படி கேட்டுள்ளது. அந்த பெண் கூடுதல் அவகாசம் தேவை என்று வேண்டுதல் விடுத்துள்ளார்.

 அனைத்து காண்டாக்ட் எண்களுக்கும்

இருப்பினும், ஒரு கட்டத்தில் அந்த பெண்னின் தொலைபேசியில் உள்ள அனைத்து காண்டாக்ட் எண்களுக்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து இந்த பெண் கடன் வாங்கி விபரங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

அந்தமாதிரியான

இத்துடன் நிற்காமல் அந்த பெண்ணின் ஸ்மார்ட்போனில் இருந்த அவருடைய சில அந்தரங்க புகைப்படங்களை அந்த பணம் வசூலிக்கும் கும்பல் திருடிக்கொண்டு, அவருக்கே 'அந்தமாதிரியான' புகைப்படங்களை வாட்ஸ் அப் செய்து, பணத்தை உடனே திரும்பி கொடுக்கும்படி மிரட்டியுள்ளது.

வழக்குப் பதிவு

இந்த அதிர்ச்சி தகவல் தொடர்பாக iCredit நிறுவனத்திடம் கேட்டபோது, '' கடன் வாங்கிய வாடிக்கையாளர்களை நாங்கள் மிரட்டுவதில்லை, இதுபோன்ற காரியத்தைச் செய்வது எங்கள் நிறுவனத்தின் வழக்கமும் இல்லை, பணம் வசூலிக்கும் ஏஜென்சி இது போன்ற தவறான காரியத்தில் ஈடுபட்டிருப்பதாக'' அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அந்த பெண் அவருக்கு ஏற்பட்ட விபரீதம் பற்றி நுகர்வோர் பாதுகாப்பு மையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

Best Mobiles in India

Read more about:
English summary
Chennai Women Threatened By Online Loan Application Call Executives : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X