ஏர்டெல், ஜியோவிற்கு பதிலடி: ஐடியாவின் புதிய ரூ.199/- திட்டம் அறிமுகம்.!

|

கட்டண திட்டங்களை அறிமுகம் செய்யும் போது, இதர போட்டி ஆப்ரேட்டர்களின் திட்டங்களை அப்படியே அறிமுகம் செய்வதில் ஐடியாவிற்கு நிகர் ஐடியாவே. அப்படியாக அறிமுகமாகியுள்ள ஒரு பட்ஜெட் திட்டம் தான் ஐடியாவில் ரூ.199/- திட்டம்.

இந்த ஐடியா ரூ.199/- கட்டண திட்டத்தின் நன்மைகள் என்ன என்பதை விரிவாக காண்போம். மிகவும் அமைதியான முறையில் அறிவிக்கப்பட்டுள்ள ஐடியாவின் ரூ.199/- கட்டணத் திட்டமானது, அதன் போட்டியாளர்களின் ரீசார்ஜ் திட்டங்களை போன்றே நன்மைகளை வழங்குகிறது. அதாவது இனி ரூ.199/- ஆனது 28 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.

கூடுதல் நன்மை

கூடுதல் நன்மை

ரிலையன்ஸ் ஜியோ அதன் ரூ.199/- அறிமுகம் செய்துள்ள நிலையில், அதற்கு முன்னர் பார்தி ஏர்டெல் அதன் ரூ.199/-ல் கூடுதல் நன்மைகளை திருத்தி அமைத்தபின்னர் ஐடியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

வரம்பற்ற குரல் அழைப்பு

வரம்பற்ற குரல் அழைப்பு

ஐடியாவின் ரூ.199/- ஆனது நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா நன்மைகளை மட்டுமின்றி ரோமிங் அழைப்புகள் உள்ளிட்ட வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் செல்லுபடியாகும் 28 நாட்களுக்கும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது.

மற்ற வட்டாரங்களிலும்

மற்ற வட்டாரங்களிலும்

நேற்று தொடங்கி இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. இமாச்சலப்பிரதேச வட்டாரத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் சில நாட்களில் மற்ற வட்டாரங்களிலும் அறிமுகமாகலாம். சமீப காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த திட்டமாக ரூ,199/- திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.

வோடபோனின் ரூ.199/- கட்டண திட்டம்

வோடபோனின் ரூ.199/- கட்டண திட்டம்

ஆக மொத்தம், வோடபோனின் ரூ.199/- கட்டண திட்டம் மட்டும் தன நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை இன்னும் வழங்க தொடங்காத ஒரே திட்டமாகும். விரைவில் (இன்றோ அல்லது நாளையோ) அதுவும் மாற்றி அமைக்கப்படும்.

ஏர்டெல் ரூ.199/- திருத்தியமைக்கப்பட்டது

ஏர்டெல் ரூ.199/- திருத்தியமைக்கப்பட்டது

இந்த திருத்தம் முதலில் ஏர்டெல் மூலம் நிகழ்த்தப்பட்டது. நாள் ஒன்றிற்கு 1 ஜிபி தரவு, ரோமிங் உட்பட வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவைகளை வழங்கும்படி அதன் ரூ.199/- திருத்தியமைக்கப்பட்டது.

ரூ.7.96/-க்கு 1ஜிபி

ரூ.7.96/-க்கு 1ஜிபி

பின்னர், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அதன் ரூ.199/- திட்டத்தை ஹேப்பி நியூ இயர் 2018 என்கிற பெயரின் கீழ் அறிமுகம் செய்தது. ஆக மொத்தம் இந்தியாவில் உள்ள டெலிகாம் ஆபரேட்டர்கள் ஒரு ஜிபி தரவிற்கான மதிப்பை ரூ.7.96/- என்ற விலைக்கு கொண்டுவந்துவிட்டன.

Best Mobiles in India

English summary
Idea Cellular Counters Airtel and Reliance Jio by Offering 28GB Data and Unlimited Voice Calls for 28 Days at Rs 199. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X